வந்தே பாரத் ரயிலை வாங்க போட்டி போடும் உலக நாடுகள்! ஏற்றுமதிக்கு ரெடியாகும் மத்திய அரசு!

இந்தியாவில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்களை இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது மட்டுமல்லாமல் இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தற்போது ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் உயர்நகர் ரயிலாக டிரெயின் 18 என்ற ரயிலை சென்னை ஐசிஎஃப் ஆலையில் உருவாக்கப்பட்டது. இந்த இரயில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் ரயிலை விட அதிக வசதிகள் இருந்ததாகவும் அதே நேரம் அதிக திறன் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டது. வெளிநாடுகளில் இயங்கும் புல்லட் ரயிலுக்கு இணையான ரயிலாக இந்த ரயில் கருதப்பட்டது.

vande bharat export

இந்த ரயில் மெல்ல மெல்ல தற்போது இந்தியா முழுவதும் பயன்பாட்டிற்கு வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இந்த வந்தே பாரத் ரயில் குறித்த முக்கியமான அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சமீபத்தில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் இந்தியாவில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி சென்னை ஐசிஎஃப் ஆலையில் ரயில்கள் தயாரிக்கப்பட்டு அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. முதல் நாடாக சிலி நாடு இந்தியாவுடன் இந்த ரயிலை பெறுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. இந்த வந்தே பாரத் ரயில் முழுவதுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு பெரும்பாலான பொருட்கள் இந்தியாவிலேயே கொள் முதல் செய்யப்பட்டு இந்த ரயில் தயாரிக்கப்படுகிறது.

vande bharat export

முழுமையாக இந்திய இன்ஜினியர்களை கொண்டு இந்த ரயில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ரயிலுக்கு பெரும் அங்கீகாரம் அளிக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து பல நிறுவனங்கள் மற்றும் பல நாடுகள் இந்த ரயிலை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

அதன்படி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து தற்போது ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது இந்தியா முழுவதும் 82 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது பல்வேறு மாநிலங்களையும் பல்வேறு முக்கிய நகரங்களையும் இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள வந்தே பாரத் ரயிலை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும்போது அந்த நாட்டிற்கு ஏற்றார் போல பல முக்கிய விஷயங்கள் அப்டேட் செய்யப்பட்டு நாட்டிற்காக பிரத்தியேகமாக இந்த ரயில் வடிவமைக்கப்பட்ட விற்பனைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சென்னை ஐசிஎஃப் ஆலையில் ஒவ்வொரு மாதமும் 3 முதல் 4 வந்தே பாரத் ரயிலை தயாரிக்கும் அளவிற்கு திறன் கொண்ட ஆலையாக செயல்பட்டு வருகிறது. தற்போது தயாரிக்கப்படும் ரயில்கள் எல்லாம் இந்தியாவிலேயே பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இவ்வளவு ரயில்களும் இந்தியாவிற்கு தேவைப்படாது என்பதால் மீதமுள்ள ரயில்களை மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் வந்தே பாரத் ரயில்களுக்கு வரவேற்பு கிடைக்கிறது போல, வெளிநாடுகளிலும் இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். மிகக் குறைவான விலையில் புல்லட் ரயில் தரத்தில் பயணத்தை சாத்தியமாக்கும் வகையில் இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் வெளிநாடுகளில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அந்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த ரயில் கொண்டு ஏற்படுத்தலாம்.

சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்படும் ரயில்கள் இனி சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இயங்கப் போகிறது என்பது நிச்சயம் தமிழர்களுக்கு ஒரு பெருமையான விஷயம்தான். இந்தியா இந்த விஷயத்தில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது என்று சொல்லலாம். சொந்தமாக ரயிலை தயாரித்து மற்ற எந்த உலக நாடுகளின் உதவியும் இல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது நிச்சயம் நல்ல விஷயம் தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சொந்தமாக ரயில் தயாரிப்பு என்பது ஒரு காலத்தில் பெரும் கனவாக இருந்தது வெளிநாடுகளில் இருந்து மட்டுமே ரயில்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில் நீண்ட ஆண்டுகளாக ஒரே மாதிரியான ரயில் பெட்டிகளை தயாரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இதையெல்லாம் மாற்றியமைத்து தற்போது புதிதாக வெளிநாடு ரயில்களுக்கு இணையான தரத்தில் ரயில்களை தயாரித்ததை சாதனை தான். அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது மிகப் பெரிய சாதனை.

More from DriveSpark

Article Published On: Monday, February 12, 2024, 15:56 [IST]
English summary
Vande bharat export soon to international train tracks
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+