இந்தியாவிலேயே இது தான் முதன் முறை! விமானம் போல் மாறப்போகும் வந்தே பாரத் ரயில்கள்!

விமானம் போல பயணிகளுக்கு சேவைகளை வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக யாத்திரி சேவா அனுபந்த் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தற்போது வந்தே பாரத் பயணிக்கும் பயணிகளுக்கு விமானத்தில் பயணிப்பது போன்ற அனுபவம் சேவை வசதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தற்போது இந்தியாவில் அதிக வசதிகள் மற்றும் அதிக வேகத்தில் பயணிக்கும் ரயிலாக இருக்கிறது. நீண்ட தூர பயணிகளுக்கு மக்கள் பலர் இந்த ரயிலை தான் தேர்வு செய்து வருகிறார்கள். தற்போது பகல் நேர ரயிலாக மட்டுமே வந்தே பாரத் ரயில்கள் இருக்கை வசதிகளுடன் மட்டும் செயல்பட்டு வருகிறது.

vande bharat

இந்த ரயிலில் பயணித்தால் பயண நேரம் மற்ற ரயிலை விட மிகக் குறைவாக இருக்கும். அதே நேரம் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும் என்பதால் பயணிகள் இதை அதிகம் தேர்வு செய்து வருகின்றனர். விரைவான சொகுசான பயணத்திற்கு வந்தே பாரத் ரயில் சிறந்த தேர்வாக இருக்கும்.

வந்தே பாரத் ரயிலில் மற்ற ரயில்களில் உள்ளதை விட அதிக வசதிகள் இருந்தாலும் தற்போது விமான நிலையங்களில் உள்ள வசதிகள் வந்தே பாரத் ரயிலில் இல்லை. தற்போது இந்தியாவின் அதிக டிக்கெட் விலை கொண்ட ரயிலாக இருப்பதால் இதில் விமானம் போன்ற வசதிகள் கொண்ட பயணமாக இந்த வந்தே பாரத் பயணம் இருக்க வேண்டும் என மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக கோரிக்கை இருக்கிறது.

vande bharat

அதன்படி தற்போது யாத்திரி சேவா அனுபந்த் என்ற திட்டத்தை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் தெற்கு ரயில்வே சார்பில் இந்த திட்டத்தை ஒரு சோதனை திட்டமாக முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தென்னக ரயில்வேயில் இயங்கும் வந்தே பாரத் ரயில்களில் இந்த கூடுதல் சேவைகள் வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு விமான நிலையத்தில் கிடைக்கும் சேவை விமான பயணத்தின் போது கிடைக்கும் சேவைகள் எல்லாம் கிடைக்கும் வகையில் இது திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் படி வந்தே பாரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு அவர்கள் கிளம்பும் இடம் மற்றும் இறங்கும் இடம் ஆகிய இரண்டு ஸ்டேஷன்களிலும் புக் செய்யும் சேவை மற்றும் ரயில் நிலையத்திற்குள் எலெக்ட்ரிக் கார்களில் ஏறி அவர்கள் கோச் இருக்கும் பகுதிக்கு செல்லும் சேவை ஆகியவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக லக்கேஜ்களை அவர்கள் எடுத்து செல்லும்போது அதிக சிரமம் இல்லாமல் ரயிலில் ஏற முடியும்.

vande bharat

அடுத்ததாக ரயிலுக்குள் ஏறிய பயணிகளுக்கு இன்போடெயின்மென்ட் வசதிகளை வழங்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. விமானங்களில் இப்படியான இன்போடெயின்மென்ட் வசதி இருக்கிறது. ஆனால் ரயில்களில் வந்தே பாரத்தில் தான் இனி அதை அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான காப்புரிமை மற்றும் தகவல் பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட ஏகப்பட்ட விஷயங்களை ஏற்பாடு செய்யும் பணியில் தற்போது ரயில்வே நிர்வாகம் இறங்கியுள்ளது.

அதே நேரம் பயணிக்கும் போது பயணிகள் அவர்களது விருப்பமான உணவை உணவின் மெனு தேர்வு செய்யும் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. இந்த உணவுகள் ரயிலில் அமைக்கப்பட்ட ஐஎஸ்ஓ சான்று பெற்ற கிச்சனில் சமைக்கப்பட்டு இவர்களுக்கு பரிமாறப்படும் அதிக தரமான உணவுகளை மட்டுமே தயாரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இப்படியான உணவுகளை தயாரிக்க அதன் கான்ட்ராக்டர்களுக்கு சில விதிமுறைகளை வகுத்துள்ளது.

vande bharat

உணவு பரிமாறவும் அதே நேரம் அவ்வப்போது சுத்தம் செய்யவும் போதுமான பணியாளர்களை நியமிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆக பயணிகள் செலுத்த வேண்டிய கட்டணத்திற்கு புதிய வழிமுறைகளை கொண்டு வரவும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இதுபோக சென்னையில் மிகப்பெரிய கிச்சன் ஒன்றை அமைக்கவும் அங்கு வந்தே பாரத் ரயில்களில் அமைக்கப்படவுள்ள புதிய கிச்சன்களுக்கு தேவையான முன் தயார் செய்யப்பட்ட உணவுகளை தயாரிக்கும் இடமாக அதை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு பயணிகள் தங்கள் பயணத்தின் போது தேவையான உணவுகளை புக்கிங் செய்யும்போது ஆர்டர் செய்து கொள்ளலாம், அல்லது யாத்திரி சேவா ஆப் மூலம் அவர்களுக்கு தேவையான நேரத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். பயணத்தின் போது பீப் மற்றும் போர்க் ஆகிய இறைச்சிகள் எந்தவிதமான உணவுகளிலும் பயன்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் ரயிலை விமான சேவை போல் தரம் உயர்த்த தெற்கு ரயில்வே எடுத்துள்ள முயற்சி நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது. இந்தியாவில் இப்படியான வசதிகள் ரயில்களில் கொண்டு வந்தால் முதன்முறையாக தென்னக ரயில்வே தான் விமானம் போன்ற வசதியை வந்தே பாரத் ரயிலில் ஏற்படுத்தியதாக பெயர் ஏற்படும். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, November 27, 2023, 11:05 [IST]
English summary
Vande bharat indian railways yatri seva anubandh
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X