7 நாள் சைக்கிள் பயணம்... சொந்த ஊர் வந்து இளைஞர் செய்த காரியம்... இந்தியாவையே கலங்க வைத்த சம்பவம்...

7 நாள் சைக்கிள் பயணத்திற்கு பின் சொந்த ஊர் வந்து தொழிலாளி செய்த காரியம் நாட்டையே உலுக்கியுள்ளது.

7 நாள் சைக்கிள் பயணம்... சொந்த ஊர் வந்து இளைஞர் செய்த காரியம்... நாட்டையே உலுக்கும் சம்பவம்...

ஏழை கூலி தொழிலாளர்களின் வாழ்க்கையில், கொரோனா வைரஸ் (கோவிட்-19) கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சொந்த ஊரில் வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால், வெளிமாநிலங்களுக்கு வேலை தேடி சென்றவர்களின் வாழ்க்கையை கொரோனா வைரஸ் புரட்டி போட்டுள்ளது. வேறு வழியில்லாமல் தங்களின் சொந்த ஊர்களுக்கு அவர்கள் தற்போது மீண்டும் திரும்பி கொண்டுள்ளனர்.

7 நாள் சைக்கிள் பயணம்... சொந்த ஊர் வந்து இளைஞர் செய்த காரியம்... நாட்டையே உலுக்கும் சம்பவம்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது வரை ஊரடங்கு நீடித்து வருவதால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். எனவே உணவு, இருப்பிடம் கிடைக்காத தொழிலாளர்கள், கூட்டம் கூட்டமாக தங்களின் சொந்த ஊர்களை நோக்கி தற்போது படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

MOST READ: பருவமழை வரப்போகுது... உங்க வண்டிக்கு எக்ஸ்ட்ரா கவனிப்பு ரொம்ப முக்கியம்... என்ன பண்ணணும்னு தெரியுமா?

7 நாள் சைக்கிள் பயணம்... சொந்த ஊர் வந்து இளைஞர் செய்த காரியம்... நாட்டையே உலுக்கும் சம்பவம்...

ஆனால் ஊரடங்கு அமலுக்கு வந்த மார்ச் 24ம் தேதி முதலே, இந்தியாவில் பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டு விட்டன. பஸ், ரயில், விமான சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு விட்ட நிலையில், ஆட்டோ மற்றும் டாக்ஸிகளை இயக்குவதற்கும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.

7 நாள் சைக்கிள் பயணம்... சொந்த ஊர் வந்து இளைஞர் செய்த காரியம்... நாட்டையே உலுக்கும் சம்பவம்...

அத்துடன் கார், டூவீலர் உள்ளிட்ட தனியார் வாகனங்களை தேவையில்லாமல் இயக்குவதற்கும் காவல் துறை தடை விதித்தது. இந்த உத்தரவை மீறி, உரிய காரணம் இல்லாமல் வெளியே வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களுக்கும் அபராதமும் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை காவல் துறை பறிமுதல் செய்துள்ளது.

7 நாள் சைக்கிள் பயணம்... சொந்த ஊர் வந்து இளைஞர் செய்த காரியம்... நாட்டையே உலுக்கும் சம்பவம்...

தமிழகத்தின் பாணியில் இந்தியா முழுவதும் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக, பல லட்சக்கணக்கான வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுபோன்ற காரணங்களால் எப்போதுமே பரபரப்பாக இயங்கும் இந்திய சாலைகள், வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி போனது. ஆனால் மறுபக்கம் வெளிமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி கொண்டிருந்தனர்.

7 நாள் சைக்கிள் பயணம்... சொந்த ஊர் வந்து இளைஞர் செய்த காரியம்... நாட்டையே உலுக்கும் சம்பவம்...

பொது போக்குவரத்து இயங்காத காரணத்தால், மாநிலம் விட்டு மாநிலம், ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவை ஒரு சிலர் நடந்தே கடந்தனர். இன்னும் சிலரோ, சுட்டெரிக்கும் கோடை வெயிலில், சைக்கிள் மூலமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். வேலையை பறிகொடுத்த சூழலில், கையிருப்பில் வைத்திருந்த சிறு தொகையையும் பலர் சைக்கிள் வாங்க செலவழிக்க நேரிட்டது.

7 நாள் சைக்கிள் பயணம்... சொந்த ஊர் வந்து இளைஞர் செய்த காரியம்... நாட்டையே உலுக்கும் சம்பவம்...

இந்த வகையில் சைக்கிள் மூலமாக சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர் ஒருவர் எடுத்த முடிவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் உள்ள முசிவான் எனும் கிராமத்தை சேர்ந்தவர் சுனில். 19 வயது மட்டுமே நிரம்பிய இவர், கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட மஹாராஷ்டிர மாநிலத்தில் வேலை செய்து வந்தார்.

7 நாள் சைக்கிள் பயணம்... சொந்த ஊர் வந்து இளைஞர் செய்த காரியம்... நாட்டையே உலுக்கும் சம்பவம்...

ஆனால் ஊரடங்கு காரணமாக அவர் வேலையை இழந்தார். எனவே சொந்த ஊர் திரும்புவதே சரி என அவர் முடிவு செய்தார். எனினும் பஸ், ரயில் வசதிகள் இல்லாத காரணத்தால், சைக்கிள் மூலமாக அவர் சொந்த ஊருக்கு வந்தார். இதற்கு சுமார் ஏழு நாட்கள் ஆனது. 7 நாட்கள் சைக்கிள் மிதித்து சொந்த ஊருக்கு வந்த நிலையில், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.

7 நாள் சைக்கிள் பயணம்... சொந்த ஊர் வந்து இளைஞர் செய்த காரியம்... நாட்டையே உலுக்கும் சம்பவம்...

அவர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்யும் தருவாயில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், அவர் நேற்று (மே 22) தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பதற்கான காரணம் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை.

7 நாள் சைக்கிள் பயணம்... சொந்த ஊர் வந்து இளைஞர் செய்த காரியம்... நாட்டையே உலுக்கும் சம்பவம்...

போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுகுறித்து சுனிலின் குடும்பத்தினர் கூறுகையில், ''சுனிலின் தந்தை இன்னமும் குஜராத்தில் சிக்கி கொண்டுள்ளார். சுனில் வீட்டிற்கு வந்தபோது அவரது பாக்கெட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை. ஊரடங்கிற்கு பிறகு அவர் வேலையை இழந்து விட்டார்'' என்றனர். வேலையை இழந்த காரணத்தாலும், வறுமை காரணமாகவும் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது.

7 நாள் சைக்கிள் பயணம்... சொந்த ஊர் வந்து இளைஞர் செய்த காரியம்... நாட்டையே உலுக்கும் சம்பவம்...

எனினும் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. கோவிட்-19 வைரஸ் சாதாரண ஏழை தொழிலாளர்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டுள்ளதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம். சுனிலை போல் இன்னும் பல தொழிலாளர்கள், வேலையை இழந்து சைக்கிளில் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

7 நாள் சைக்கிள் பயணம்... சொந்த ஊர் வந்து இளைஞர் செய்த காரியம்... நாட்டையே உலுக்கும் சம்பவம்...

ஆனால் ஊரடங்கில் தற்போது படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே டெல்லி உள்பட நாட்டின் ஒரு சில பகுதிகளில் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆட்டோ மற்றும் டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களையும் மீண்டும் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரயில் மற்றும் விமானங்களை மீண்டும் இயக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

7 நாள் சைக்கிள் பயணம்... சொந்த ஊர் வந்து இளைஞர் செய்த காரியம்... நாட்டையே உலுக்கும் சம்பவம்...

இருந்தாலும் பொது போக்குவரத்து இன்னும் முழுமையாக சீராகவில்லை. இதன் காரணமாக நடை பயணமும், சைக்கிளும்தான் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப ஒரே வழியாக உள்ளது. அப்படி கஷ்டப்பட்டு பயணம் செய்து சொந்த ஊர் சென்று சேர்ந்தும், சுனில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Saturday, May 23, 2020, 22:30 [IST]
English summary
Uttar Pradesh: Maharashtra Migrant Worker Cycles Home For 7 Days, Commits Suicide In Quarantine. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+