திருப்பதி உண்டியல் மாதிரி கலெக்ஷனை இந்த புதுச்சேரி-சென்னை-திருப்பதி வந்தே பாரத் ரயில் அள்ள போகுது!

புதுச்சேரியிலிருந்து சென்னை வழியாக திருப்பதிக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையிலிருந்து திருப்பதிக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் இந்த முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளதாக தெரிகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் வந்தேபாரத் ரயில்கள் வரிசையாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு பெரு நகரங்களையும் இணைக்கும் வகையில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரிசையாக அடுத்தடுத்த ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் 2 வழி தடங்களில் மட்டுமே வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

puducherry tirupati vande bharat

அதன்படி தற்போது சென்னையிலிருந்து பெங்களூரு வழியாக மைசூருவிற்கும், சென்னையிலிருந்து ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்திற்கான அடுத்த வந்தே பாரத் ரயில் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 3வது வந்தே பாரத் ரயில் தென் தமிழகத்திற்கு வரும் என பேச்சும் எழுந்துள்ளது.

சென்னையிலிருந்து திருச்சி, மதுரை வழியாக திருநெல்வேலிக்கும், சென்னையிலிருந்து விஜயவாடாவிற்கும் என இரண்டு வந்தே பாரத் ரயில் குறித்த திட்டங்கள் தற்போது நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில் மூன்றாவதாக புதுச்சேரியிலிருந்து சென்னை வழியாக திருப்பதிக்கு ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஆலோசனை நடத்தி வருகிறது.

புதுவை வந்தே பாரத் என்ற பெயரில் இந்த ரயில் அறிமுகமாகவுள்ளது. இந்த ரயில் புதுச்சேரியிலிருந்து கிளம்பி மதுராந்தகம், விழுப்புரம் வழியாக சென்னைக்கு வந்து பின்பு சென்னையிலிருந்து அரேக்கோணம் வழியாக திருப்பதியை சென்றடைகிறது. இந்த வந்தே பாரத் ரயிலில் சிறிய ரயிலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பொதுவாக புதுச்சேரியிலிருந்து திருப்பதி செல்ல, திருவண்ணாமலை, வேலூர் பகுதி வழியாக தான் செல்ல வேண்டும். ஆனால் சென்னை - திருப்பதி ரூட்டை கவர் செய்ய வேண்டும் என்பதால் இந்த ரயில் சென்னை வழியாக இயக்கப்படவுள்ளது. தற்போது இந்த ரயில் செயல் திட்டத்தில் மட்டும் தான் இருக்கிறது. இது வரும் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வந்தே பாரத் ரயில் அதன் வேகத்திற்கு தான் பெயர் பெற்றது. சுமார் 180 கி.மீ வேகம் வரை இந்த ரயிலால் பயணிக்க முடியும். குறிப்பிட்ட ஸ்டேஷன்களில் மட்டுமே நின்று செல்லும் என்பதால் இந்த ரயில் மற்ற ரயிலை காட்டிலும் வேகமாக செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று செல்லும். இதன் காரணமாகவே மக்கள் இந்த ரயிலை விரும்புகின்றனர். இது மட்டுமல்ல இந்த ரயிலில் ஏகப்பட்ட வசதிகளும் இருக்கிறது.

மற்ற சாதாரண ரயிலை போல அல்லாமல் இந்த ரயிலில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இது போக உயர் தரமான டாய்லெட், சீட்டிங் வசதிகளும் இருக்கிறது. இது முற்றிலும் குளிரூட்டப்பட்ட ஏசி பெட்டிகளை கொண்ட ரயிலாகும். இந்த ரயிலில் பயணிகளுக்கு உணவும் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள புல்லட் ரயிலுக்கு இணையாக இந்த ரயில் பார்க்கப்படுகிறது.

தினமும் வந்தேபாரத் ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. முதலில் வந்தே பாரத் ரயிலில் வேகம் குறைவாக இருந்தாலும் தொடர்ந்து இதன் வேகம் அதிகப்படுத்தப்படுகிறது. இதனால் ரயில் விரைவாகவே சென்றடைகிறது. குறைவான ஸ்டாபிக் மற்றும் பிரியாரிட்டி இருப்பதால் பெரும்பாலும் இந்த ரயில்கள் நேரம் தவறாமல் செல்லவேண்டிய இடத்திற்கு செல்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வந்தே பாரத் ரயிலுக்கான வரவேற்பு சிறப்பாக இருக்கும் நிலையில் மக்கள் பலர் இந்த ரக ரயில்களில் பயணிக்க விரும்புகின்றனர். தற்போது புதுச்சேரி திருப்பதி ரூட் ரயில் சென்னையிலிருந்து திருப்பதி, மற்றும் புதுச்சேரி செல்லும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Article Published On: Saturday, August 19, 2023, 13:02 [IST]
English summary
Vande bharat links chennai puducherry tirupati know the starting date
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+