ஏசி உள்பட அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்... யோகியின் அதிரடிக்கு காரணம் இதுதான்

உத்தர பிரதேச மாநில அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்பட்டு வருகிறது.

ஏசி உள்பட அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்... யோகியின் அதிரடிக்கு காரணம் இதுதான்

ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது முதல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டாலும், கொரோனா வைரஸின் தீவிரம் காரணமாக ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆனால் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் அரசு பேருந்துகள் தற்போது இயங்கி கொண்டுதான் உள்ளன.

ஏசி உள்பட அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்... யோகியின் அதிரடிக்கு காரணம் இதுதான்

எனினும் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. பேருந்துகளில் பயணம் செய்தால், கொரோனா தொற்று ஏற்படலாம் என்பதால், சொந்த கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்வதையே பொதுமக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். இதனால் எதிர்காலத்தில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை உயரும் என கூறப்படுகிறது.

ஏசி உள்பட அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்... யோகியின் அதிரடிக்கு காரணம் இதுதான்

மறுபக்கம் பேருந்து சேவைகள் மூலம் அரசுக்கு கிடைத்து வந்த வருவாய் கணிசமாக குறைந்துள்ளது. இந்த சூழலில், பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற அதிரடி அறிவிப்பை உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ளார். வருவாய் குறைந்ததால் அவர் இப்படி ஒரு அசத்தலான அறிவிப்பை வெளியிடவில்லை.

ஏசி உள்பட அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்... யோகியின் அதிரடிக்கு காரணம் இதுதான்

ரக்ஸா பந்தன் பண்டிகைதான் அதற்கு காரணம். நாடு முழுவதும் ரக்ஸா பந்தன் பண்டிகை இன்று (ஆகஸ்ட் 3) கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு படி மேலே போய் அரசு பேருந்துகளில் இலவச பயணம் என அறிவித்துள்ளார்.

ஏசி உள்பட அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்... யோகியின் அதிரடிக்கு காரணம் இதுதான்

முதல்வரின் உத்தரவையடுத்து உத்தர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகம் (Uttar Pradesh State Road Transport Corporation - UPSRTC), தனது அனைத்து வகையான பேருந்துகளிலும் இன்று ஒரு நாள் பெண்களுக்கு இலவச பயணத்தை வழங்கி வருகிறது. ஆகஸ்ட் 2ம் தேதி நள்ளிரவு முதல் ஆகஸ்ட் 3ம் தேதி நள்ளிரவு வரை அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏசி உள்பட அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்... யோகியின் அதிரடிக்கு காரணம் இதுதான்

எனினும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பயணிகளும் முக கவசம் அணிவது கட்டாயம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உத்தர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் சேவை மேலாளர் (ஆக்ரா பிராந்தியம்) எஸ்பி சிங் கூறுகையில், ''அரசு அறிவித்த நேரத்தில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் அனைத்து பெண்களும் இலவச பயணத்தை பெறுவார்கள்.

ஏசி உள்பட அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்... யோகியின் அதிரடிக்கு காரணம் இதுதான்

ஏசி, வால்வோ மற்றும் சாதாரண பேருந்துகள் என அனைத்து வகையான பேருந்துகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும்'' என்றார். இதுகுறித்து அம்மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் மேலும் கூறுகையில், ''பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி வழங்கப்படாது. பேருந்துகளை கிருமி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

ஏசி உள்பட அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்... யோகியின் அதிரடிக்கு காரணம் இதுதான்

மேலும் பயணிகள் அனைவரும் முக கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது'' என்றனர். பெண்களுக்கு இலவச பயணத்தை வழங்கி வருவதுடன் மட்டுமல்லாது, ரக்ஸா பந்தன் பண்டிகையின் போது, 11 நகரங்களில் இருந்து கூடுதல் பேருந்துகளையும் உத்தர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகம் இயக்கி கொண்டுள்ளது.

ஏசி உள்பட அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்... யோகியின் அதிரடிக்கு காரணம் இதுதான்

இதன்படி டெல்லி, மீரட், சஹ்ரான்பூர், பரேலி, மொரதாபாத், வாரணாசி, பிரயக்ராஜ், கான்பூர், கோரக்பூர், லக்னோ மற்றும் ஆக்ரா ஆகிய 11 நகரங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சூழலில், உத்தர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளில், கடந்த ஜூலை 31ம் தேதியன்று சுமார் 10 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர்.

ஏசி உள்பட அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்... யோகியின் அதிரடிக்கு காரணம் இதுதான்

இதன் மூலம் 10 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் கிடைத்துள்ளது. அன்லாக் 1 செயல்முறைகளுக்கு பிறகு, வணிக ரீதியிலான நடவடிக்கைகளில், உத்தர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகம் இலக்கை எட்டியிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. பேருந்துகளில் பயணம் செய்வதற்கு பொதுமக்கள் அச்சப்பட்டு வரும் நிலையிலும், இவ்வளவு வருவாய் கிடைத்துள்ளது.

ஏசி உள்பட அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்... யோகியின் அதிரடிக்கு காரணம் இதுதான்

பேருந்துகள் மட்டுமல்லாது ஆட்டோ, டாக்ஸி என அனைத்து வகையான பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதற்கும் மக்கள் அச்சப்படுகின்றனர். பொது போக்குவரத்து வாகனங்களில் ஆபத்து அதிகம் என்பதையும் மறுக்க முடியாது. எனினும் வருவாய் பாதிக்கப்படாது என்பதற்காக, ஆட்டோ மற்றும் டாக்ஸிகளில் பாதுகாப்பு திரைகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

ஏசி உள்பட அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்... யோகியின் அதிரடிக்கு காரணம் இதுதான்

அதாவது பயணிகளுக்கும், டிரைவர்களுக்கும் இடையே பிளாஸ்டிக் திரை பொருத்தப்படுகிறது. வாகனத்தின் உட்புறத்தை, இந்த திரைகள் தனித்தனி பிரிவுகளாக பிரித்து விடும் என்பதால், சமூக இடைவெளி உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஓரளவிற்கு குறையும்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Uttar Pradesh: Free Ride For Women In Government Buses For Raksha Bandhan. Read in Tamil
Story first published: Monday, August 3, 2020, 19:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X