ஃபாஸ்ட்டேக்கிலும் முறைகேடு.. கை வரிசை காட்ட ஆரம்பிக்கும் சுங்கச்சாவடிகள்.. சென்னையில் இனிதே ஆரம்பம்!

முறைகேடு நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட ஃபாஸ்ட்டேக் திட்டத்திலும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்களின் கை வரிசையைக் காட்ட ஆரம்பித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஃபாஸ்ட்டேக்கிலும் முறைகேடு... கை வரிசை காட்ட ஆரம்பிக்கும் சுங்கச்சாவடிகள்... சென்னையில் இனிதே ஆரம்பம்..!

பகல் கொள்ளையில் ஈடுபடும் டோல்பிளாசாக்களின் முறைகேடான நடவடிக்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் புதிய ஃபாஸ்ட்டேக் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்ட இத்திட்டம், வருகின்ற 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி முதல் கட்டாயமாக அமலுக்கு வரவிருக்கின்றது. ஆகையால், ஜனவரி 15ம் தேதிக்கு பின்னர் நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் பிளாசாக்களில் கட்டணம் செலுத்துவதற்கு ஃபாஸ்ட்டேக் விரைவில் கட்டாயமாக இருக்கின்றது.

ஃபாஸ்ட்டேக்கிலும் முறைகேடு... கை வரிசை காட்ட ஆரம்பிக்கும் சுங்கச்சாவடிகள்... சென்னையில் இனிதே ஆரம்பம்..!

ஃபாஸ்ட்டேக் என்பது, ரேடியோ அலைவெண்களால் இயங்கக்கூடிய ஓர் ஸ்டிக்கர் ஆகும். பிரத்யேக கோடிங் மூலம் இயங்கும் இது டோல்கேட்டுகளைக் கடக்கும்போது தானாகவே டோலுக்கு உண்டான கட்டணத்தைச் செலுத்த உதவும்.

பணமாகச் செலுத்துவதைக் காட்டிலும் ஃபாஸ்ட்டேக் மூலம் விரைவில் கட்டணத்தைச் செலுத்த முடியும். ஆகையால், இதில் அதிக நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.

ஃபாஸ்ட்டேக்கிலும் முறைகேடு... கை வரிசை காட்ட ஆரம்பிக்கும் சுங்கச்சாவடிகள்... சென்னையில் இனிதே ஆரம்பம்..!

இதன்காரணமாகவே, மத்திய அரசு இத்திட்டத்தை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றது. மேலும், கட்டணக் கொள்ளையையும் இதன்மூலம் தடுக்கப்படும் என அதீதளவில் நம்பிக்கைக் கொண்டுள்ளது.

ஃபாஸ்ட்டேக்கிலும் முறைகேடு... கை வரிசை காட்ட ஆரம்பிக்கும் சுங்கச்சாவடிகள்... சென்னையில் இனிதே ஆரம்பம்..!

இருப்பினும், என்னதான் தொழில்நுட்பம் வந்தாலும் நாங்கள் எங்களின் கை வரிசையைக் காட்டியே தீருவோம் என ஒரு சில டோல்கேட்டுகள் கங்கனம் கட்டிக் கொண்டு திரிகின்றன. அம்மாதிரியான ஓர் சம்பவம்தான் சென்னை வானகரத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் சமீபத்தில் அரங்கேறியுள்ளது.

ஃபாஸ்ட்டேக்கிலும் முறைகேடு... கை வரிசை காட்ட ஆரம்பிக்கும் சுங்கச்சாவடிகள்... சென்னையில் இனிதே ஆரம்பம்..!

இந்த சுங்கச் சாவடியை மஹாராஷ்டிரா மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கும் இந்தர்தீப் கட்டுமான நிறுவனம் குத்தகைக்கு எடுத்து இயக்கி வருகின்றது. உண்மையைக் கூற வேண்டுமானால், இந்த டோல்பிளாசா ஊழியர்கள் சாலையை பராமரிக்க தவறினாலும், கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதை தவிரவிடுவதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.

ஃபாஸ்ட்டேக்கிலும் முறைகேடு... கை வரிசை காட்ட ஆரம்பிக்கும் சுங்கச்சாவடிகள்... சென்னையில் இனிதே ஆரம்பம்..!

அந்தவகையில், அண்மையில் அரங்கேறிய முறைகேடு ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த சாஃப்ட்வேர் எஞ்ஜினியர் கிருஷ்ணகுமார் என்பவர் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தைத் தொடர்பு புகாரை அடுத்தே இது வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.

ஃபாஸ்ட்டேக்கிலும் முறைகேடு... கை வரிசை காட்ட ஆரம்பிக்கும் சுங்கச்சாவடிகள்... சென்னையில் இனிதே ஆரம்பம்..!

அவர் அளித்த புகாரில், "வானகரம் டோல்பிளாசாவில் அரசு குறிப்பிட்ட கட்டணத்திற்கும் அதிகமாக கட்டணத்தை வசூலிப்பதாகவும், முறைகேடாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தைத் திரும்பப் பெறுவதில் சிக்கலைச் சந்தித்து வருவதாகவும்" கூறியுள்ளார்.

ஃபாஸ்ட்டேக்கிலும் முறைகேடு... கை வரிசை காட்ட ஆரம்பிக்கும் சுங்கச்சாவடிகள்... சென்னையில் இனிதே ஆரம்பம்..!

அதாவது, கிருஷ்ணகுமார் சமீபத்தில் வானகரம் டோல்கேட்டைப் பயன்படுத்தி அருகில் இருக்கும் ஓர் இடத்திற்கு சென்றுள்ளார். அவர், 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே திரும்பி வந்துவிடுகின்ற வேலைக்காகவே அங்கு சென்றுள்ளார். ஆகையால், அவருக்கு 75 சதவீத கட்டணத்திற்கான சீட்டே வழங்கியிருக்க வேண்டும்.

ஃபாஸ்ட்டேக்கிலும் முறைகேடு... கை வரிசை காட்ட ஆரம்பிக்கும் சுங்கச்சாவடிகள்... சென்னையில் இனிதே ஆரம்பம்..!

அதாவது, ஒரு டோலைக் கடக்க ரூ. 40 என்றால் 24 மணி நேரத்தில் சென்றுவர ரூ. 60 மட்டுமே வசூலித்திருக்க வேண்டும். ஆனால், சுங்க ஊழியர்களோ முழு தொகையையும் வசூலித்துள்ளனர். ஆகையால், கிருஷ்ண குமாருக்கு ரூ. 20 நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஃபாஸ்ட்டேக்கிலும் முறைகேடு... கை வரிசை காட்ட ஆரம்பிக்கும் சுங்கச்சாவடிகள்... சென்னையில் இனிதே ஆரம்பம்..!

இதை கிருஷ்ண குமாருக்கு மட்டுமே தவறுதலாக இழைக்கப்பட்ட அநீதி அல்ல, கூடுதலாக சிலருக்கும் இதேபோன்று அதிகளவு கட்டணத்தை வானகர சுங்கச்சாவடி ஊழியர்கள் வசூலித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றது.

ஃபாஸ்ட்டேக்கிலும் முறைகேடு... கை வரிசை காட்ட ஆரம்பிக்கும் சுங்கச்சாவடிகள்... சென்னையில் இனிதே ஆரம்பம்..!

முன்னதாக, அதிக கட்டணம் பிடித்துவிட்டதாக சுங்கச்சாவடி ஊழியர்களைத் அணுகியபோது, அங்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்த ஒரு நபர்கூட இல்லையென கிருஷ்ணகுமார் கூறுகின்றனர். மேலும், அங்கிருந்த அனைவரும் இந்தி மொழியை மட்டுமே பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஃபாஸ்ட்டேக்கிலும் முறைகேடு... கை வரிசை காட்ட ஆரம்பிக்கும் சுங்கச்சாவடிகள்... சென்னையில் இனிதே ஆரம்பம்..!

இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத்துறையின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு அவர் முயற்சித்துள்ளார். அதில், பல மணி நேரம் தொடர்பு கொண்டும் லைனே கிடைக்கவில்லை என்றும் அவர் புலம்பினார்.

ஃபாஸ்ட்டேக்கிலும் முறைகேடு... கை வரிசை காட்ட ஆரம்பிக்கும் சுங்கச்சாவடிகள்... சென்னையில் இனிதே ஆரம்பம்..!

இதை அவ்வளவு சாதாரணமாக எடுத்துவிடக் கூடாது என நினைத்து கிருஷ்ணகுமார், தேசிய நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளும்விதமாக 044 - 22251885 என்ற எண்ணை அழைத்துள்ளார். அதில், பேசிய அதிகாரி தெரியாமல் விரல் பட்டிருக்கலாம் அல்லது தொழில்நுட்ப கோளாறு ஏதேனும் ஏற்பட்டிருக்கலாம் என அவர் கூலாக பதிலளித்துள்ளார்.

ஃபாஸ்ட்டேக்கிலும் முறைகேடு... கை வரிசை காட்ட ஆரம்பிக்கும் சுங்கச்சாவடிகள்... சென்னையில் இனிதே ஆரம்பம்..!

இதுபோன்று பொறுப்பற்ற அதிகாரிகள் செயல்படுவதன் காரணத்தினாலயே சுங்கச்சாவடி குத்தகைத்தாரரக்கள் பகல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபடுவதாக அந்த சுங்கச்சாவடிமீது மூன்றுக்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டிருப்பதாக ஒப்புக்கொள்ளும் தேசிய நெடுஞ்சாலைத்துறை, அவர்கள்மீது என்னமாதிரியான நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேள்விக்கு மௌனமாகவே இருக்கின்றது.

ஃபாஸ்ட்டேக்கிலும் முறைகேடு... கை வரிசை காட்ட ஆரம்பிக்கும் சுங்கச்சாவடிகள்... சென்னையில் இனிதே ஆரம்பம்..!

குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் ஃபாஸ்ட்டேக் கட்டண திட்டத்திற்கு மாறாமல் இருக்கும் வாகன ஓட்டிகளிடம் இருந்து இரு மடங்கு கட்டணம் வசூலிக்க இருப்பதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. ஆகையால், பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஃபாஸ்ட்டேக் திட்டத்திற்கு மாறி வருகின்றனர்.

இந்த நிலையில், ஃபாஸ்ட்டேக் முறையிலும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்களின் கை வரிசையைக் காட்ட தொடங்கியிருப்பதாக பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஃபாஸ்ட்டேக்

இதுபோன்று, ஃபாஸ்ட்டேக் பற்றி பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் பரவிக் கொண்டிருந்தாலும், அண்மையில் காணாமல் போன புத்தம் புதிய ஸ்கார்பியோ காரை வெறும் 5 மணி நேரங்களில் கண்டுபிடிக்க இந்த இந்த ஃபாஸ்ட்டேக்கே முக்கிய காரணமாக இருந்தது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஃபாஸ்ட்டேக்

சுங்கச்சாவடிகளில் பணமில்லா கட்டணம் செலுத்தும் முறைக்காக அறிமுகம் செய்யப்பட்டதுதான் ஃபாஸ்ட் டேக். இது, சிறிய ஸ்கேனிங் கோடிங் முறை மூலம் தானாகவே டோல் கட்டணத்தைச் செலுத்த உதவும். இதில், பொருத்தப்பட்டுள்ள ரேடியோ அதிர்வெண் அலை தொழில்நுட்பம் இதற்கு உதவும்.

ஏற்கனவே, இரு முறை இத்திட்டத்தை கட்டாயமாக்குவதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டநிலையில், தற்போது மீண்டும் கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஃபாஸ்ட்டேக்

மத்திய அரசு டோல்கேட்டுகளில் அரங்கேறும் முறைகேடுகள் மற்றும் கட்டண கொள்ளைகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக இந்த ஃபாஸ்டேக் திட்டத்தை அண்மையில் அறிமுகம் செய்தது. இது கடந்த 1ம் தேதி முதல் கட்டாயம் அமலுக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பின்னர் டிசம்பர் 15ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

ஆனால், பலர் ஃபாஸ்ட்டேக் திட்டத்திற்கு மாறாத காரணத்தால் இந்த கால அவகாசத்திலும் மாற்றம் செய்யப்பட்டு ஜனவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஃபாஸ்ட்டேக்

பெருவாரியானோர் இந்த ஃபாஸ்டேக்கைப் பற்றியும், அதன் நன்மைகள் பற்றியும் அறிந்துக் கொள்ளாமலே இருக்கின்றனர்.

இந்நிலையில், காணாமல் போன புத்தம் புதிய ஸ்கார்பியோ காரை ஃபாஸ்டேக்கின் உதவியால் புனே நகர போலீஸார் வெறும் 5 மணி நேரங்களில் கண்டுபிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபாஸ்ட்டேக்

புனேவில் உள்ள கர்வேநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர ஜக்டப். அதே பகுதியில் வீடு கட்டுமான அலுவலகம் ஒன்றை நடத்தி வருகின்றார். இவர், நடப்பாண்டின் ஆகஸ்டு மாதத்தில் புத்தம் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ காரை சொந்த பயன்பாட்டிற்காக வாங்கியிருந்தார்.

தொடர்ந்து, அந்த காரில் மத்திய அரசின் அறிவிப்பின்படி, டோல்கேட்டில் விரைவாக பணம் செலுத்துவதற்காக ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கரையும் ஒட்டினார்.

ஃபாஸ்ட்டேக்

இந்நிலையில், கடந்த திங்கள் (23 டிசம்பர்) விடியற்காலை 4.38 மணியளவில் ஜக்டாபின் செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், அவரது ஸ்கார்பியோ கார் தலேகன் டோல்பிளாசாவைக் கடந்திருப்பதாகவும். அதற்காக சுங்கக் கட்டணம் ரூ. 35 ஃபாஸ்ட் டேக் மூலம் பிடிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த குறுஞ்செய்தி விளக்கியிருந்தது.

ஃபாஸ்ட்டேக்

தொடர்ந்து, மீண்டும் ஒரு குறுஞ்செய்தி அன்றைய தினத்தின் காலை 5.50 மணியளவிலேயே ஃபாஸ்ட்டேக்கில் இருந்து அவருக்கு வந்துள்ளது. அப்போது அவர் விழித்திருந்ததாகக் கூறப்படுகின்றது. மேலும், குறுஞ்செய்திகளைக் கண்டு குழப்பமடைந்த அவர், நாம் தான் காரை வீட்டுக்கு வெளியே நிறுத்தியுள்ளேமே, ஏன் இப்படி குறுஞ்செய்திகள் வருகின்றன என்ற கேள்வியுடன், வெளியேச் சென்று காரைப் பார்த்துள்ளார்.

ஃபாஸ்ட்டேக்

ஆனால், அப்போது அவர் நிறுத்திய இடத்தில் கார் இல்லை. இதனால், கடும் அதிர்ச்சிக்குள்ளாகிய ராஜேந்திர ஜக்டப், சம்பவம்குறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தார். காரின் ஜிபிஎஸ் மற்றம் ஃபாஸ்ட்டேக் மூலம் கட்டணம் செலுத்திய டோல் விவரங்களைக் கொண்டு போலீஸார் துப்பு துலக்க ஆரம்பித்தனர்.

ஃபாஸ்ட்டேக்

இதையடுத்து, அந்த கார் கடைசியாக தானே பகுதியில் சென்றிருப்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து, கார்குறித்த அனைத்து தகவலையும் மும்பரே பகுதி காவல் நிலைய அதிகாரிகளுக்கு கர்வேநகர் போலீஸார் தெரிவித்தனர்.

ஃபாஸ்ட்டேக்

இதையடுத்து, அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி, மும்பரே பகுதி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்த ஆரம்பித்தனர். தொடர்ந்து, குறிப்பிட்ட இடத்திற்கு அருகாமையில் பணியில் இருந்த போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

ஃபாஸ்ட்டேக்

இவ்வாறு, கடைசியாக காணாமல் போன கார் ஹிரநந்தனி எஸ்டட்டிற்கு அருகில் உள்ள கோத்பந்தர் என்ற பகுதியில் இருப்பதைப் போலீஸார் கண்டுபிடித்தனர். அப்போது, நேரம் 8 மணி என்று கூறப்படுகின்றது. ஆனால், அந்த காரை களவாடிச் சென்ற திருடர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர். ஆகையால், காரை மட்டும் மீட்டும் போலீஸார் அதனை உரியவரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ஃபாஸ்ட்டேக்

காணாமல் போன காரை மீட்பதற்கு பெரும் உதவியினை ஃபாஸ்ட் டேக் வழங்கியுள்ளது. ஃபாஸ்ட் டேக் குறித்து பல்வேறு முரண்பட்ட கருத்துகள் பரவிய வண்ணம் இருந்தாலும், டோல் கேட்டில் கட்டண கொள்ளையைத் தடுக்கவும், சொந்த காரின் திருட்டைக் கண்டுபிடிக்கவும் உதவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, டோல்கேட்டுகளில் கட்டணத்தைச் செலுத்த நீண்ட நேரம் காத்திருக்கக்கூடிய அவலநிலையை இந்த ஃபாஸ்ட்டேக்குகள் நீக்கும்.

Article Published On: Saturday, December 28, 2019, 10:01 [IST]
English summary
Vanagaram TollGate Charging Extra Money In Fastag. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+