வந்தே பாரத் ரயிலில் மகனை ஏற்றி விட வந்த தந்தைக்கு அபராதம்! இது என்னடா புதுசா இருக்குது!
மகனை ரயில் ஏற்றி விட வந்த சமயத்தில் தந்தையும் வந்து சிக்கி டபுள் மடங்கு டிக்கெட் விலையை அபராதமாக கட்டிய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. ரயிலில் உள்ள தானியங்கி கதவு மூடியதால் இவர் ரயிலுக்குள்ளே சிக்கி கொண்டார். இவரால் வெளியே செல்ல முடியவில்லை என்ன நடந்தது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
உபி மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்தவர் ராம் விலாஸ் யாதவ் என்பவரது மகன் கான்பூரில் இருந்து டெல்லிக்கு செல்வதற்காக வாரணாசி முதல் புது டெல்லி வரை இயங்கும் வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் புக் செய்திருந்தார். இவருக்கு அந்த ரயிலில் சி6 என்று கோச்சில் சீட் ஒதுக்கப்பட்டு இருந்தது. இவரது மகனை வழி அனுப்பி விடுவதற்காக ராம் விலாஸ் யாதவ் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துள்ளார்.

வாரணாசியில் இருந்து வந்த ரயில் கான்பூர் ரயில் நிலையத்திற்கு திட்டமிட்டபடி வந்தது. மகனிடம் அதிகமான லக்கேஜ் இருந்ததால் மகனுக்கு உதவி செய்யும் விதமாக தந்தையும் ரயிலுக்குள் ஏறி அவர் இருக்கும் சீட்டு வரை லக்கேஜை சுமந்து சென்றுள்ளார். ஆனால் ராம் விலாஸ் யாதவ் ரயிலில் இருந்து இறங்குவதற்கு முன்பாகவே ரயிலில் உள்ள தானியங்கி கதவுகள் மூடப்பட்டுள்ளது.
இதனால் ராம் விலாஸ் யாதவ் ரயிலில் இருந்து கீழே இறங்க முடியவில்லை ரயிலும் கான்பூர் ரயில் நிலையத்திலிருந்து டெல்லியை நோக்கி கிளம்பியது. இவர் ரயிலை நிறுத்துவதற்கும் ரயில் இருந்து வெளியே ஏறுவற்கும் பல்வேறு முயற்சிகள் செய்தும் எதுவும் பலனளிக்கவில்லை. ரயிலில் உள்ள அனைத்து கதவுகளும் மூடப்பட்டதால் இவர் ரயிலுக்கு உள்ளே சிக்கிக்கொண்டார்.

இந்நிலையில் அப்போதைக்கு வந்த டிக்கெட் பரிசோதகர் இவரிடம் டிக்கெட் இல்லாதவை தெரிந்து கொண்டு இவர் ரயிலுக்குள் சிக்கிக் கொண்டதை புரிந்து கொண்ட இவர், இவரை டிக்கெட் இல்லாத பயணி கருதி இவருக்கு டபுள் மடங்கு டிக்கெட் கட்டணத்தை அபராதமாக விதித்தார். கான்பூரில் இருந்து புதுடெல்லி செல்வதற்கு வந்தே பாரத் ரயிலில் ரூபாய் 1830 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த டிக்கெட் கட்டணமான ரூபாய் 1830-யும் கூடுதல் அபராதமாக ரூபாய் 1,039 சேர்த்து மொத்தம் ரூபாய் 2,870 ரூபாயை இவருக்கு அபராதமாக விதித்துள்ளார்கள். இவரும் வேறு வழியில்லாமல் அபராத கட்டணத்தை செலுத்தி டெல்லி வரை அந்த ரயிலிலேயே பயணம் செய்துள்ளார். இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தானியங்கி கதவுகள் இருப்பதால் ரயில் பயணிகள் ரயிலுக்குள் சிக்கிக் கொள்ளும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. ரயில்வே நிர்வாகம் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அறிவுறுத்த செய்து வருகிறார்கள். ரயிலில் பயணிகள் தவிர மற்ற யாரும் ஏற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் இது போதிய அளவு விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது.
இதனால் மக்கள் பலர் வந்தே பாரத் ரயிலுக்குள் ஏறி ரயிலில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் தேவையில்லாமல் அபராதம் செலுத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. இந்த தானியங்கி கதவுகளால் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது மட்டுமல்லாமல் டிக்கெட் எடுத்தவர்களுக்கும் சில சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
டிக்கெட் எடுத்து பயணம் செய்தவர்கள் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இறங்கி தங்களுக்கு தேவையான ஏதாவது பொருளை வாங்க வேண்டும் என பிளாட்பார்ம்க்குள் வரும்போது ரயில் கிளம்பி விட்டால் ரயில் தானியங்கி கதவுகள் முடிவிடுகிறது. இதனால் ரயிலில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் ரயிலுக்குள் ஏற முடியாமல் சிக்கி விடுகிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் நிலையில் பயணம் செய்யும் பயணிகள் தவிற மற்ற யாரும் ரயிலில் இயலாமல் இருப்பது பாதுகாப்பானது. அதே நேரம் ரயிலில் எறிய பயணிகள் ரயிலை விட்டு அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் மட்டும் இறங்கினால் எந்த வித பிரச்சனையும் இருக்காது. இடையில் இறங்கும் போது இப்படியான பிரச்சினைகள் ஏற்படுவது அடிக்கடி நடக்கிறது. ரயிலுக்குள்ளேயே போதுமான உணவுப் பொருட்கள் விற்பனை செய்ததால் ரயில் பயணிகள் அதையே பயன்படுத்தினால் பாதுகாப்பான பயணத்தை அவர்களால் மேற்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








