தொழிலதிபரின் மனைவியின் வாழ்வில் இது எல்லாம் சாதாரணம்! காரின் விலை வெறும் ரூ.1.5 கோடி!!

இது தொழிலதிபர்கள் புதிய வாகனம் வாங்கும் வாரமா என தெரியவில்லை. ஏனெனில், இந்த வாரத்தில் மட்டும் நிறைய தொழிலதிபர்களும், செல்வந்தர்களும் புதிய கார் & பைக்கை வாங்குவதை பார்த்துள்ளோம். பொதுவாகவே, பணக்காரர்கள் அவ்வப்போது புதியதாக சொகுசு வாகனங்களை வாங்குவார்கள் தான்; இருந்தாலும், இந்த வாரத்தில் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக, இந்தியாவின் முன்னணி மின்சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான வி-கார்ட் (V-Guard)-இன் நிர்வாக இயக்குனர் இன்னொரு விலையுயர்ந்த காரை மனைவி உடன் சேர்ந்து டெலிவிரி பெற்றுள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம், வாங்க.

ஒரு காலத்தில் எந்தவொரு மின்சாதனத்தை பயன்படுத்துவதாக இருந்தாலும், ஸ்டெபிளைசர் (Stabilizer) பயன்படுத்த வேண்டும் என்கிற நிலைமை இருந்தது. ஸ்டெபிளைசரின் முக்கிய பணி என்னவென்றால், மாறுப்பட்டு வரும் மின்னழுத்தத்தை ஒரே சீராக வழங்கி மின்சாதனங்களை பாதுகாப்பதாகும். ஆனால், இன்றைய கால மாடர்ன் மின்சாதனங்கள் பெரும்பாலானவை எந்தவொரு மின்னழுத்தத்தையும் எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்படுகின்றன.

reena philip buys porsche macan

இதனால், ஸ்டெபிளைசரின் தேவை குறைந்துவிட்டது என்றாலும், அடிக்கடி மின்சார பிரச்சனைகள் ஏற்படும் பகுதிகளுக்கு இப்போதும் ஸ்டெபிளைசரின் தேவை உள்ளது. ஸ்டெபிளைசர் என்றவுடன் நமக்கு முதலாவதாக ஞாபகத்திற்கு வருவது வி-கார்ட் தான். கேரளாவின் கொச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் தற்போது பல்வேறு விதமான மின்சாதனங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிட்டாலும், ஸ்டெபிளைசர் தான் இந்த நிறுவனத்தின் அடையாளம் என சொல்ல வேண்டும்.

இந்த கேரள நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக இயக்குனராக இருப்பவர், மிதுன் கே சிட்டிலப்பில்லி (Mithun K Chittilappilly). ஆஸ்திரேலியாவில் நிர்வாக படிப்பில் முதுகலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு, பல்வேறு சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவமிக்கவரான இவர், தற்சமயம் வி-கார்ட் நிறுவனத்தை முதன்மை இயக்குனராக நிர்வகித்து வருகிறார். இவரது மனைவி ரீனா பிலிப். இவர்கள் இருவரும் சேர்ந்து சமீப வாரங்களில் இரு சொகுசு கார்களை டெலிவிரி பெற்றுள்ளனர்.

reena philip buys porsche macan

இதில், லெக்ஸஸ் எல்.எம்350எச் என்கிற பிரம்மாண்டமான லக்சரி எம்பிவி காரை இந்த தம்பதி டெலிவிரி பெற்றதை பற்றி ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். இந்த வரிசையில் தற்போது இந்த தம்பதி டெலிவிரி பெற்றிருப்பது, போர்ஷே மக்கன் (Porsche Macan) என்கிற ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். இந்த போர்ஷே காரை ரீனா பிலிப்பிற்காக வாங்கியுள்ளனர்.

காருக்கு மேட்சிங்கான உடையில் தம்பதியர் இருவரும் காரை கொச்சியில் உள்ள ஷோரூமில் இருந்து டெலிவிரி பெறும் வீடியோவை சம்பந்தப்பட்ட போர்ஷே கார் ஷோரூம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த இன்ஸ்டாகிராம் பதிவில், மிதுன் கே சிட்டிலாப்பில்லியின் பெயர் இல்லை; இவரது மனைவியின் பெயர்தான் உள்ளது. இதில் இருந்து ரீனாவின் பெயரில்தான் இந்த காரை வாங்கியுள்ளனர் என்பது உறுதியாகிறது.

reena philip buys porsche macan

போர்ஷே மக்கன், உலகளவில் சிறப்பான மற்றும் வேகமான ஸ்போர்ட்ஸ் எஸ்யூவி கார் ஆகும். இத்தகைய காரை இந்த தம்பதி கவர்ச்சிக்கரமான இளம் நீல நிறத்தில் வாங்கியுள்ளனர். பேஸ், எஸ் மற்றும் ஜிடிஎஸ் என 3 விதமான வேரியண்ட்களில் இந்த போர்ஷே கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.96 லட்சத்தில் இருந்து ரூ.1.54 கோடி வரையில் உள்ளன.

இதில் எந்த வேரியண்ட்டை ரீனா பிலிப் தேர்வு செய்துள்ளார் என்பது தெரியவில்லை. கடைசியாக, 2021ஆம் ஆண்டு நவம்பரில் இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட போர்ஷே மக்கன் காரில் 2 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 2.9 லிட்டர் ட்வின்-டர்போ வி6 பெட்ரோல் என்பன அவை ஆகும். இவை இரண்டுடனும் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையை சொல்ல வேண்டுமென்றால், மிதுன் கே சிட்டிலப்பில்லிக்கு முன்னதாகவே அவரது மனைவி ரீனா பிலிப் இந்த போர்ஷே மக்கன் காரை வாங்கிவிட்டார். அதுகுறித்த வீடியோ தற்போதுதான் நமக்கு கிடைக்க பெற்றுள்ளது. போர்ஷே மக்கன் காருக்கு இந்தியாவில் நிறைய கஸ்டமர்கள் உள்ளனர் என்றாலும், இத்தகைய இளம் நீல நிறத்தில் இந்த காரை நம் நாட்டில் யாரும் இதற்குமுன் வாங்கியிருக்க மாட்டார்கள் என நினைக்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 23, 2024, 8:00 [IST]
English summary
V guard director mithun k chittilapillys wife reena philip takes delivery of porsche macan car
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X