கோடி, கோடியாய் செலவழித்து உருவாக்கப்படும் வந்தே பாரத் இரயிலில் இப்படியா!! காங்கிரஸ் கட்சி பகிர்ந்த வீடியோ...

வந்தே பாரத் (Vande Bharat) இரயில்களின் தரம் இந்த அளவிற்கு தான் உள்ளது என குற்றஞ்சாட்டி கேரள காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் அப்படி காட்சிப்படுத்தப் பட்டுள்ளது என்பதையும், வந்தே பாரத் இரயில்களை பற்றியும் இனி பார்க்கலாம்.

மத்திய அரசின் மிகுந்த கவனத்தில் தற்சமயம் இருக்கும் விஷயங்களுள் ஒன்று வந்தே பாரத் இரயில் ஆகும். சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் வந்தே பாரத் இரயில்கள் அரசாங்கத்திற்கு மிகுந்த பணத்தை மிச்சப்படுத்தி தரக்கூடியவை என்றும், வெளிநாடுகளின் உதவியில்லாமல் வந்தே பாரத் இரயில்களை உருவாக்க முடியும் என்றும் மத்திய அரசு நம்பிக்கை உடன் உள்ளது.

vande bharat rail inside water leak

நாட்டின் ஒவ்வொரு பகுதியாக வந்தே இரயில்கள் சேவைக்கு கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கின்றன. நமது சென்னையில் இருந்து கூட பெங்களூருக்கு தினமும் வந்தே பாரத் இரயில்கள் சென்று வருகின்றன. இவ்வாறு நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டு வந்தாலும், ஆரம்பத்தில் இருந்தே வந்தே பாரத் இரயில்களை பிரச்சனைகள் சுற்றி சுற்றி வருகின்றன.

ஆரம்பத்தில், தண்டவாளத்தை கடக்கும்போது மாடுகள் வந்தே பாரத் இரயில்களில் அடிப்படுவது தொடர்கதையாக இருந்தது. இரயில்களில் மாடு, ஆடு போன்ற பிராணிகள் அடிப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் மற்ற எந்த இரயிலும் மாடு மீது மோதியதால் பெரியதாக சேதமடைவது இல்லை. ஆனால் வந்தே பாரத் இரயிலின் முன்பக்க பேனல்கள் உடைந்து போனதை செய்திகளில் பார்த்திருந்தோம்.

vande bharat rail inside water leak

இந்த வரிசையில், வந்தே பாரத் இரயிலுக்குள் நீர் கசிவதாக வீடியோ ஆதாரத்துடன் கேரள காங்கிரஸ் கட்சி டுவிட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. இந்த வீடியோவில், வந்தே பாரத் இரயில் ஒன்றின் மேற்கூரையில் இருந்து நீர் மழைப்போல் விழுகிறது, இரயில் பணியாளர்கள் அந்த நீரினை பிளாஸ்டிக் கண்டெயினர்களில் சேகரிக்கின்றனர். இதன் காரணமாக நீர் விழும் பகுதிக்கு அருகே அமர்ந்திருப்பவர்கள் அசவுகரியமாக உணர்வதையும் இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

"விடைபெறும் போர்வைகள், ஹலோ குடைகளே: வந்தே பாரத் சவுகரியத்தை மறுவரையறை செய்கிறது" என்கிற கமெண்ட் உடன் கேரள காங்கிரஸ் கட்சி பதிவிட்டுள்ள இந்த டுவிட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள தெற்கு இரயில்வே, "கேரளாவில் இயங்கும் வந்தே பாரத் இரயிலில் இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. தெற்கு இரயில்வேயில் இயங்கும் மற்ற இரு வந்தே பாரத் இரயில்களிலும் இந்த சம்பவம் நடக்கவில்லை" என கூறியுள்ளது.

அதாவது, தெற்கு இரயில்வே நிர்வாகம் தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 3 வந்தே பாரத் இரயில்களில் இவ்வாறு நடக்கவில்லை என கூறி இந்த விஷயத்தில் இருந்து நழுவ பார்க்கிறது. இந்தியாவின் மேற்கு பகுதியில் சமீபத்தில் பிபார்ஜோய் சூறாவளி பலத்த காற்றுடன் கரையை கடந்தது. இதன் காரணமாக குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. ஆகையால், கேரள காங்கிரஸ் பதிவிட்டுள்ள இந்த வீடியோ குஜராத் அல்லது அதன் சுற்றியுள்ள மாநிலங்களில் காட்சிப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: குஜராத்தோ அல்லது தமிழகமோ இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது முக்கியமல்ல. எப்படி? ஏன் நடந்தது? என்ற கேள்விகளுக்கான பதிலை கண்டறிவதுதான் முக்கியமாகும். ஆனால் எங்களை கேட்டால், வந்தே பாரத் இரயில்களில் இவ்வாறான நிகழ்வுகள் அரிதாக நடக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கும் என நினைக்கிறோம். ஏனெனில் சமீபத்தில்தான் நமது ஒன் இந்தியா குழு சென்னை ஐசிஎஃப்-இல் வந்தே பாரத் இரயில்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதை வீடியோவாக காட்சிப்படுத்தி வெளியிட்டு இருந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, June 16, 2023, 21:51 [IST]
English summary
Vande bharat rail inside water leak kerala congress shares video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+