Just In
- 6 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 7 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 8 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
- 10 hrs ago
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
Don't Miss!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Movies
பிக் பாஸ் ஃபினாலேவில் முகேன் ராவ்.. லீக்கான கிராண்ட் ஃபினாலே புகைப்படம்.. ஷூட் ஓவரா?
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பூனையும், உரிமையாளரும் செய்த காரியம்... என்னனு தெரியுமா? மனதை ரிலாக்ஸ் ஆக்கும் வீடியோ வைரல்...
பூனையும், அதன் உரிமையாளரும் மின்சார பைக்கில் சவாரி சென்ற காணொளி வேகமாக பரவி வருகிறது.

நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளை வாகனங்களில் சவாரி அழைத்து செல்வதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர். இது மனதிற்கு இதம் தருவதாகவும் உள்ளது. எனவே நாய் மற்றும் பூனை போன்ற செல்ல பிராணிகள் வாகனங்களில் வரும் காணொளிகள் பலவும் யூ-டியூப், முக நூல் போன்ற சமூக வலை தளங்களில் பரவலாக கிடைக்கின்றன.

குறிப்பாக நாய்கள் இரு சக்கர வாகனங்களில், அதன் உரிமையாளர்களுடன் பயணிக்கும் காணொளிகள் பல முறை வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கூட இவ்வாறான நிகழ்வுகள் அதிகம் நடப்பதுண்டும். அதிலும் ஒரு சிலர், பாதுகாப்பிற்காக நாய்களுக்கும் தலை கவசம் அணிவித்து இரு சக்கர வாகனங்களில் அழைத்து செல்கின்றனர்.

இந்த வகையில் பூனை ஒன்று, மின்சார பைக்கில் அதன் உரிமையாளருடன் சவாரி செல்லும் ஒரு காணொளி தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது. பூனையை வளர்ப்பவர் மின்சார பைக்கில் ஏறுமாறு அதற்கு கட்டளையிடுவதுடன் இந்த காணொளி தொடங்குகிறது. இந்த கட்டளைக்கு ஏற்ப, பின் சக்கரம் வழியாக மின்சார பைக்கில் பூனை ஏறுகிறது.

அதன்பின் முன் பகுதிக்கு சென்று, அங்கு பொருத்தப்பட்டிருந்த கூடையில் அழகாக அமர்ந்து கொள்கிறது. இதன்பின் அந்த பூனையும், அதனை வளர்ப்பவரும் மின்சார பைக்கில் பல்வேறு இடங்களுக்கு சவாரி செல்கின்றனர். ப்ரொபசர் பவுன்சி என்ற ரெடிட் பயனரால், கடந்த செப்டம்பர் 22ம் தேதியன்று இந்த காணொளி பகிரப்பட்டுள்ளது.

மனதிற்கு இதம் தருவதை போல் இருப்பதால், இந்த காணொளி சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த காணொளியை காண இங்கே கிளிக் செய்யவும். பொதுவாக இரு சக்கர வாகனங்களில் செல்ல பிராணிகளை சவாரி அழைத்து செல்வது மனதிற்கு சுகமான அனுபவத்தை கொடுக்கும். எனவே பலர் இதனை விரும்பி செய்கின்றனர்.

ஆனால் சில சமயங்களில் செல்ல பிராணிகளுடைய செயல்பாடுகளை கணிக்க முடியாது. அவ்வாறான சில சூழல்களில் விபத்து நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே இரு சக்கர வாகனங்களில், செல்ல பிராணிகளை அழைத்து செல்லும்போது ஒரு சில விஷயங்களை மனதில் வைத்து கொள்வது நல்லது. பலர் பெட்ரோல் டேங்க் அல்லது பின் இருக்கையில் செல்ல பிராணிகளை அமர வைத்து கூட்டி செல்கின்றனர்.

இதை விட பெட் கேரியர்களை (Pet Carrier) வாங்கி இரு சக்கர வாகனத்தில் பொருத்தி கொள்வது நல்லது. வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் பெட் கேரியர்கள் சந்தையில் கிடைக்கின்றன. தொலை தூர பயணம் என்றால், கால்நடை மருத்துவமனையில் செல்ல பிராணியின் உடல் நிலையை பரிசோதித்து கொள்வதும் அவசியம்.

பயணம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளதா? என்பதை உறுதி செய்து கொண்டே பிறகு, செல்ல பிராணியுடன் நீங்கள் பயணத்தை தொடங்க வேண்டும். நீங்கள் உங்கள் செல்ல பிராணியுடன் முதல் முறையாக பைக் பயணம் செய்யப்போகிறீர்கள் என்றால், முதலில் குறுகிய தொலைவை மட்டும் தேர்ந்து எடுப்பதுதான் சிறந்தது.