புல்லட் ரயில் எல்லாம் வேணாம் இந்தியாவின் வந்தே பாரத் தான் வேணும்னு அடம்பிடிக்கும் வெளிநாடுகள்!

இந்தியாவில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயிலை வாங்க உலகில் பல்வேறு நாடுகள் போட்டி போட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ள நிலையில், தற்போது பல்வேறு உலக நாடுகள் இந்த ரயிலை வாங்க முன்வந்துள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்திய ரயில்வே நிர்வாகம் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் என்ற ரயிலை தயாரித்து இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தி வருகிறது. இந்த ரயில் பார்ப்பதற்கு வெளிநாட்டில் இயங்கும் புல்லட் ரயில் போன்ற தோற்றத்தில் இருக்கிறது. இது தற்போது இயங்கும் சாதாரண ரயில்களை காட்டிலும் பல்வேறு விதமான அப்டேட்களை கொண்ட ரயில்களாக இருக்கின்றன.

Vande Bharat

இதனால் இந்த ரயில் பயணிக்க மக்கள் பலர் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த ரயிலை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ரயில்வே நிர்வாக முடிவு செய்துள்ளது. இதன்படி மற்ற வெளிநாடுகளில் இருந்து இந்த ரயிலுக்கான ஆர்டரை பெறும் முயற்சியின் ரயில்வே நிர்வாகம் இறங்கியது.

யாரும் எதிர்பாராத அளவில் உலக நாடுகளில் இருந்து இந்த ரயிலை வாங்குவதற்கு ஏகப்பட்ட விருப்பங்கள் வந்து குவிந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக சிலி, கனடா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் இந்த வந்தே பாரத் ரயிலை இந்தியாவிடம் இருந்து வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் இருக்கிறது.

Vande Bharat

முக்கியமாக இந்த ரயிலின் விலை ஒரு காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த ரயிலை தயாரிக்க ரூபாய் 120 முதல் 130 கோடி வரை செலவாகிறது. இதுவே மற்ற நாடுகளில் இதே போல ஒரு ரயிலை உருவாக்க வேண்டும் என்றால், ரூ 160 முதல் ரூ 180 கோடி வரை செலவாகும். அதனால் இந்தியாவில் இந்த ரயிலை வாங்குவதன் மூலம் ஏகப்பட்ட பணத்தை மிச்சப்படுத்த முடியும் என வெளிநாடுகள் நினைக்கின்றன.

அடுத்ததாக இந்த ரயிலின் பெர்ஃபார்மென்ஸ் இந்தியாவில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 52 நொடியில் பிக்கப் செய்துவிடும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஜப்பானில் தயாரிக்கப்படும் புல்லட் ரயில் விட அதிவேகமான பிக்கப் ஆகும் ஜப்பானில் உள்ள புல்லட் ரயில் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை பிக்கப் செய்ய 54 நொடிகள் எடுத்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.

Vande Bharat

மேலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் வடிவமைப்பும் சிறப்பாக இருக்கிறது. இது குறைந்த அளவிலான ஒலி மாசுவை ஏற்படுத்துவதாகவும் அதே நேரம் குறைந்த பவரின் இந்த ரயில் இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் இந்த ரயிலை வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்குவதற்கு மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் கவச் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பம் ரயில் விபத்துகளை தவிர்ப்பதற்காக மிக உதவியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவி படுத்தப்பட்டால் 99% ரயில் விபத்துக்கள் நடைபெறாமல் இருக்கும். மேனுவலாக நடக்கும் தவறுகளை எல்லாம் இது தானியங்கியாக தடுக்கும் அம்சம் கொண்டதாக உள்ளது.

இப்படி உலகில் மற்ற நாடுகள் தயாரிக்கும் முறைகளை விட இந்தியாவில் உள்ள வந்தை பாரத் ரயில் சிறப்பான பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த வடிவமைப்பு கொண்ட ரயிலாக இருப்பதால் உலக நாடுகள் பல இந்தியாவில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயிலை வாங்க விருப்பம் காட்டி வருகிறார்கள். இந்திய ரயில்வே நிர்வாகம் இந்தியாவிற்கான தேவை முடிந்த பிறகு இந்த ரயிலை வெளிநாடுகளுக்கு தயாரித்து ஏற்றுமதி செய்ய துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புல்லட் ரயிலில் எப்படி ஜப்பான் நாடு தனித்து வளர்ந்து நின்று அதேபோல தற்போது இந்தியா வந்தே பாரத் போன்ற மிக வேகமான ரயிலை தயாரிப்பதில் முன்னோடி நாடாக விலகி வருகிறது. இந்தியாவின் வந்தே பாரத் ரயில் உலக மக்களால் அதிகம் ஈர்க்கப்படுவது இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையான விஷயமாகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 1, 2024, 12:37 [IST]
English summary
Vande bharat express international appeal why foreign buyers are interested
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X