310 முறை உலகை சுற்றி வந்த வந்தே பாரத் ரயில்! இது எப்படி சாத்தியமாச்சு தெரியுமா?
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்திய மக்களுக்காக இயங்கி வரும் வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை 310 முறை இந்த உலகத்தையே சுத்தி வந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்குள் மட்டும் இயங்கும் இந்த ரயில் எப்படி உலகத்தையே சுற்றி வந்தது வந்தே பாரத் ரயிலில் வேறு என்னென்ன மாதிரியான ஆச்சரியமான தகவல்கள் எல்லாம் உள்ளன என்ற விபரங்களை எல்லாம் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இது குறித்த விபரங்களை தான் நாம் இங்கே விரிவாக காணப்போகிறோம்.
இந்தியாவில் பிரத்தியேகமாக செமி ஹை ஸ்பீடு ரயிலை தயாரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து அதற்கான உத்தரவை சென்னை ஐசிஎஃப் பிறப்பித்தது. அதன்படி சென்னை ஐசிஎஃப் ஆலையில் சுமார் 180 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ரயிலை வடிவமைத்து முடித்தார்கள். இந்த ரயில் முதல் முதலாக வெளிநாட்டிற்கு தான் ஏற்றுமதி செய்யப்பட்டது.

பின்னர் சென்னை ஐசிஎஃப் ஆலையில் இந்த ரயிலை இந்தியாவில் இயங்கும் படி மாற்றியமைத்து இந்தியாவில் இந்த ரயிலை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்தன. இது வெற்றிகரமாக நிறைவு பெற்று கடந்த 2019ம் ஆண்டு முதன்முதலாக இந்தியாவில் இந்த செமி ஹை ஸ்பீடு ரயில் வந்தே பாரத் என்ற பெயரில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
தற்போது கிட்டத்தட்ட வந்தே பாரத் ரயில் அறிமுகமாகிய ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்த ரயில் மொத்தம் 18,423 கிரிப்புகளை இந்தியாவிற்குள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரயிலில் மாடலான கோச்சுகள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளுக்குள் தேவையான அனைத்து அம்சங்களும் பொருத்தப்பட்டுள்ளன ரயிலில் பாதுகாப்புக்காக கவச் தொழில்நுட்பமும் பொருத்தப்பட்டுள்ளது.

நாம் முன்னரே சொன்னது படி இந்த ரயில் 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ரயிலாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் இதுவரை 105.57% அளவுக்கு பயணிகள் பயன்படுத்தி உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இப்படியான பயணிகள் பயன்படுத்தியுள்ளதில் 26 முதல் 45 வரை உடைய இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்தி உள்ளார்கள். இந்த வயதுடைய இளைஞர்கள் 45.9% பேர் இந்த ரயிலை பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
வந்தே பாரத் ரயில் அறிமுகமானது முதல் கடந்த மார்ச் 31ம் தேதி வரை மொத்தம் 1,24,87,540 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளது. இது இந்த பூமியை சுமார் 310 முறை சுற்றி வந்தது சமமாகும். இதுவே கடந்த நிதியாண்டு அதாவது 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2024ம் ஆண்டு மார்ச் 31 வரை மட்டும் 97,71,750 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது.

இந்த பூமியின் சுற்றளவு என்பது சுமார் 40,075 கிலோமீட்டர் தொலைவாக இருக்கிறது. ஒருமுறை இந்த பூமியை சுற்றிவர வேண்டும் என்றால் இவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டும். இதனால் வந்தே பாரத் பயணம் செய்த தூரத்தை இந்த பூமியின் சுற்றளவுடன் ஒப்பிடும்போது சுமார் 310 முறை பூமியை சுற்றி வந்ததற்கு சமமாக வந்தே பாரத் ரயில் இதுவரை இந்தியாவிற்கு மட்டும் பயணம் செய்துள்ளது.
வந்தே பாரத் ரயில் பொறுத்தவரை முழுமையாக மூடப்பட்ட ரயிலாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்குள்ளே ரயில் என்னதான் வேகமாக பயணித்தாலும் பயணிகள் பெரிய அதிர்வை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பயணிகளுக்கு சொகுசான பயணம் கிடைக்கும். இது மட்டுமல்லாமல் ரயில் பயணம் செய்யும்போது, கதவுகள் எல்லாம் தானியங்கியாக மூடிக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரயிலில் சாய்ந்து கொள்ளும் வகையில் சீட்டுகள் சொகுசு வசதிகள் நிறைந்த பல்வேறு அம்சங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு டாய்லெட் வசதி, எக்ஸிக்யூட்டிவ் கிளாஸில் சுழலும் சீட்டுகள் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. இதனால் மக்கள் பலர் இந்த ரயிலில் பயணிக்க விருப்பம் அதிகமாக காட்டி வருகிறார்கள். இதனால் இந்த ரயிலிலும் கூட்டம் அதிகமாக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வந்தே பாரத் ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பகல் நேர ரயிலாக இருந்தாலும் வேகமாக பயணிப்பதால் பலர் இந்த ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள் இந்நிலையில் மக்கள் மத்தியில் நீண்ட தூரம் பயணிப்பதற்காக இரவு நேரம் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். அதுவும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









