வீட்டுல இருக்குற சமையல் எண்ணெய்யை டீசலா யூஸ் பண்ணலாமா? இது செம ஐடியாவா இருக்குதே!

உங்கள் வீட்டில் சிக்கன், மீன், அப்பளம் போன்ற தின்பண்டங்களை பொறித்த எண்ணையை நீங்கள் உங்கள் காருக்கு எரிபொருளாக பயன்படுத்தலாம் என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா ஆனால் இது சாத்தியம் தான். இப்படியான ஒரு வழிமுறை இருக்கிறது இதைப்பற்றி தான் இங்கே நாம் காண போகிறோம்.

வீடுகளில் நாம் உணவுப் பொருட்களை பொறிப்பதற்காக சமையல் எண்ணெயை பயன்படுத்துவோம். இந்த பயன்படுத்திய சமையல் எண்ணெயை நாம் காரின் எரிபொருளாக பயன்படுத்த முடியும். இதற்கான ஒரு தொழில்நுட்பம் இருக்கிறது. பயோ டீசல் என்ற ஒரு எரிபொருள் இருக்கிறது. இது காய்கறிகளை மூலப்பொருட்களாக கொண்டே தயாரிக்கப்படுகிறது. இதை பயன்படுத்துவதன் மூலம் மாசு கட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த முறையில் தான் இந்த சமையல் எண்ணையும் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.

vegetable oil in diesel engine

ஆனால் டீசல் இன்ஜின் கார்களில் பயன்படுத்த முடியும். தற்போது பலருக்கு இப்படியாக சமையல் எண்ணெயை நாம் சுத்திகரிப்பு செய்து ஏதாவது அதில் கலந்து தான் பயன்படுத்த முடியுமா என்ற சந்தேகம் வரும். அப்படியெல்லாம் இல்லை நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் சமையல் எண்ணையை அப்படியே நேரடியாக டீசல் கார்களின் எரிபொருளாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.

ஆனால் இப்படியாக பயன்படுத்துவது என்பது சட்டப்படியான தவறான விஷயம் தான். நாம் சில நேரங்களில் டீசல் இன்ஜின்களில் சிலர் மண்ணெண்ணையை கலந்து பயன்படுத்துவதை பார்த்திருப்போம் அப்படித்தான் சமையல் எண்ணையையும் கலந்து பயன்படுத்தலாம் இவை சட்டரீதியாக தவறான விஷயம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் இன்ஜினின் ஆயுளை பாதிக்கும் விஷயமாகவும் இருக்கிறது.

vegetable oil in diesel engine

சரி இனி சமையல் எண்ணெயை எப்படி டீசல் இன்ஜினில் பயன்படுத்துகிறார்கள் என பார்க்கலாம். இதனால் இந்த எண்ணெய் நேரடியாக இன்ஜினில் டீசல் போல் கம்ப்பேஷன் செய்ய சென்றால் அங்கு எரியாத எண்ணைகள் எல்லாம் இன்ஜினின் சைடு பகுதியில் ஒட்டிக் கொள்ளு.ம் இதனால் இஞ்சின் கம்பஷன் சேம்பர் பழுதாக வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வும் இருக்கிறது.

வெறும் சமையல் எண்ணெயை பயன்படுத்தினால் மட்டும் எரிபொருளாக பயன்படுத்தினால் தான் இப்படி இன்ஜினிற்குள் எரியாத ஆயில்கள் படிமனாக வாய்ப்புள்ளது. அதை நாம் டீசல் உடன் கலந்து இன்ஜினிற்குள் செலுத்தும் போது அனைத்தும் எரிந்து விடும். இதன் மூலம் இந்த பிரச்சினையை தவிர்க்கலாம். ஆனால் இது ஒரு நிரந்தர தீர்வாக இருக்க முடியாது. இன்ஜின் ஆப் செய்த பின்பு இன்ஜினிற்குள் இருக்கும் சமையல் எண்ணெய் இன்ஜின் பகுதியில் உறைந்து போக வாய்ப்புள்ளது.

vegetable oil in diesel engine

இந்த பிரச்சனையை சரி செய்ய இன்னொரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். வாகனத்திற்கு உள்ளே டீசல் தனியாகவும் இப்படியான சமையல் எண்ணெய் தனியாகவும் தனித்தனியே வைத்து டேங்கில் வைத்துக் கொண்டு வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் போது வெறும் டீசலை மட்டும் வாகனத்தில் இன்ஜினிற்குள் செலுத்தி ஸ்டார்ட் செய்துவிட்டு இன்ஜின் ஓட துவங்கிய பின்பு சமையல் எண்ணெயை டீசல் உடன் கலந்து இன்ஜினிற்குள் செலுத்தலாம்.

இப்படியாக செலுத்தினால் உள்ளே இருக்கும் சமையல் எண்ணை எல்லாம் எரிந்து இன்ஜிற்கு நல்ல கம்பஷனை ஏற்படுத்திக் கொடுக்கும். அதே நேரம் இன்ஜினை ஆப் செய்யும் சில நிமிடங்களுக்கு முன்பு சமையல் எண்ணெய் டீசலில் கலப்பதை நாம் நிறுத்த வேண்டும். அப்படியாக நிறுத்தினால் அதன் பின்பு செல்லும் டீசல் மட்டும் எரிவதால் உள்ளே இருக்கும் அனைத்து சமையல் எண்ணெயும் எரிந்து உள்ளே இது போல சமையல் எண்ணெய் படியாமல் இருக்க வாய்ப்புள்ளது.

இது சாத்தியமான ஒரு விஷயம் தான், ஆனால் இதை பயன்படுத்துவது சட்டவிரோதமான விஷயம் என்பதால் பலர் இதை பயன்படுத்துவதில்லை. அதே நேரம் இதை நாம் வாகனங்களில் பயன்படுத்த வேண்டும் என்றால் இதற்குத் தகுந்தாற்போல் இன்ஜெக்டர் நாசிலை வடிவமைக்க வேண்டும். நாசிலில் சமையல் எண்ணெய் அதிகம் இருந்தால் அது பிற்காலத்தில் பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதே நேரம் சமையல் எண்ணெயை இன்ஜினில் பயன்படுத்துவதால் அதன் ஆயுள் குறையும்.

ஆனால் இது ஏன் இன்றும் நடைமுறையில் இல்லை என்றால் இன்று டீசல் விலையை விட சமையல் எண்ணெயின் விலை அதிகமாக இருக்கிறது. அல்லது கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நிலையில் இருக்கிறது. ஒரே அளவிலான விலை கொண்ட பொருளை பயன்படுத்துவதால் இன்ஜின் அதிகம் தேய்மானம் ஆகும் என்பதால் அதை பயன்படுத்தாமல் இருப்பதே சிறந்தது என்பதால் இதை யாரும் தங்கள் இன்ஜினில் பயன்படுத்துவதில்லை.

டிரைவ்ஸ்பார்த்து கருத்து: இப்படியாக நாம் வீட்டில் பயன்படுத்தும் சமையல் எண்ணெயை வைத்து டீசல் இன்ஜினை இயக்கலாம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இப்படியாக செய்வதால் அது இன்ஜினின் ஆயுளை வெகுவாக பாதிக்கும்.தற்போது உள்ள டீசல் இன்ஜினில் இதை நேரடியாக பயன்படுத்துவது இன்ஜினிற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும். இதனால் நீங்கள் இதை முயற்சி செய்து பார்க்காதீர்கள். இது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம் என்பதை உங்களுக்கு தெரிவிக்க தான் பதிவு செய்துள்ளோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 28, 2023, 17:39 [IST]
English summary
Using vegetable oil as car fuel is possible know full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X