சொகுசு பங்களா போல மாறிய ஈக்கோ வேன்! இவ்வளவு கம்மி செலவுல பண்ண முடியுமா?
வீடு வாசல் எதுவும் இல்லாமல் தனது வாகனத்தையே வீடாக மாற்றி ஒரு இளைஞர் வாகனத்திலேயே இந்தியா முழுவதும் அவருக்கு பிடித்த இடங்களில் வாகனத்தை பார்க் செய்து அங்கு தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார் என சொன்னால் உங்களால் நம்ப முடியாதா நாம் அப்படியான ஒரு இளைஞர் இருக்கிறார். அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நாம் அனைவருக்குமே பயணம் என்றால் மிகவும் பிடிக்கும் புதுப்புது இடங்களுக்கு செல்வது நமது வாழ்நாளில் ஒருமுறையாவது செய்து விட வேண்டிய காரியம் என நாம் நினைப்போம். இப்படியான வாய்ப்பு எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் கிடைத்து விடுவதில்லை. இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் இருக்கும். பொருளாதார சூழ்நிலைகள் பலருக்கு ஒத்து வராது, பல குடும்ப சூழ்நிலைகள் இதற்கு இடம் கொடுக்காமல் இருக்கும்.

ஆனால் இப்படி நம் வாழ்வில் கனவாக இருக்கும் ஒரு விஷயத்தை ஒருவர் நினைவாகி கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அவர் மீது பொறாமை தான் நமக்கு ஏற்படும் இல்லையா? அப்படியாக ஒருவர் இருக்கிறார். அவர் சொந்தமாக தனது வாகனத்தை எடுத்து அதை வீடு போல மாடிஃபிகேஷன் செய்து அதன் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றி தெரிந்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் வேன் லைஃப் வித் ரவி என்ற பெயரில் ஒருவர் தனது மாருதி ஈகோ காரை மாடிஃபிகேஷன் செய்து அதை வீடு போல மாற்றி பயன்படுத்தி வருகிறார். இதன் மூலம் அவர் பல்வேறு மலைப்பகுதிகளுக்கு பயணம் செய்து அங்கு தனது வேலை பார்த்து செய்து தனது கனவு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தனது வேலை எப்படி மாடிஃபிகேஷன் செய்தார் இதற்கு எவ்வளவு செலவானது என்ற விபரங்களை எல்லாம் அவர் தனியாக ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இவர் பயன்படுத்தி வரும் மாருதி ஈக்கோ வேனை இவர் பேஸ்புக் மார்க்கெட் ப்ளேஸில் பார்த்து ரூபாய் 6.5 லட்சம் செலவு செய்து சொந்தமாக வாங்கியுள்ளார். பின்னர் அதை மாடிஃபிகேஷன் முடிவு செய்ய முடிவு செய்து அதை குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா பகுதியில் செயல்பட்டு வரும் நவக்கார் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்திற்கு கொண்டு சென்று அங்கு மாடிஃபிகேஷன் பணிகளை செய்துள்ளார்.
இந்த மாடிஃபிகேஷனுக்காக மட்டும் இவர் ரூபாய் 3 லட்சம் செலவு செய்துள்ளார். இந்த மூன்று லட்சத்தை அவர் மூன்று விதமாக பிரித்துள்ளார். உட்புற மாடிஃபிகேஷன், வெளிப்பகுதியில் உள்ள மாடிஃபிகேஷன் மற்றும் தனியாக பொருத்தப்பட்ட சோலார் மற்றும் வாட்டர் டேங்க் அமைப்பதற்கான செலவு என மூன்று விதமாக செலவு செய்துள்ளார்.

உட்புற கட்டமைப்பில் வேனின் பின்பகுதி முழுவதும் இவர் படுக்கை வசதியுடன் கூடிய ஒரு பெட்ரூம் போல மாற்றி அமைத்துள்ளார். இதற்காக வேனில் உள்ள உட்புறத்தில் டம்பிங் செய்துள்ளார். இதுபோக சென்ட்ரல் லாக்கிங், பவர் விண்டோ உள்ளிட்ட அம்சங்களையும் பொருத்தியுள்ளார். இது போக வேனுக்கு உட்பகுதியில் வீடு போல அமைப்பு தரும் லைட்டிங் சிஸ்டம் அவர் பயன்படுத்த தேவைப்படும் பர்னிச்சர்கள், அவர் பாட்டு கேட்க பயன்படுத்தும் மியூசிக் சிஸ்டம் ஆகியவற்றையும் செட் செய்துள்ளார்.
இப்படியாக இவர் உட்புற கட்டமைப்புக்கு மட்டும் ரூபாய் 1.6 லட்சம் செலவு செய்துள்ளார். அடுத்ததாக வெளிப்புற வடிவமைப்பை பொறுத்தவரை எல்இடி ஹெட்லைட், ஃபாக் லைட்டுகள் ஆகியவற்றை வாகனத்தில் பொருத்தியுள்ளார். இதுபோக வாகனத்தில் முழுமையாக அவருக்கு பிடித்த தீமில் ஸ்டிக்கரிங் செய்துள்ளார். இதுபோக வாகனத்திற்கு தேவையான சில முக்கியமான பிற பாகங்களையும் வாங்கி வாகனத்தில் பொருத்தியுள்ளார்.
இதற்காக அவர் ரூபாய் 40 ஆயிரம் செலவு செய்துள்ளார். அடுத்ததாக இவர் பயன்படுத்துவதற்கான சோலார் சிஸ்டம் மற்றும் வாட்டர் டேங்க் ஆகியவற்றை வாகனத்தின் கூரை பகுதியில் பொருத்தியுள்ளார். இதற்காக இவர் ரூபாய் ஒரு லட்சம் செலவு செய்துள்ளார். ஆக மொத்தம் இவர் மாடிஃபிகேஷன்காக ரூபாய் 3 லட்சத்தை செலவு செய்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாம் வாழ்நாளில் ஒருமுறையாவது இப்படியான பயணம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டிருப்போம். ஆனால் நம்மால் பல்வேறு காரணங்களுக்காக முடியாமல் போயிருக்கும். ஆனால் இதை ஒருவர் செய்கிறார் என நாம் வீடியோக்களை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. இதனால் இவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இதுபோன்ற முயற்சியில் இறங்கலாம் என தற்போது யோசித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications









