சென்னைக்கு 3வது வந்தே பாரத் ரயில் இன்னும் 2 நாளில் துவக்கம்! எந்த ரூட்டில் வரப்போகுது தெரியுமா?
சென்னை- விஜயவாடா ரூட்டில் புதிய வந்தே பாரத் ரயிலைப் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூலை 7ஆம் தேதி துவங்கி வைக்கிறார். இந்த ரயில் ஜூலை 8 தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. இந்த ரயில் குறித்த விரிவான விவரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் வரிசையாக ஒவ்வொரு ரோட்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முக்கியமான ரயில் என்பதால் ஒவ்வொரு ரயில் அறிமுகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து துவக்கி வைக்கிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்திற்கு மூன்றாவது வந்தே வாரத்தில் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக வந்தே பாரத் ரயில்கள் சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்டவுடன் அது இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும், இந்திய ரயில்வே நிர்வாகம் இதை ஒவ்வொரு ரயில்வே டிவிசனிற்கும் ஒதுக்கும்.
அதன்படி இந்த ரயில் தெற்கு மத்திய ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டது.
தெற்கு மத்திய ரயில்வே இந்த ரயிலே விஜயவாடாவிலிருந்து சென்னைக்கு ரேணிகுண்டா வழியாக இயக்க முடிவு செய்துள்ளனர். விஜயவாடாவிலிருந்து ரேணிகுண்டா வழியாக இந்த ரயிலை இயக்குவதன் மூலம் திருப்பதிக்குச் செல்பவர்கள் இந்த ரயிலை அதிகமாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதற்காக இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ரயிலை வரும் ஜூலை மாதம் 7 தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் துவக்கி வைக்கிறார். வரும் 8 முதல் இந்த ரயில் மக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இது பிரதமரின் நிகழ்ச்சி என்பதால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடைசி நிமிடத்தில் தான் வெளியிடப்படும்.
இந்த சென்னை - விஜயவாடா ரயில் குடூர், ரேணிகுண்டா மற்றும் காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதனால் விஜயவாடாவிலிருந்து திருப்பதி வருபவர்களும் சென்னையிலிருந்து திருப்பதி செல்பவர்களும் இந்த ரயிலைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் விரைவாக திருப்பதிக்கு சென்னையிலிருந்து சென்று விட முடியும்..

இந்த ரயில் சென்னையிலிருந்து விஜயவாடாவிற்கும் விஜயவாடாவிலிருந்து சென்னைக்கும் வெறும் 6.5 மணி நேரத்தில் பயணிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் பயணத்திற்கான நேரம் மற்றும் டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட தகவல்கள் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இதற்கான ஆன்லைன் புக்கிங்கும் நாளையே துவங்கும்
தற்போது சென்னையிலிருந்து விஜயவாடாவிற்கு ரயில்கள் சுமார் 8- 8:30 மணி நேரம் வரை பயணிக்கின்றன. அதேநேரம் கரீப்ரத் போன்ற ரயில்கள் வெறும் 5:30 நேரத்தில் கூட பயணிக்கின்றன. இந்நிலையில் தான் தற்போது வந்தே பாரத் துறையில் சுமார் 6:30 மணி நேரம் பயணிக்கும்படி திட்டமிடப்பட்டு செயல்பாட்டிற்கு வரவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையிலிருந்து திருப்பதிக்குத் தனியாக வந்தே பாரத் ரயில் ஒன்று அறிமுகமாகும் என்றாலும் இந்த ரயில் தான் முதல் ரயிலாக சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் பயணிகளுக்கு ரேணிகுண்டா வரை செல்லும் முதல் வந்தேபாரத் ரயிலாக அறிமுகமாக உள்ளது. இதைச் சென்னை மக்கள் அதிகம் பயன்படுத்திக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications









