அஜித் பட நடிகை வாங்கியுள்ள புதிய பென்ஸ் கார் - ஷோரூம் விலையே இவ்வளவு போகுதா? அப்போ ஆன்-ரோடு விலை...!!
தற்போதைய தலைமுறை மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் கார் சாதாரண மக்கள் மட்டுமின்றி, விஐபி-களுக்கும் மிகவும் விரும்பக்கூடிய காராக விளங்குகிறது. அந்த வகையில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் காரை பிரபலமான சினிமா நட்சத்திரம் ஒருவர் வாங்கியுள்ளார். யார் அவர்? என்பது குறித்த விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் லக்சரி எஸ்யூவி கார் ஆனது அதன் அளவில் பெரிய உருவத்திற்காக பிரபலமானது. இத்தகைய சொகுசு எஸ்யூவி காரை வாங்கிய சினிமா நட்சத்திரங்கள் வரிசையில் பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி இணைந்துள்ளார். ஹூமா குரேஷி தமிழில் நடிகர் அஜித்குமார் உடன் வலிமை படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முன்பு மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ 250டி காரை தனது தினசரி பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வந்தார்.

ஹூமா குரேஷியின் கேரேஜில் அதன் இடத்தை தற்போது புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் கார் பிடித்துள்ளது. இந்த காரை ரூ.1.16 கோடி என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் ஹூமா குரேஷி வாங்கியுள்ளார். ஆன் ரோடு விலை ரூ.1.50 கோடியை கடந்து இருக்கலாம். இந்த காரை நடிகை ஹூமா குரேஷி டெலிவிரி எடுத்துள்ளார் என்பதை மும்பையை சேர்ந்த ஒரு டீலர்ஷிப் மையம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது.
ஹூமா குரேஷி வாங்கியிருப்பது கவன்சைட் நீல நிறத்திலான ஜிஎல்எஸ் காரின் 400டி வேரியண்ட் ஆகும். இதில் டி என்பது டீசல் என்ஜினை குறிக்கிறது. மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் காரின் வேரியண்ட்கள் வரிசையில் 400டி ஆனது டாப் வேரியண்ட் ஆகும். அதாவது, இந்த வேரியண்ட்டில் எந்தவொரு குறையுமின்றி அனைத்து அம்சங்களும் வழங்கப்படுகின்றன. ஜிஎல்எஸ் ஆனது மெர்சிடிஸ்-பென்ஸின் 7 இருக்கைகளை கொண்ட முழு-அளவு லக்சரி எஸ்யூவி கார் ஆகும்.

ஆதலால், விலை குறைவான வேரியண்ட்களில் கூட பெரியதாக எந்தவொரு அசவுகரியமும் இருக்காது. இந்த காரில் மல்டி-பீம் எல்இடி ஹெட்லைட்கள் பொருத்தப்படுகின்றன. அத்துடன் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், 360-கோண பார்க்கிங் கேமிரா, பிளைண்ட் ஸ்பாட் கண்டறிவான், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் ஆகக்கூடிய வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், 5-நிலை க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவையும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரில் இடம் பெறுகின்றன.
மேலும், முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், கேபினை சுற்றிலும் விளக்குகள், லேட்டஸ் எம்பக்ஸ் யூஸர் இண்டர்ஃபேஸ் உடன் 12-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் என இந்த பென்ஸ் காரில் எந்தவொரு குறையும் கிடையாது. ஆர்டிகோ மேன் மேட் லெதரால் இந்த காரின் உட்பக்க கேபின் மற்றும் இருக்கைகள் வடிவமைக்கப்படுகின்றன. இத்தகைய வடிவமைப்பிற்கு மத்தியில் பனோராமிக் சன்ரூஃப் இந்த காரின் உட்பக்க மேற்கூரையில் வழங்கப்படுகிறது.

இவை மட்டுமின்றி, 13-ஸ்பீக்கர் பர்ம்ஸ்டர் சவுண்ட் சிஸ்டம், வுட் ஹைலைட்கள் போன்றவையும் இந்த லக்சரி எஸ்யூவி காரில் கொடுக்கப்படுகின்றன. இருப்பினும் இவையும் போதாது என்பவர்களுக்காக சில தனிப்பயனாக்க தொகுப்புகளும் வழங்கப்படுகின்றன. இந்த தொகுப்புகளில் காரின் வெளிப்புற மற்றும் உட்புற தோற்றத்தை மெருக்கேற்றக்கூடிய அம்சங்கள் இருக்கும். இந்த தொகுப்புகளில் ஒன்றை கூடுதல் கட்டணம் செலுத்தி சொந்தமாக்குவதன் மூலம் அந்த அம்சங்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
நடிகை ஹூமா குரேஷி வாங்கி இருக்கும் ஜிஎல்எஸ் 400டி காரில் 3.0 லிட்டர், 6-சிலிண்டர், டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 325 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 9ஜி-ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த கியர்பாக்ஸ் ஆனது என்ஜினின் இயக்க ஆற்றலை காரின் அனைத்து நான்கு சக்கரங்களுக்கும் 4மேட்டிக் அனைத்து சக்கர டிரைவ் சிஸ்டத்தின் வாயிலாக வழங்குகிறது.


Click it and Unblock the Notifications