காலையில கிளம்பி போனா திருப்பதியில தரிசனம் பண்ணீட்டு நைட்டு வீட்டுக்கு வந்துடலாம்! புது வந்தே பாரத் வந்தாச்சு!

தற்போது சென்னை-திருப்பதி இடையே ரயில் பயணம் 95 நிமிடங்களாக குறைந்துள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சென்னை-விஜயவாடா வந்தே பாரத் ரயில் வெறும் ஒரு 1 மணி நேரம் 35 நிமிடத்தில் சென்னையிலிருந்து கிளம்பி ரேணிகுண்டா விற்கு செல்கிறது. இதனால் சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் பக்தர்கள் பலர் அதிகமாக பயனடைகின்றனர். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழகத்திலிருந்து ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கிறது. குறிப்பாக சென்னையில் இருந்து பலர் திருப்பதிக்கு அடிக்கடி சென்று வருகின்றனர். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பலரும் சென்னை வந்து அங்கிருந்து தான் திருப்பதிக்கு செல்கின்றனர்.

chennai tirupati vande bharat

இதற்கு முக்கியமான காரணம் சென்னையிலிருந்து திருப்பதிக்கு இருக்கும் ரயில் வசதி தான். சென்னையில் இருந்து திருப்பதிக்குe் திருப்பதியில் இருந்து சுமார் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரேணிகுண்டாவிற்கும் அடிக்கடி ரயில் வசதிகள் இருக்கிறது. இதனால் இந்த ரயில் வசதிகளை கணக்கிட்டு சென்னையிலிருந்து பலர் திருப்பதிக்கு அடிக்கடி சென்று வருகின்றனர்.

இப்படியாக சென்னையில் இருந்து திருப்பதிக்கு ரயிலில் செல்ல இரண்டு மணி நேரம் 35 நிமிடங்கள் வரை ஆகும். இதுவே நாம் சாலை வழியாக பயணித்தால் 3 மணி நேரம் 30 நிமிடங்கள் வரை பயண நேரம் எடுத்துக் கொள்ளும். இந்நிலையில் கடந்த வாரம் சென்னை முதல் விஜயவாடா வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அறிவிக்கப்பட்டது. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையிலிருந்து கிளம்பி ரேணிகுண்டா வழியாக சுற்றி விஜயவாடாவிற்கு செல்கிறது.

chennai tirupati vande bharat

இதன் மூலம் ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் இருந்து திருப்பதிக்கு வருபவர்களும் சென்னையிலிருந்து திருப்பதி செல்பவர்களும் இந்த ரயில் மூலம் பயனடைவர்கள் என எதிர்பார்க்கப்பட்டு இந்த வந்தே பாரத் ரயில் ரேணிகுண்டா வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தான் தற்போது சென்னை திருப்பதி இடையேயான பயண நேரத்தை வெகுவாக குறைத்துள்ளது.

இந்த ரயில் காலை 5:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்புகிறது. சரியாக 7:05 மணிக்கு ரேணிகுண்டாவிற்கு செல்கிறது. சரியாக சென்னையில் இருந்து கிளம்பிய 95வது நிமிடத்தில் இது ரேணிகுண்டாவை சென்று அடைகிறது. ரேணிகுண்டாவில் இருந்து திருப்பதி மற்றும் திருமலை ஆகிய பகுதிகளுக்கு அடிக்கடி பஸ்கள் இருப்பதால் மக்கள் இந்த ரயில்களை அதிகம் பயன்படுத்த தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 5:30 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பும் இந்த ரயில் ரேணிகுண்டா, நெல்லூர், ஓங்கோல், தெனாலி ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு சரியாக மதியம் 12:10 மணிக்கு விஜயவாடா சென்றடைகிறது. பின்பு அங்கிருந்து சரியாக மாலை 3:20 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அதே பாதையில் வந்து இரவு 10 மணிக்கு சென்னையை வந்தடைகிறது. இந்த ரயில் இரவு 8:05 மணிக்கு ரேணிகுண்டாவிலிருந்து கிளம்பி இரவு 10 மணிக்கு சென்னை வந்தடைகிறது.

சென்னையில் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு சென்று வருகின்றனர். இவர்களுக்கு ஏராளமான போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் மிகக்குறைவான நேரத்தில் பயணிக்க கூடிய வசதியாக இந்த வந்தே பாரத் ரயில் வசதி தான். இருக்கிறது 35 நிமிடத்தில் சென்னையில் இருந்து கிளம்பி ரேணிகுண்டாவை சென்றடைகிறது. இதனால் இந்த ரயிலில் பயணிக்க மக்கள் மத்தியில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் இதுபோன்று சென்னை -திருப்பதி இடையே அதிகமான இடைநில்லா ரயில் வசதிகளை கொண்டு வர வேண்டும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. மேலும் தற்போது இயங்கி வரும் சென்னை-விஜயவாடா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை அரக்கோணத்திலும் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் இருந்து திருப்பதி செல்ல இந்த ஒரே ஒரு வந்தேபாரத் ரயில் மட்டுமே இருந்தாலும் இது பக்தர்களின் எண்ணிக்கையை கணக்கிடும்போது போதுமானதாக இல்லை, இதனால் சென்னை மற்றும் திருப்பதி இடையே பிரத்தியேகமாக வந்தே பாரத் ரயிலை இயக்க நடவடிக்கையை எடுக்கப்பட்டால் ஒரே நாளில் அதிக டிரிப்புகள் வரும் இதனால் அதிக பயணிகள் பயன்பெறுவார்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 27, 2023, 14:04 [IST]
English summary
Vande bharat express shortens travel time from chennai to tirupati
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+