பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!

இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் தற்போது இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் மூலம் எவ்வளவு வருமானம் வந்துள்ளது? அதன் மூலம் எவ்வளவு லாபத்தை ரயில்வே நிர்வாகம் ஈட்டி உள்ளது? என்ற தகவல் இல்லை என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்த பதில் கிடைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் கௌர் இவர் சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரயில்வே நிர்வாகத்திற்கு சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் செயல்பட்டு வரும் நிலையில் அதன் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானம் எவ்வளவு? வந்தே பாரத் ரயில்கள் லாபத்தில் இயங்குகிறதா நஷ்டத்தில் இயங்குகிறதா என்ற கேள்வியை எழுப்பினார்.

vande bharat profit for loss

இதற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் இருந்து பதிலும் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ரயில் வாரியாக வருமானம் குறித்த தகவலை இந்திய ரயில்வே நிர்வாகம் பதிவு செய்து வைக்கவில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இதனால் வந்தே பாரத் ரயில் குறித்த வருமான தகவல்களை தனியாக பிரித்துப் பார்ப்பது என்பது முடியாத காரியம் எனவும் பதில் அளித்துள்ளது.

இது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா முழுவதும் வந்தே பாரத் அவர்களுக்கு மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருக்கிறது. வந்தே பாரதத்தில் குறித்த ஏகப்பட்ட தகவல்களை ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். எவ்வளவு வருமானம் வந்தது என்ற தகவலை ரயில்வே நிர்வாகத்திலும் இல்லையா என்ற ஆச்சரிய கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

vande bharat profit for loss

இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் டெல்லி மற்றும் வாரணாசி ஆகிய பகுதி வழியாக இயக்கப்பட்டது. தற்போது இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ரூட்டுகளில் 102 வந்தே பாரத் ரயில்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வந்தே பாரத் ரயில்கள் மொத்தம் 254 மாவட்டங்களையும், 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் கடந்து சென்று வருகிறது.

இந்நிலையில் வந்தே பாரத் அறிமுகமானது முதல் தற்போது வரை சுமார் 2 கோடி மக்கள் வந்தே பாரத் ரயிலில் பயணித்துள்ளதாக சமீபத்தில் ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இது மட்டுமல்லாமல் ரயில்வே நிர்வாகம் கடந்த 2003-24 ஆம் நித்தியாண்டில் வந்தே பாரத் ரயில்கள் மட்டும் மொத்தம் இந்த பூமியை 310 முறை சுற்றினால் எவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டுமோ அவ்வளவு பயணம் செய்துள்ளதாக புள்ளி விபரங்களை எல்லாம் வெளியிட்டனர்.

vande bharat profit for loss

இந்நிலையில்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சந்திரசேகர் கௌர் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே நிர்வாகத்திடம் பதில் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து கெளர் கூறும் போது:"ரயில்வே நிர்வாகம் பல்வேறு விதமான தகவல்களை எல்லாம் வெளியிடுகிறது. ஆனால் வருமானம் குறித்த தகவல்கள் இல்லை என்பது ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது" என கூறினார்.

மேலும் அவர் கூறும் போது : "இந்திய ரயில்வே நிர்வாகம் வந்தே பாரத் ரயிலுக்கான தனியான வருமான பதிவுகளை கையாள வேண்டிய தேவை நிச்சயம் இருக்கிறது. இந்தியாவின் முதல் செமி ஹை ஸ்பீடு ரயில் லாபத்தில் செல்கிறதா நஷ்டத்தில் செல்கிறதா என்பதை நிச்சயம் இந்திய மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்." என கூறினார்.

இந்த வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவில் பல்வேறு ரூட்டுகளில் இயக்கப்பட்டு வந்தாலும், ஒரு சில ரூட்டுகளில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சிலர் ரூட்டுகளில் டிக்கெட் முழுவதும் புக் செய்யப்படாமல் பெரும்பாலான சீட்டுகள் காலியான நிலையில் வந்தே பாரத் ரயில்கள் பயணித்து வருகிறது. இதன் காரணமாகவே இந்த கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவது மிகப் பெருமையான விஷயமாக பேசப்பட்டு வரும் நிலையில், அந்த ரயில்கள் மூலம் எவ்வளவு வருமானம் ஈட்டப்படுகிறது என்ற தனித்த தகவல் ரயில்வே நிர்வாகத்திலும் இல்லை என்பது ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது. ரயில்வே நிர்வாகம் இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கீழ் கேட்கப்பட்ட கேள்வியில் பின்னால் உள்ள முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 18, 2024, 13:40 [IST]
English summary
Vande bharat profit loss no separate records railways
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X