200 கி.மீ வேகத்தில் பயணிக்கும் புதிய வந்தே பாரத் ரயில்! இவ்வளவு சீக்கரமே வரப்போகுதா!
படுக்கை வசதிகள் கொண்ட ஏசி மற்றும் ஏசி அல்லாத வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தற்போது தயாராகி வருகிறது. இதன்படி ஒரு ரயிலுக்கு 16 முதல் 20 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக 10 ரயில்கள் உருவாக்கப்படுகிறது என நமக்கு தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் வந்தே பாரத ரயில்கள் பிரபலமாகி வருகின்றன. அதிக வசதிகள் மற்றும் அதிக வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில் பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வரிசையாக அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டே வருகிறது. மக்கள் மத்தியில் வந்தே பாரத் ரயில் மிகப் பெரிய அளவில் இடம் பிடித்துள்ளது. தற்போது பகல் நேரத்தில் பயணிக்கும் வகையில் இருக்கை வசதிகள் மட்டும் கொண்ட வந்தே பாரத் ரயிலில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் சென்னை ஐசிஎஃப் ஆலையில் படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது. அதன்படி படுக்கை வசதியுடன் கூடிய ஏசி மற்றும் ஏசி அல்லாத வந்தே பாரத் ரயில் பெட்டிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு ரயிலுக்கு 16 முதல் 20 பெட்டிகள் வீதம் ரயில்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
இது சொகுசு ரக வந்தே பாரத் ரயிலாக கருதப்படுகிறது. இந்த வந்தே பாரத் ரயில்கள் கிட்டத்தட்ட பயன்பாட்டிற்கு தயாரான நிலையில் வரும் மார்ச் மாதம் இது பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ஏப்ரல் முதல் தனது பயணத்தை துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

தற்போது பயன்பாட்டில் உள்ள வந்தே பாரத் ரயில்களை விட புதிதாக உருவாக்கப்பட்டுள்ள படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலில் பல்வேறு புதிய வசதிகள் மற்றும் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ரயில்களின் உட்புற கட்டமைப்பு சர்வதேச தரத்தில் பலரை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இதன் ஆயுட்காலமும் அதிகமாக இருக்கும்.
இந்த ரயில்கள் அனைத்தும் கவர்ச்சி தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட ரயில்களாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட ரயிலாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை இருந்தாலும் இது மிகப்பெரிய மாற்றம் என நாம் எதிர்பார்க்கலாம்.
தற்போது உள்ள பகல் நேர வந்தே பாரத் ரயில்கள் எல்லாம் அதிகபட்சம் 180 கிலோமீட்டர் வேகத்தில் தான் பயணிக்கும் திறன் கொண்ட ரயில்களாக உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது அதைவிட திறன் கொண்ட ரயில்களாக இந்த படுக்கை வசதி கொண்ட ரயில்கள் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நாம் முன்னரே சொன்னதுபடி இந்த ரயிலில் 16 ஏசி பெட்டிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக 16 பெட்டிகள் கொண்ட ரயில்வேயில் சுமார் 850 பயணிகள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் முதல் கட்டமாக இந்த ரயில் டில்லி மும்பை, டில்லி, ஹவுரா ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
இந்த ரயில்கள் நீண்ட தூரத்தில் இருக்கும் நகரங்களை இணைக்கும் வகையில் இரவு நேரத்தில் இயக்கப்படும் ரயில்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் பயணம் செய்வதால் அதிக வேகத்தில் பயணம் செய்ய இது அதிக திறன் கொண்ட ரயிலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள ராஜஸ்தானி ரயிலை விட அதிக வேகத்தில் பயணிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வந்தே பாரத் ரயில்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இரவு நேர பயணத்திற்காக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் இடையே மக்கள் பலர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதிக வசதிகள் இந்த ரயிலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இது வரும் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது பலரை குஷியாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








