டாடா சியரா கார் பரிசு... ஆனா ஓட்ட முடியாது! வைபவ் சூர்யவன்ஷிக்கு வந்த சோதனையைப் பாருங்க!

இந்திய கிரிக்கெட் உலகில் இளம் வயதிலேயே தனது அதிரடி ஆட்டத்தால் கவனம் ஈர்த்து வருபவர் வைபவ் சூர்யவன்ஷி. குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய இவருக்கு, பரிசுப் பொருட்கள் குவிந்து வருகின்றன. அதில், கார்களும் அடங்கும். அந்த வகையில், கடந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பான அதிரடி ஆட்டத்திற்காக அவருக்கு டாடா சியரா கார் பரிசாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்த பரிசாக அறிவிக்கப்பட்ட சியரா கார் தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் கிடைத்த மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், அதை அவரே ஓட்ட முடியாத நிலை உள்ளது. அதாவது, இந்தியாவில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான சட்ட விதிமுறைகளின்படி அவர் இன்னும் அந்த வயதை எட்டவில்லை என்பதால், அவர் தானே ஓட்ட முடியாத நிலை உள்ளது. ஓட்டுனர் அல்லது உறவினர்களை வைத்தே இயக்கலாம்.

Tata Seirra
Photo Credit:

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷிக்கு, ஐபிஎல் 2026 தொடரில் சிறப்பாக விளையாடியதற்காக 'சூப்பர் ஸ்டிரைக்கர் ஆஃப் தி சீசன்' விருது வழங்கப்பட்டது. இந்த விருதுடன் டாடா நிறுவனத்தின் புதிய சியரா எஸ்யூவி காரும் பரிசாகக் கிடைத்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த விருதைப் பெற்றுள்ளார்.

கடந்த 2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் சூப்பர் ஸ்டிரைக்கர் விருதை வென்றதற்காக டாடா கர்வ் எலெக்ட்ரிக் கார் அவருக்குப் பரிசாக வழங்கப்பட்டது. தற்போது இரண்டாவது காராக டாடா சியரா கிடைத்துள்ளது. இளம் வயதிலேயே இரண்டு கார்களைப் பரிசாகப் பெற்று அசத்தி இருக்கிறார். ஆனாலும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போல அவர் தானே ஓட்ட முடியாத நிலை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தொடரும்.

Also Read

சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியான நேர்காணலில் வைபவ் சூர்யவன்ஷியிடம் கார் ஓட்டுவது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது மைதானத்தில் ரிமோட் மூலம் இயங்கும் பொம்மை காரை இயக்கிக் காட்டிய அவர், தனது எதிர்கால ஓட்டுனர் திட்டம் குறித்தும் சுவாரஸ்யமாகப் பதிலளித்திருந்தார்.

அப்போது புதிய காரை எப்போது ஓட்டப்போகிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது, இன்னும் மூன்று ஆண்டுகள் காரை வைத்திருப்பேன் என்றும், அதற்குள் ஓட்டுனர் உரிமம் பெற்றுவிட்டு நானே ஓட்டுவேன் என்றும் தெரிவித்தார். அதுவரை தனது தந்தைதான் புதிய காரை ஓட்டுவார் என்றும் அவர் கூறியிருந்தார்.

Also Read

இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, தனியார் பயன்பாட்டுக்கான கார் உள்ளிட்ட வாகனங்களைப் பொதுச்சாலைகளில் ஓட்டுவதற்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். தற்போது 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி, இன்னும் மூன்று ஆண்டுகள் காத்திருந்துதான் முறையாக ஓட்டுனர் உரிமம் பெற முடியும்.

மேலும், 16 வயது பூர்த்தியானவர்கள் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் 50 சிசிக்கு மிகாமல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு உரிமம் பெறலாம். ஆனால் கார் ஓட்டுவதற்கு இந்த விதிமுறை பொருந்தாது. எனவே, வயது வரம்பை எட்டும் வரை தனது புதிய டாடா சியராவை அவரே ஓட்ட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே வைபவ் சூர்யவன்ஷியின் கிரிக்கெட் பயணத்திலும் முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது நடைபெறவுள்ள சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் பீகார் அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். வெறும் 15 வயதில் மாநில அணிக்குத் தலைமை தாங்குவது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த வைபவ், தற்போது உள்ளூர் டி20 கிரிக்கெட்டிலும் தனது திறமையை நிரூபிக்கத் தயாராகி வருகிறார். இளம் வயதிலேயே கேப்டன் பொறுப்பு கிடைத்திருப்பது அவரது திறமை மற்றும் கிரிக்கெட் எதிர்காலத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஒருபுறம் கிரிக்கெட் மைதானத்தில் சாதனைகளைப் படைத்து வரும் வைபவ் சூர்யவன்ஷி, மறுபுறம் கார் பரிசுகளாலும் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். தற்போது கிடைத்துள்ள டாடா சியராவை அவரது தந்தை பயன்படுத்துவார். இன்னும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஓட்டுனர் உரிமம் பெற்றதும், தனது கனவு காரைத் தானே ஓட்டும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கும்.

Article Published On: Tuesday, November 10, 2026, 10:44 [IST]
English summary
Vaibhav sooryavanshi tata sierra gift driving license plan
மேலும்... #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out