ரூ.5.33 கோடிக்கு விற்பனையான யூஸ்டு எஸ்யூவி... அப்படி என்னதான் இருங்குங்க!

Written By:

உலகின் அதிக விலை கொண்ட கான்கொஸ்ட் நைட் எக்ஸ்வி எஸ்யூவி குறித்து சில ஆண்டுகளுக்கு முன் டிரைவ்ஸ்பார்க் தளத்தில் செய்தி படித்திருப்பீர்கள். இந்த எஸ்யூவி ரூ.8 கோடி விலை கொண்டது. இந்த நிலையில், பயன்படுத்தப்பட்ட கான்கொஸ்ட் நைட் எக்ஸ்வி எஸ்யூவி ஒன்று ரூ.5.33 கோடிக்கு விற்பனையாகியிருக்கிறது. இந்த எஸ்யூவியின் படங்களை கீழே உள்ள கேலரியில் பார்த்துவிட்டு கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

கான்கொஸ்ட் எஸ்யூவி

 

இந்த எஸ்யூவியி ராணுவ வாகனம் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆம், இது ராணுவ கவச வாகனங்கள் போன்ற கட்டமைப்பை கொண்டது. எனவே, துப்பாக்கி சூடு, கண்ணி வெடி தாக்குதல்களில் கூட சேதமடையாமல், பயணிகளை காக்கும்.

கான்கொஸ்ட் எஸ்யூவி இன்டீரியர்

 

இந்த எஸ்யூவி 6 மீட்டர் நீளமும், 2.43 மீட்டர் அகலமும், 2.54 மீட்டர் உயரமும் கொண்டது. இதன் வீல் பேஸ் 3.68 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரம்மாண்ட எஸ்யூவியில் 6.8 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 326 பிஎச்பி பவரையும், 557 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

இந்த எஸ்யூவி 5.89 டன் எடை கொண்டது. இந்த எஸ்யூவியின் அடிப்பாகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விசேஷ பிளேட்டும், வலுவான கதவுகளும் எடை அதிகரிக்க காரணாகியிருக்கிறது. பார்ப்பதற்கு கவச வாகனம் போல இருந்தாலும், உள்புறத்தில் மிக சொகுசான வசதிகளையும், அம்சங்களையும் பெற்றிருக்கிறது.

உயர்வகை லெதர் இருக்கைகள், பொழுதுபோக்கு வசதிகள் இந்த எஸ்யூவியின் மதிப்பை வெகுவாக கூட்டியிருக்கிறது. இந்த நிலையில், இந்த பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த எஸ்யூவி ஆன்லைனில் ரூ.5.33 கோடி விலையில் விற்பனையாகி அசத்தியிருக்கிறது.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The Conquest Knight XV is an armoured SUV that you need when you want to make a Hummer driver feel totally insignificant and a used one just sold for $799,950 (Rs. 5.33 Crores).
Story first published: Thursday, May 19, 2016, 10:36 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

X