விமானத்தில் இந்த விளக்கு இல்லையென்றால் கதையே காலி!! ஏர்போர்ட்ல இருந்து விமானத்தை எடுக்க கூட விடமாட்டாங்க...

விமானங்களில் எந்தெந்த மாதிரியான விளக்குகள் பொருத்தப்படுகின்றன? அவற்றின் பயன்கள் என்ன? என்பது போன்றதான கேள்விகளுக்கான பதில்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானத்தில் இந்த விளக்கு இல்லையென்றால் கதையே காலி!! ஏர்போர்ட்ல இருந்து விமானத்தை எடுக்க கூட விடமாட்டாங்க...

அதிகப்படியான உயரத்தில் பறப்பதாலோ என்னவோ விமானங்கள் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு அம்சங்களை கொண்டவைகளாக உள்ளன. அத்தகைய பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றுதான், மோதல்-தடுப்பு விளக்குகள். விமானங்களில் லேண்டிங்கிற்கு உதவும் விளக்குகளும் இருக்கும், அதேநேரம் இந்த மோதல்-தடுப்பு விளக்குகளும் இருக்கும்.

விமானத்தில் இந்த விளக்கு இல்லையென்றால் கதையே காலி!! ஏர்போர்ட்ல இருந்து விமானத்தை எடுக்க கூட விடமாட்டாங்க...

மோதல்-தடுப்பு விளக்குகள் அனைத்து விமானங்களிலும் கட்டாயம் இருக்க வேண்டும் என அனைத்து நாடுகளிலும் விமான நிர்வாகங்கள் விதிமுறைகளை நிர்ணயித்துள்ளன. பெயருக்கேற்ப, விமானங்கள் வேறொரு விமானத்துடனோ அல்லது வேறேதெனும் பொருட்கள் உடனோ மோதுவதை தவிர்க்க இந்த விளக்குகள் பொருத்தப்படுகின்றன.

விமானத்தில் இந்த விளக்கு இல்லையென்றால் கதையே காலி!! ஏர்போர்ட்ல இருந்து விமானத்தை எடுக்க கூட விடமாட்டாங்க...

விமானத்தின் வெளிப்பக்கத்தில் பொருத்தப்படும் இத்தகைய விளக்குகள் பெக்கான் & ஸ்ட்ரோப் என இரு வகைப்படுகின்றன. இவை இரண்டும் வெவ்வேறு விதமான பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. வானில் இரு அல்லது அதற்கு மேற்பட்ட விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொள்வது மிகவும் அரிதானதே. ஏனெனில் தற்போதைய சூழலில் விமானிகள் மிகவும் அதிநவீனமான வழிக்காட்டிகளை பயன்படுத்துகின்றனர்.

விமானத்தில் இந்த விளக்கு இல்லையென்றால் கதையே காலி!! ஏர்போர்ட்ல இருந்து விமானத்தை எடுக்க கூட விடமாட்டாங்க...

இவற்றில் ஏதேனும் ஒரு வழிக்காட்டி செயல்படாமல் போனால் மட்டுமே ஒரு விமானம் தவறுதலாக வேறொரு விமானத்தின் பாதையில் குறுக்கிட நேரும். அத்தகைய நேரத்திலேயே மோதல்-தடுப்பு விளக்குகள் மிகவும் உதவிக்கரமானவைகளாக இருக்கும். இந்த விளக்குகள் பெக்கான், ஸ்ட்ரோப் என இரு வகைப்படும் என முன்னரே கூறினோம் அல்லவா... இதில் பெக்கான் மோதல்-தடுப்பு விளக்குகள் எப்போதுமே சிவப்பு நிறத்திலேயே இருக்கும்.

விமானத்தில் இந்த விளக்கு இல்லையென்றால் கதையே காலி!! ஏர்போர்ட்ல இருந்து விமானத்தை எடுக்க கூட விடமாட்டாங்க...

இந்த விளக்குகள் விமானத்தின் மெயின் பாடியின் மேலேயும், கீழேயும் பொருத்தப்படுகின்றன. பெக்கான் விளக்குகள் முக்கியமாக விமான நிலைய அதிகாரிகளுக்கும், அவர்களது குழுவிற்காகவுமே பொருத்தப்படுகின்றன. அதாவது, விமானம் லேண்டிங் அல்லது டேக்-ஆஃப் ஆகுவதை சிவப்பு நிறத்தில் ஒளிரும் பெக்கான் விளக்குகளை வைத்தே விமான நிலைய குழுவினர் அறிகின்றனர்.

விமானத்தில் இந்த விளக்கு இல்லையென்றால் கதையே காலி!! ஏர்போர்ட்ல இருந்து விமானத்தை எடுக்க கூட விடமாட்டாங்க...

இதனாலேயே அருகில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் பெக்கான் விளக்குகள் பொருத்தப்படுகின்றன. ஸ்ட்ரோப் மோதல்-தடுப்பு விளக்குகளை பொறுத்தவரையில், இவை எப்போதுமே வெள்ளை நிறத்தில் ஒளிரக்கூடியவை. இந்த விளக்குகளை விமானத்தின் பக்கவாட்டில் காண முடியும். சில விமானங்களில் இவை பின்பக்கத்திலும் பொருத்தப்படுவது உண்டு.

விமானத்தில் இந்த விளக்கு இல்லையென்றால் கதையே காலி!! ஏர்போர்ட்ல இருந்து விமானத்தை எடுக்க கூட விடமாட்டாங்க...

விமானம் உயரம் போக, போக பெக்கான் விளக்குகளை பார்க்க முடியாது. ஆனால் ஸ்ட்ரோப் விளக்குகளை காண முடியும். குறிப்பாக, இரவு நேரங்களில் தரையில் இருந்து நாம் பார்க்கும்போது விமானங்களை அடையாளப்படுத்துவதே ஸ்ட்ரோப் விளக்குகள் தான். ஆனால் ஸ்ட்ரோப் மோதல்-தடுப்பு விளக்குகள் பயணத்தின்போது எல்லா நேரங்களிலும் பயன்படுத்தப்படுவதில்லை.

விமானத்தில் இந்த விளக்கு இல்லையென்றால் கதையே காலி!! ஏர்போர்ட்ல இருந்து விமானத்தை எடுக்க கூட விடமாட்டாங்க...

விமானியால் பாதையை தெளிவாக காண முடியும்பட்சத்தில், ஸ்ட்ரோப் விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டுவிடும். குறிப்பாக, பனி மிகுந்த காலங்களிலும், வெள்ளை நிற மேகங்கள் சூழ்ந்த பகுதிகளிலும் விமானம் செல்லும்போது பெரும்பாலான விமானிகள் ஸ்ட்ரோப் விளக்குகளை அனைத்துவிடுவர். ஏனெனில், பனி ஆனது ஈரப்பதமான மூலக்கூறுகளால் ஆனவை என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

விமானத்தில் இந்த விளக்கு இல்லையென்றால் கதையே காலி!! ஏர்போர்ட்ல இருந்து விமானத்தை எடுக்க கூட விடமாட்டாங்க...

அத்தகைய மூலக்கூறுகளில் ஸ்ட்ரோப் விளக்கின் ஒளி படும்போது அது எதிரொலிக்கப்படும். இது விமானியின் பார்வைதிறனை குறைக்கும். இதனாலேயே அதனை பெரும்பாலான விமானிகள் அணைத்து வைத்துவிடுகின்றனர். இருப்பினும் சில விமானிகள் பாதுகாப்பு கருதி ஸ்ட்ரோப் மோதல்-தடுப்பு விளக்குகளை அனைத்து நேரத்திலும் ஒளிர செய்வதும் உண்டு.

விமானத்தில் இந்த விளக்கு இல்லையென்றால் கதையே காலி!! ஏர்போர்ட்ல இருந்து விமானத்தை எடுக்க கூட விடமாட்டாங்க...

விமான நிலையத்தில் விமானம் நின்று கொண்டிருக்கும் போதும் ஸ்ட்ரோப் விளக்குகளை பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் விமானத்தின் என்ஜினை ஸ்டார்ட் செய்த பிறகு உடனடியாக ஸ்ட்ரோப் விளக்குகளை ஒளிர செய்து விமானி பரிசோதித்து பார்ப்பதை ஏர்போர்டில் இருக்கும்போது உங்களால் காண முடியும்.

விமானத்தில் இந்த விளக்கு இல்லையென்றால் கதையே காலி!! ஏர்போர்ட்ல இருந்து விமானத்தை எடுக்க கூட விடமாட்டாங்க...

அதேபோல் விமானத்தை ஆஃப் செய்வதற்கு முன்பு வரையிலும் இந்த விளக்குகளை ஒளிர செய்தவாறே விமானத்தை கொண்டு போய் நிறுத்துவர். விமானம் கண்டுப்பிடிக்கப்பட்ட ஆரம்ப காலக்கட்டத்தில் மோதல்-தடுப்பு விளக்குகள் தற்சமயம் வீட்டில் பயன்படுத்தப்படும் சாதாரண குண்டு பல்புகளாகவே இருந்தன. ஆனால் தற்போது ஒளியை உமிழக்கூடிய டையோடுகளாக இவை உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, October 31, 2022, 14:05 [IST]
English summary
Uses of airplane anti collision lights
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+