காலத்துக்கும் இதை மறக்க மாட்டாங்க! பி.எம்.டபிள்யூ ஏன் எல்லாருக்கும் பிடிச்ச நிறுவனமாக இருக்குனு இப்போ புரியுது
காதலர் தினம் (Valentine's Day) உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு தற்போதுதான் ஓய்ந்துள்ளது. இருப்பினும், இப்போதும் சில பகுதிகளில் காதலர் தின கொண்டாட்டங்கள் வெவ்வேறு விதமான வழிகளில் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஷோரூம் ஒன்று பள்ளி சிறுவர், சிறுமிகளை அழைத்து அவர்களுக்கு தங்களிடம் உள்ள விலையுயர்ந்த கார் & பைக்குகளை சுற்றி காண்பித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சில பண்டிகைகளுள் ஒன்று காதலர் தினம் ஆகும். மற்றவர்களிடத்தில் அன்பு பொழிய வேண்டும் என்பதுதான் காதலர் தினத்தின் சாரம்சம் ஆகும். ஆனால், அதனை ஆண், பெண்ணுக்கு இடையேயான அன்பிற்கானதாக மாற்றிவிட்டனர். இதனை புரிந்துக் கொண்ட பிஎம்டபிள்யூ ஷோரூம் ஒன்று பள்ளி குழந்தைகளை அழைத்து காதலர் தினத்தை கொண்டாடி உள்ளது.

பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையில் பேருந்துகளில் ஷோரூமுக்கு அழைத்துவரப்பட்ட சிறுவர், சிறுமிகள் பள்ளி சீருடையில் இருப்பதை காணலாம். பிஎம்டபிள்யூ ஷோரூமிற்குள் விலையுயர்ந்த கார் & பைக்குகளை நெருக்கமாக சுற்றி பார்த்த பள்ளி சிறுவர், சிறுமியர், பின் ஷோரூமிற்குள் அமர வைக்கப்பட்டு ஷோரூம் பணியாளர்களால் மகிழ்விக்கப்பட்டனர்.
அதாவது, குழந்தைகளுக்கு பிடித்த கதைகளை சொல்லி, அவர்களின் ஆர்வத்தை தூண்டக்கூடிய கேள்விகளை கேட்டு பிஎம்டபிள்யூ ஷோரூம் பணியாளர்கள் குஷிப்படுத்தினர். பின்னர் அனைத்தையும் முடித்துக் கொண்டு குழந்தைகள் பேருந்தில் ஏறி புறப்பட்டனர். இந்த காட்சிகள் யாவும் வீடியோவாக காட்சிப்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட பிஎம்டபிள்யூ ஷோரூமின் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

டீலர்ஷிப் ஷோருமின் இதுகுறித்த இன்ஸ்டா பதிவில், "வேறெங்கும் இல்லாத காதல் தினம்! இந்த காதலர் தினத்தில், காதல் வித்தியாசமான பாதையை எடுத்தது - வேகத்திலும் குதிரைத்திறனிலும் கனவு காணும் சிறுவர்களின் இதயத்தில் இருந்து! கார்கள், வேகம் மற்றும் சாகசத்தின் மீதான காதலுக்காக, ஆடம்பர சக்கரங்கள் மற்றும் உறுமும் சூப்பர் பைக்குகளின் உலகில் ஒரு பிரத்யேக களப் பயணத்தின் மூலம் கனவுகளை நனைவாக்கினோம்!
ஏனெனில், காதல் என்பது சாக்லெட்டுகள் மற்றும் ரோஜாக்களை பற்றியது மட்டுமல்ல - சில நேரங்களில் அது இயந்திரத்தின் சிலிர்ப்பு, மெருக்கூட்டப்பட்ட உலோகத்தின் பளபளப்பு மற்றும் ஒரு குழந்தையின் கண்களில் பிரகாசம்! கார்களுக்காக துடிக்கும் சிறிய இதயங்களுக்கு ஒரு காதலர் தின ஆச்சிரியம் - புன்னகை, உற்சாகம் மற்றும் மறக்க முடியாத நினைவுகளுடன் வெற்றிக்கரமாக செயல்படுத்தப்பட்டது!" என குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்கள் மற்றும் பைக்குகள் என இரண்டையும் ஒரே ஷோரூமில் விற்பனை செய்யும் உலகின் மிக சில நிறுவனங்களுள் பிஎம்டபிள்யூவும் ஒன்றாகும். இந்தியாவில் பிஎம்டபிள்யூவில் இருந்து மொத்தம் 22 விதமான கார்களும், சுமார் 25 விதமான மோட்டார்சைக்கிள்களும் தற்சமயம் விற்பனை செய்யப் படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஷோரூமுக்கு அழைத்துவரப்பட்ட சிறுவர், சிறுமியர் அனைவருக்கும் தாம் அழைத்துவரப்பட்டது ஷோரூமுக்கு என்பது வேண்டுமாயின் தெரியாமல் போகலாம். ஆனால், ஷோரூமில் அவர்கள் பார்த்த பிரம்மாண்டமான கார் & பைக்குகள் காலத்திற்கும் நினைவில் இருக்கும். சொல்ல முடியாது, இதையே ஒரு உந்துதலாக வைத்து இதில் ஏதேனும் சிறுவர், சிறுமியர் எதிர்காலத்தில் கார் அல்லது பைக் ஆர்வலராக உருவெடுக்கலாம்.


Click it and Unblock the Notifications









