பிரம்மாண்ட பைக்கில் சீன் காட்டிய தல அஜீத்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்!

தல அஜீத் பைக் ஓட்டும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் தற்போது வைரல் ஆகி வருகின்றன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரம்மாண்ட பைக்கில் சீன் காட்டிய தல அஜீத்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்!

வலிமை படத்தின் அப்டேட்டிற்காக தவமாய் தவம் கிடந்த தல அஜீத் ரசிகர்களுக்கு தொடர்ந்து மகிழ்ச்சியான செய்திகள் வெளியாகி வருகின்றன. வலிமை அப்டேட் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது தல அஜீத் பைக் டிரிப் சென்ற புகைப்படங்கள் கிடைத்துள்ளன. பிரம்மாண்டமான அந்த பைக்கில் தல அஜீத் அமர்ந்திருப்பதை பார்ப்பதற்கே அருமையாக உள்ளது.

பிரம்மாண்ட பைக்கில் சீன் காட்டிய தல அஜீத்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்!

தல அஜீத் சிக்கிம் சென்றபோதுதான் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜீத் இப்படி பைக் பயணங்களை மேற்கொள்வது இது முதல் முறை கிடையாது. கடந்த காலங்களில் பலமுறை அவர் சாகச பைக் பயணங்களை மேற்கொண்டுள்ளார். ஆனால் தல அஜீத் ரசிகர்களுக்கு தற்போதைய நிலையில் இருக்கும் சந்தேகமே, அவர் ஓட்டிய பைக்கை பற்றிதான்.

பிரம்மாண்ட பைக்கில் சீன் காட்டிய தல அஜீத்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்!

தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களில் தல அஜீத் பயன்படுத்தியிருப்பது பிஎம்டபிள்யூ ஆர் 1200 ஜிஎஸ் அட்வென்ஜர் பைக் ஆகும். இந்த பைக் தற்போது இந்தியாவில் விற்பனையில் இல்லை. கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதமே பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த பைக்கை இந்திய சந்தையில் விற்பனையில் இருந்து விலக்கி விட்டது.

பிரம்மாண்ட பைக்கில் சீன் காட்டிய தல அஜீத்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்!

ஆனால் இந்திய சந்தையில் விற்பனையில் இருந்தபோது, ஸ்டாண்டர்டு, ப்ரோ மற்றும் டைனமிக் ப்ளஸ் என்று 3 வேரியண்ட்களில் பிஎம்டபிள்யூ ஆர் 1200 ஜிஎஸ் அட்வென்ஜர் கிடைத்தது. இந்த மூன்று வேரியண்ட்களிலுமே 1170 சிசி இன்ஜின்தான் வழங்கப்பட்டிருந்தது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 125 பிஎஸ் பவரையும், 125 என்எம் டார்க் திறனையும் உருவாக்க வல்லது.

பிரம்மாண்ட பைக்கில் சீன் காட்டிய தல அஜீத்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்!

இந்த பைக் ஒரு லிட்டருக்கு 16 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்க கூடியது. இந்த பைக்கின் ஸ்டாண்டர்டு வேரியண்ட்டின் விலை 17.25 லட்ச ரூபாய். அதே சமயம் ப்ரோ வேரியண்ட்டின் விலை 20.95 லட்ச ரூபாய் ஆகவும், டைனமிக் ப்ளஸ் வேரியண்ட்டின் விலை 21.30 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நாங்கள் இங்கே கூறியுள்ள அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

பிரம்மாண்ட பைக்கில் சீன் காட்டிய தல அஜீத்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்!

இவ்வளவு விலை உயர்ந்த பைக்கைதான் தல அஜீத் ஓட்டியுள்ளார். ஆனால் அவர் ஓட்டியது எந்த வேரியண்ட்? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த பைக்கின் எரிபொருள் டேங்க் 30 லிட்டர்கள் கொள்ளவு கொண்டது. அட்வென்ஜர் பைக் என்னும் நிலையில், தொலைதூர பயணங்களை மேற்கொள்வதற்கு ஏதுவாக பெரிய எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட பைக்கில் சீன் காட்டிய தல அஜீத்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்!

அதே சமயம் இந்த பைக்கின் முன் மற்றும் பின் பகுதிகளில் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக் அதிகபட்சமாக மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 3.7 வினாடிகளில் எட்டி விடும் வல்லமை இந்த பைக்கிற்கு உண்டு.

பிரம்மாண்ட பைக்கில் சீன் காட்டிய தல அஜீத்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்!

இந்த பைக்கில் ட்யூப்லெஸ் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. முன் பகுதியில் 19 இன்ச் வீலும், பின் பகுதியில் 17 இன்ச் வீலும் பொருத்தப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் பொருந்திய ஒரு பைக்கைதான் தல அஜீத் ஓட்டியுள்ளார். தற்போது இந்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலை தளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Valimai Actor Thala Ajith Rides BMW R 1200 GS Adventure, Pics Go Viral
Story first published: Thursday, July 22, 2021, 16:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X