வந்தே பாரத் ரயிலில் கூட்டம் கூட்டமாக டிக்கெட் இல்லாமல் ஏறிய பயணிகள்! இதையும் விட்டு வைக்கலயா இவங்க!
ரயில்களில் அடிக்கடி முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் டிக்கெட் இல்லாமல் பலர் கூட்டமாக பயணம் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நாம் சமூக வலைதளங்களில் அதிகம் பார்த்திருப்போம். இது சாதாரண ரயில்களில் அடிக்கடி நடக்கும் சம்பவம் தான். ஆனால் இந்த சம்பவம் தற்போது இந்தியாவின் பிரீமியம் ரயிலான வந்தே பாரத் ரயிலிலும் நடந்துள்ளது. இது குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இது குறித்த அனைத்து விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ரயில்கள் என்பது நீண்ட தூர போக்குவரத்திற்கு மிக முக்கியமான வாகனமாக இருக்கிறது. பல மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் மக்கள் பல ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதுதான் அதிக சொகுசு வசதி நிறைந்ததாக இருக்கிறது. இந்நிலையில் ரயில் பயணம் செய்ய மக்களுக்கு இரண்டு வழிகள் இருக்கிறது. முன்பதிவு செய்தும் பயணம் செய்யலாம் முன்பதிவு செய்யாத பெட்டிகளிலும் கவுண்டரில் டிக்கெட் எடுத்து பயணம் செய்யலாம்.

ஆனால் விடுமுறை தினங்களை ஒட்டிய நாட்களில் முன்பதிவு இல்லாமல் டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் பயணிகள் பலர் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்டம் நிரம்பி வழிவதால் அவர்கள் முன்பதிவு உள்ள பெட்டிகளில் ஏறி பயணம் செய்யும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள் இப்படியாக இந்தியா முழுவதும் ஆங்காங்கே முன்பதிவு செய்யப்பட்டு பெட்டிகளில் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்த பயணிகள் பலர் பயணம் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம்.
இது இந்தியாவில் மிகப்பெரிய தலைவலியாக இருக்கும் நிலையில், தற்போது இது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. பொதுவாக இப்படியாக முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்ய டிக்கெட் எடுத்தவர்கள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறுவது என்பது சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களில் தான் இருந்தது. ஆனால் சமீபத்தில் வந்தே பாரத் ரயிலில் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வந்தே பாரத் ரயில் என்பது இந்தியாவின் பிரீமியம் ரயிலாகும். இந்த ரயில் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டு முழுமையாக தானியங்கி கதவுகளைக் கொண்டு முழு ஏசி பெட்டிகளை கொண்ட ரயிலாக இருக்கிறது. இந்த வந்தே பாரத் ரயில் பயணம் செய்ய வேண்டும் என்றால் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு இல்லாதவர்களுக்கு வந்தே பாரத் ரயிலில் ஏறுவதற்கு அனுமதி கிடையாது.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டெராடூன்க்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் இயங்கும் ரயிலில் சமீபத்தில் கூட்டம் நிரம்பி வழிந்து உள்ளது. கூட்டம் என்றால் இருக்கும் சீட்டு எண்ணிக்கை விட அதிக நபர்கள் ரயிலில் ஏறி உள்ளார்கள். முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி கொண்ட வந்தே பாரத் ரயில் இது எப்படி சாத்தியம் என பலரும் யோசிக்கலாம்.
இவர்களெல்லாம் உரிய டிக்கெட் இல்லாமல் வந்தே பாரத் ரயில் ஏறிய பயணிகளாக இருக்கிறார்கள். இவர்கள் சீட்டில் அமராமல், பயணிகள் நடந்து செல்லும் பாதையில் நின்று கொண்டே பயணம் செய்துள்ளார்கள். இதனால் பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக சாதாரண ரயில்களில் மட்டுமே இப்படியான காட்சிகளை காண முடியும்.
ஆனால் வந்தே பாரத் ரயிலிலும் தற்போது இது போன்ற சம்பவம் நடந்துள்ளதால் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். இவர்களுக்கு இந்த ரூட்டில் பயணம் செய்ய ரயிலில் போதுமான இடவசதி இல்லாததால் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அதிகளவிலான பயணிகள் இருந்ததால் டிக்கெட் பரிசோதராலும் நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்த மக்கள் பலர் இதற்கு ஒரு தீர்வு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள். முக்கியமாக ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் நிலையம் போல டிக்கெட் இருந்தால் மட்டுமே ரயில் நிலையத்திற்கு அனுமதி என்ற சிஸ்டத்தை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்படியாக பயணம் செய்யும் பல பயணிகள் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை எடுத்து பயணம் செய்யும் பயணிகளாக இருக்கிறார்கள். இதனால் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மேல் டிக்கெட் விலை வழங்குவதை நிறுத்த வேண்டும். இதை செய்தாலே இந்த பிரச்சனை பாதி குறைந்து விடும்.


Click it and Unblock the Notifications








