காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா?

ஹசார்டு லைட்களை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என காவல் துறையினர் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா?

தற்போது அனைத்து கார்களிலும் ஹசார்டு லைட்கள் (Hazard Lights) வழங்கப்படுகின்றன. எந்த நிறுவனத்தின் கார் என்றாலும், எவ்வளவு விலையாக இருந்தாலும் ஹசார்டு லைட்கள் தவறாமல் இடம்பெறுகின்றன. ஆனால் ஒரு சிலருக்கு ஹசார்டு லைட்களை எப்படி பயன்படுத்துவது? என்பது தெரிவதில்லை. தவறான பகுதிகளில் அவற்றை பயன்படுத்துகின்றனர்.

காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா?

ஆம், ஹசார்டு லைட்களுக்கு என குறிப்பிட்ட பயன்பாடுகள் உள்ளன. நம் இஷ்டத்திற்கு அவற்றை தவறாக பயன்படுத்த கூடாது. இந்த சூழலில், ஹசார்டு லைட்களை தவறான வழியில் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என மேகாலயா மாநிலம் ஷில்லாங் நகர காவல் துறையினர் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளனர்.

காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா?

ஹசார்டு லைட்கள் என்றால் என்ன?

இரண்டு திசைகளின் இன்டிகேட்டர்களும் ஒரே நேரத்தில் அணைந்து அணைந்து எரியும். இதுதான் ஹசார்டு லைட். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களிலும் தற்போது ஹசார்டு லைட்கள் வழங்கப்படுகின்றன. இதில், கார்கள் போன்ற இலகு ரக வாகனங்களும், லாரிகள் போன்ற கனரக வாகனங்களும் அடங்கும்.

காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா?

மோட்டார்சைக்கிள்களிலும் கூட தற்போது ஹசார்டு லைட்களை பார்க்க முடிகிறது. வாகனத்தின் டேஷ்போர்டில் வழங்கப்பட்டிருக்கும் ஒரு பட்டன் மூலமாக இதனை இயக்க முடியும். இந்த சூழலில் ஹசார்டு லைட்களை தவறாக பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு, மோட்டார் வாகன சட்டத்தின் செக்ஸன் 177ன் கீழ் அபராதம் விதிக்கப்படும் என ஷில்லாங் காவல் துறையினர் தற்போது அறிவித்துள்ளனர்.

காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா?

ஹசார்டு லைட்களை எப்போது பயன்படுத்த வேண்டும்?

ஹசார்டு லைட்கள் அவசர சமிக்கையாக பயன்படுத்தப்படுகின்றன. அதாவது உங்கள் வாகனத்தில் ஏதேனும் பிரச்னை என்றால், மற்ற வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்வதற்கு ஹசார்டு லைட்கள் பயன்படுகின்றன. உதாரணத்திற்கு விபத்து நேரும் சமயங்களில், வாகனத்தை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்த முடியவில்லை என்றால், மற்ற வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்வதற்கு ஹசார்டு லைட்களை பயன்படுத்தலாம்.

காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா?

அதேபோல் உங்கள் வாகனம் நடுரோட்டில் பழுதாகி அப்படியே நின்று விட்டாலும், வாகனம் நின்று கொண்டுள்ளது என்பதை மற்றவர்களுக்கு எச்சரிக்கை செய்வதற்கு நீங்கள் ஹசார்டு லைட்களை பயன்படுத்தலாம். இங்கே கூறப்பட்டுள்ளதை போன்ற அவசர கால சூழல்களில்தான் ஹசார்டு லைட்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா?

அவசர சூழல் இல்லாத சமயங்களில் ஹசார்டு லைட்களை பயன்படுத்தினால் என்ன நடக்கும்?

தேவையில்லாமல் நீங்கள் ஹசார்டு லைட்களை பயன்படுத்தினால், உங்களுக்கு பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு அது குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த குழப்பம் சாலை விபத்துகளுக்கு வழிவகுக்கலாம். எனவேதான் ஷில்லாங் நகர காவல் துறையினர் தற்போது அபராதம் என்ற இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா?

இந்தியாவில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதாலும், அலட்சியமாக நடந்து கொள்வதாலும் ஏராளமான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. ஒரு சிலருக்கு சாலையில் எப்படி ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும்? என்பது தெரிவதில்லை. இது விபத்துகளுக்கு காரணமாக இருப்பதால், விதிமுறை மீறல்களுக்கு எதிராக தற்போது நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Using Hazard Lights ‘Incorrectly’ On Your Vehicle? Get Ready To Pay Fine - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X