டெல்லியில் வடா பாவ் விற்கும் பெண்.. இந்த காரையா ஓட்டிட்டு வந்தாங்க! மணிக்கு 299 கிமீ வேகத்தில் போகும்!
தலைநகர் டெல்லியைச் சேர்ந்தவர் சந்திரிகா தீக்சித். சமூக வலைதளங்களில் 'வடா பாவ் பெண்' எனும் பெயரில் இவர் அறியப்படுகின்றார். இவர் ஓர் வடா பாவ் விற்பனை கடையை நடத்தி வருகின்றார். இதன் காரணத்தினாலேயே வடா பாவ் பெண் என்கிற பெயர் அவருடைய பெயருடன் ஒட்டிக் கொண்டது.
பலர் இவரை சந்திரிகா தீக்சித் என்பதற்கு பதிலாக வடா பாவ் பெண் என்றே அழைத்துக் கொண்டிருக்கின்றனர். நாள் ஒன்றிற்கு நூற்றுக் கணக்கான வடா பாவ்-களை அவர் விற்றுக் கொண்டிருக்கின்றார். இவரின் வடா பாவ்-க்கு பலர் மிக பெரிய ஃபேன்களாக இருக்கின்றனர். இதனாலேயே அவருடைய கடைக்கு முன்னர் கூட்டம் பிச்சிக்கும்.

இந்த மாதிரியான சூழலிலேயே சமீபத்தில் பந்தாரா எனும் சிறிய உணவு கொண்டாட்டத்தை தன்னுடைய உணவு ஸ்டால் வாயிலாகக் கொண்டாடினார். இது பெரும் சர்ச்சையில் அவரை சிக்க வைத்தது. உணவு பிரியர்கள் பெரும் திரளாக அங்கு கூடியதன் விளைவாக சாலை நெரிசல் ஏற்பட்டது.
இதன் காரணத்தினால் அங்கு வந்த போலீஸார் கூட்டத்தைக் களைத்தனர். இந்த சம்பவத்தால் சந்திரிகா தீக்சித் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தார். இந்த நிலையிலேயே தற்போது அவர் மீண்டும் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்துள்ளார். இம்முறை வாகன உலகத்திலேயே அவரின் பெயர் மிகப் பெரிய அளவில் இடம் பிடித்துள்ளது.

காரணம், ஃபோர்டு மஸ்டாங் (Ford Mustang) காரில் வந்து அவர் வடா பாவை விற்றிருக்கின்றார். இது ஓர் புரோமோஷன் செயல் ஆகும். ஆமாங்க, இந்த காரில் வடா பாவ் உடன் வந்திறங்கிய அவர் விரைவில் ஓர் சூப்பரான அறிவிப்பு காத்திருக்கின்றது என தெரிவித்தார். இந்த காரில் வந்து, இப்படி ஒரு விளம்பரமா என்றே பலர் அவரின் வீடியோவைப் பார்த்து புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில் குறிப்பிட்ட நபர்களிடத்தில் மட்டுமே ஃபோர்டு மஸ்டாங் கார் பயன்பாட்டில் இருக்கின்றது. அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். மேலும் பலரின் கனவு வாகனமாகவும் இந்த கார் மாடல் காட்சியளிக்கின்றது. இந்த காரின் உற்பத்தி பணிகள் இந்தியாவில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய கார் மாடலிலேயே வடா பாவ் உடன் வந்த வடா பாவ் பெண் மிகப் பெரிய அறிவிப்பு காத்திருக்கின்றது என கூறி ஹைப்பை ஏற்படுத்தி இருக்கின்றார். ஃபோர்டு மஸ்டாங் காரின் இந்திய மதிப்பு ரூ. 70 லட்சத்திற்கும் அதிகமாகும். ஆனால், இந்த கார் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
அதிக கட்டுமஸ்தான உடல் அமைப்பைக் கொண்ட கார் மாடலே மஸ்டாங் ஆகும். இதன் பெயருக்கு ஏற்ப அதிக திறனை வெளியேற்றும் வசதிக் கொண்ட மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 299 கிமீ ஆகும். ஃபோர்டு மஸ்டாங் காரில் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது அதிகபட்சமாக 363 பிஎச்பி மற்றும் 515 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜினில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அதிக வேகத்தில் செல்லவும், ட்ரிஃப்ட் செய்யவும் உகந்த கார் மாடல் ஆகும். உலக அளவில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களில் ஒன்றாகவும் ஃபோர்டு மஸ்டாங் காட்சியளிக்கின்றது. இதையே ஓர் புரமோஷனுக்காக வடா பாவ் பெண் பயன்படுத்தி இருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரை வடா பாவ் பெண் வாங்கிவிட்டாரா என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. கடந்த காலங்களில் தன்னுடைய புதிய கொள்முதல்களை அவர் இவ்வாறு சமூக வலைதளங்கள் வாயிலாக அறிவித்து இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே விரைவில் இந்த கார் தனக்கு சொந்தமானதா இல்லையா என்பது பற்றி அவர் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









