மனைவியை ஊருக்கு அனுப்பிட்டு ஜாலியாக இருக்கலாம் என நினைத்த கணவனின் கனவுக்கு ஆப்பு வைத்த வந்தே பாரத் ரயில்!

மனைவியை வழி அனுப்ப வந்த கணவன் வந்தே பாரத் ரயில் உள்ளே வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இதனால் மனைவியுடன் சேர்ந்து கணவரும் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தற்போது மக்கள் மத்தியில் வந்தே பாரத் ரயில்கள் பிரபலமாகி வருகின்றன. மக்கள் பலர் விரைவாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வந்தே பாரத் ரயிலை தேர்வு செய்து வருகிறார்கள். விரைவாக மட்டுமில்லாமல் சொகுசான பயணத்தையும் வழங்குவதால் மக்களின் பிரதான தேர்வாக இந்த ரயில் தான் இருக்கிறது. ஆனால் மற்ற ரயில்கள் போல வந்தே பாரத ரயில்கள் கிடையாது இதில் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் இருக்கிறது.

vande bharat express

முக்கியமாக இந்த ரயில் பெட்டிகளில் தானியங்கி கதவுகள் இருக்கின்றன. ரயில் கிளம்பும் முன்பே இந்த கதவுகள் எல்லாம் தானாக மூடி கொள்கிறது. இதனால் கடைசி நேரத்தில் ரயிலுக்குள் ஏறோ இறங்குவோ முடியாது. இந்த ரயில் கதவுகள் மூடப்பட்டு விட்டால் அதை திறக்க முடியாது. இது தெரியாமல் பலர் ரயிலுக்குள்ளேயும் வெளியேயும் சிக்கி விடுகின்றனர்.

இப்படியாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கோஷா என்ற இளம் பெண் குடும்பத்தினர், வந்தே பாரத் ரயிலில் பயணித்தது குறித்த அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர்களின் திட்டத்தின் படி இவரது தாய் குஜராத் மாநிலம் வதோதராவிலிருந்து மும்பைக்கு வந்தே பாரத் ரயிலில் பயணிக்க திட்டமிடப்பட்டு அதற்கான டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டிருந்தனர்.

vande bharat express

இவரது தாயை சரியாக வதோதரா ரயில்வே ஸ்டேஷனில் இறக்கிவிட இவரது தந்தை தனது காரில் வந்துள்ளார். லக்கேஜ் கூடுதலாக இருந்ததால் லக்கேஜை தூக்கிக் கொண்டு பிளாட்பார்மிற்கு வந்து ரயில் வந்தவுடன் ரயிலில் ஏறி லக்கேஜை செட்டப் செய்து கொடுத்துள்ளார். ஆனால் இவரது தந்தை சுதாரித்துக் கொள்வதற்கு முன்பே வந்தே பாரத் ரயிலில் உள்ள தானியங்கி கதவுகள் மூடப்பட்டன.

இதைக்கண்டு பதறிய கோஷாவின் தந்தை உடனடியாக ரயிலில் இருந்து வெளியேற என்ன வழியை பார்த்தார்0 ஆனால் ரயிலில் இருந்து கதவுகள் மூடப்பட்ட பின்பு வெளியேற வழிகளே கிடையாது0 உடனடியாக ரயிலும் புறப்பட்டு மும்பை நோக்கி பயணிக்க துவங்கியது. இதையடுத்து பதறிப் போனவர் உடனடியாக டிக்கெட் பரிசோதனைகளிடம் சென்று நிலைமையை எடுத்துக் கூறி ரயிலை உடனடியாக நிறுத்துமாறு கூறினார்.

ஏற்கனவே ரயில் வேகத்தை பிக்கப் செய்து விட்டது என்றும், வதோதரா ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்துவிட்டது என்றும், இனி ரயிலை நிறுத்த முடியாது எனவும் கூறினார். இதனால் அவர் அடுத்த ரயில் நிலையம் வரை ரயிலிலேயே பயணித்து அங்கிருந்து மீண்டும் வதோதராவிற்கு வந்து விடும்படி அறிவுறுத்தினார். இதையடுத்து வதோதரா ரயில் நிலையத்திலிருந்து கிளம்பிய இந்த வந்தே பாரத் ரயில் அடுத்ததாக சூரத் ரயில் நிலையத்தில் தான் நின்றது.

சூரத் ரயில் நிலையம் வரை கணவனும் மனைவியும் ஒன்றாக வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்துள்ளனர். சூரத் வந்த பின்பு கணவர் மட்டும் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து மீண்டும் வதோதராவுக்கு செல்ல ஏதாவது ரயில் வசதி அல்லது பஸ் வசதி இருக்கிறதா என சோதனை செய்தார். தன் மனைவியை ரயில் நிலையத்தில் தானே இறக்கி விடப் போகிறோம் என கணவர் நைட் டிரஸ் உடன் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

ஆனால் எதிர்பாராத விதமாக நைட் டிரஸ் உடனேயே அவர் வதோதராவிலிருந்து சூரத் வரை பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இந்த சம்பவத்தை கோஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இன்றும் வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் பலருக்கு இந்த தானியங்கிக் கதவுகள் குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை.

வந்தே பாரத் ரயிலில் ரயில் கிளம்புவதற்கு ஒரு சில வினாடிகளுக்கு முன்பு தானியங்கி கதவுகள் தானாக மூடப்படும். இப்படியாக கதவுகள் மூடப்படும் போது கதவு அருகே யாரும் நிற்க கூடாது என்பதற்காக பீப் சத்தம் ஒலிக்கப்படும். ஆனால் பலருக்கு இந்த பீப் சத்தம் கேட்ட பிறகுதான் ரயிலுக்குள்ளே இருந்து தான் வெளியேற வேண்டும் என்ற நினைவே வருகிறது அவர்கள் கதம் அருகே செல்வதற்குள் தானியங்கி கதவுகள் மூடி கொள்கின்றன.

சிலர் வந்தே பாரத் ரயிலில் பயணித்து குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் இறங்கி தங்களுக்கான டீ, காபி போன்ற ஏதாவது ஒரு பொருளை வாங்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் திரும்பி ரயிலில் ஏறுவதற்கு முன்பே ரயில் சிக்னல் கிடைத்து கதவுகள் மூடி கொள்கின்றன. அவர்களால் ரயிலில் ஏற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீங்கள் வந்தே பாரத் ரயில் பயணிக்கிறீர்கள் என்றால் தேவையில்லாமல் ரயில்லிருந்து இறங்கவோ ஏறவோ செய்யாதீர்கள். இது உங்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. தற்போது இருக்கும் வந்தே பாரத் ரயிலில் தானியங்கிக் கதவுகள் குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. நீங்கள் அடுத்த முறை வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் போது இதை கவனத்தில் கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 4, 2024, 18:04 [IST]
English summary
Vande bharat express automatic door closed man locked inside know full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+