உபி-யை பாத்து கத்துக்கோங்க என சொல்லும் அளவிற்கு தரமான நடவடிக்கையை எடுத்த யோகி! மக்கள் எல்லாரும் கொண்டாடுறாங்க!

காற்றை மாசுப்படுத்துவதில் வாகனங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இதனால்தான் அவற்றிற்கு எதிரான முயற்சிகள் இந்தியாவில் மிகவும் தீவிரமடைந்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து முழுமையாக ஒழித்துக் கட்டுவதற்கான முயற்சிகள் மிக பலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது இந்தியர்களுக்கு ஒரு பக்கம் வேதனை அளிக்கக் கூடியதாக இருந்தாலும், மற்றொரு பக்கம் அரசின் இந்த செயல்களால் நன்மை ஏற்படுத்தக் கூடியவையாகவும் இருக்கின்றது. மிக முக்கியமான மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் பலர் நன்மை அடைந்த வண்ணம் இருக்கின்றது.

எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை நோக்கி மக்களை ஈர்க்கும் பொருட்டு அரசு, மானியம் மற்றும் வரி சலுகை போன்றவற்றை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இதனால், மின்சார வாகனங்களின் விலை தற்போது பலமடங்குக் குறைந்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கம் உபி-யில், ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சம் கொண்ட கார்களுக்கான சாலை வரியை 100 சதவீதம் ரத்து செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Road tax waiver for hybrid cars

காற்று மாசை குறைவாக வெளிப்படுத்துவதிலும், சுற்று சுழலுக்கு நண்பனாக செயல்படுவதிலும் இந்த வகை வாகனங்கள் மிக சிறந்தவையாக கருதப்படுகின்றன. இதன் விளைவாகவே ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு உபி அரசாங்கம் வரி சலுகையை அறிவித்திருக்கின்றது. ஸ்ட்ராங் ஹைபிரிட் கார்களுக்கான சாலை வரியை தள்ளுபடி செய்வதன் மூலம் அந்த வகை வாகனங்களின் விலை மிகப் பெரிய அளவில் குறையத் தொடங்கி இருக்கின்றது.

இந்த நடவடிக்கையினால் மாநிலத்தில் ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சம் கொண்ட கார்களின் விலை பலமடங்கு குறைவதோடு அவற்றின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரிக்க இருக்கின்றது. டொயோட்டா (Toyota) மற்றும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் தயாரிப்புகள் பலவற்றின் விலை மிகப் பெரிய அளவில் குறைய இருக்கின்றது.

ஹைரைடர் (Hyryder) மற்றும் ஹைகிராஸ் (Hycross), கிராண்ட் விட்டாரா (Grand Vitara) மற்றும் இன்விக்டோ (Invicto) உள்ளிட்ட கார் மாடல்களிலேயே நிறுவனங்கள் ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சத்துடன் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் ஆன்-ரோடு விலையில் தோராயமாக ரூ.4.4 லட்சம் வரை குறையலாம் என கணிக்கப்பட்டு உள்ளது.

இந்த அளவிற்கு விலை குறையும் எனில் ஹைபிரிட் அம்சம் கொண்ட கார் மாடல்கள் வழக்கமான பெட்ரோல் மாடல்களுக்கு இணையான விலைக் கொண்டவையாக உபியில் மாற நேரிடும். இதன் விளைவாக வழக்கமான பெட்ரோல் கார் மாடல்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட கார் மாடல்கள் வரும் நாட்களில் அம்மாநிலத்தில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வழக்கமான பெட்ரோல் மாடல்களுடன் ஒப்பிடும்கையில் அதிகம் லாபம் தரக் கூடிய வாகனங்களாக ஹைப்ரிட் கார்கள் இருக்கின்றன. அவை, மிகப் பெரிய அளவில் எரிபொருள் சிக்கனத்தை செய்தே, அதன் உரிமையாளர்களுக்கு லாபத்தை ஈட்டிக் கொடுக்கின்றன. வழக்கமான பெட்ரோல் கார்கள் லிட்டர் ஒன்றிற்கு 16கிமீ முதல் 18கிமீ வரையில் மைலேஜ் தரும் எனில், இந்த ஹைபிரிட் அம்சம் கொண்ட கார்கள் ஒரு லிட்டருக்கே 25கிமீ முதல் 28கிமீ வரையில் மைலேஜ் தரும்.

உதராணமாக டொயோட்டா ஹைரைடர் கார் லிட்டர் ஒன்றிற்கே 29 கிமீ வரையில் மைலேஜை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய பண்பைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான் பலர் தற்போது ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட கார்களை அதிகளவில் வாங்கத் தொடங்கி இருக்கின்றனர். இந்த நிலையிலேயே அதன் விற்பனையை மேலும் ஊக்குவிக்கும் பொருட்டு உபி மாநில அரசு அவற்றிற்கான சாலையை ரத்து செய்திருக்கின்றது.

தற்போது, ​​இந்த வரி சலுகை உத்தரபிரதேசத்தில் வாசிகளுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. வேற்று மாநில வாசிகளுக்கு இந்த சலுகைக் கிடைக்காது. வரி விலக்கு பெற, உ.பி.யி முகவரிச் சான்று தேவை. ஹைபிரிட் கார்களுக்கான வரியை 45 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று நிதின் கட்கரி வாதிட்டு வருகிறார். விரைவில் அவரின் இந்த முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், உத்தரபிரதேசம் அரசாங்கமோ முழுமையாக சாலை வரியை குறைத்துள்ளது. உத்தரபிரதேசத்தின் இந்த நடவடிக்கையை மற்ற மாநிலங்களும் கையில் எடுக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக தற்போது அமைந்திருக்கின்றது. ஆனால், எந்தெந்த மாநில அரசு இந்த திட்டத்தைக் கையில் எடுக்கும் என தெரியவில்லை. அதேவேளையில், மற்ற மாநிலங்கள் இதைப் பின்பற்றுமானால், இந்தியா முழுவதும் ஹைபிரிட் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க நேரிடும். மேலும், மாசு உமிழ்வையும் கணிசமாகக் குறைக்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உபி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் பலர் பலனடைய இருக்கின்றனர். ஆனால், பெரும்பாலும் பணக்காரர்களே இதன் வாயிலாக பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. பெரும்பாலும் ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சம் கொண்ட வாகனங்கள் மிக மிக அதிக விலையைக் கொண்டவையாக இருக்கின்றன.

இதன் விலையைக் குறைக்கும் விதமான முயற்சிகளே தற்போது மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது என்றாலும், அது ஏழைகளுக்கு எட்டக் கனியாகவே இப்போதும் இருக்கின்றன. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் அடித்தட்டு மக்கள் வாங்கும் கார்கள் எதிலும் ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சம் வழங்கப்படவில்லை. இதனால், தான் பணக்காரர்கள் மட்டுமே இதன் வாயிலாக பலனடைய இருக்கின்றனர் என கூறப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 10, 2024, 5:00 [IST]
English summary
Uttar pradesh announces road tax waiver for strong hybrid cars
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+