படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் ரெடி! இந்த தேதியில் தான் முதலில் ஓடப்போகுது!

இந்தியாவில் மக்கள் பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தனது சோதனை ஓட்டத்தை துவங்கும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தற்போது சீட்டிங் வசதியுடன் மட்டும் கூடிய வந்தே பாரத் ரயில்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலுக்கு பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ரயில் குறித்த விரிவான விபரங்களையும் இதன் சோதனை ஓட்டம் குறித்த விபரங்களையும் தான் இங்கே நாம் காணப்போகிறோம்.

இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகமானபோது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. வெளிநாடுகளில் ஓடும் புல்லட் ரயிலுக்கு இணையாக பல்வேறு வசதிகள் உடன் கூடிய வந்தே பாரத் ரயிலுக்கு மக்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்துள்ளார்கள். தற்போது வரை இந்தியாவில் இயங்கி வரும் வந்தே பாரத் ரயில்களில் புக்கிங் குவிந்து வருகிறது.

Vande Bharat Sleeper Coach

தற்போது உள்ள வந்தே பாரத் ரயில்கள் எல்லாம் சீட்டிங் வசதி கொண்ட பகல் நேர ரயில்களாகவே இருக்கின்றன இதில் படுக்கை வசதி கொண்ட ரயில்கள் இதுவரை அறிமுகப்படுத்தப்படவில்லை. மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த பிறகு ரயில்வே நிர்வாகம் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் உருவாக்க முடிவு செய்தது அதை தற்போது தயார் செய்து உள்ளது. இதற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இந்தியாவில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் மிக நீண்ட தூரத்தில் இருக்கும் நகரங்களை இணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vande Bharat Sleeper Coach

முதல் கட்டமாக டெல்லியில் இருந்து மும்பை வரையிலான ரோட்டில் இந்த ரயில் இயக்கப்பட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. தற்போது இந்தியாவிலேயே பிஸியான ரயில் ரூட்டாக இந்த ரூட் தான் பார்க்கப்படுகிறது. இந்த ரூட்டில் ஏகப்பட்ட ரயில்கள் இயங்கினாலும், அத்தனை ரயில்களிலும் டிக்கெட் முழுவதுமாக புக்காகி வருகிறது. இது மட்டுமல்லாமல் பலர் டிக்கெட் கிடைக்காமல் வேறு வழியில் பயணம் செய்து வருகிறார்கள்.

இந்த ரூட்டில் தான் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலின் தேவை அதிகமாக இருப்பதால் முதல் கட்டமாக இந்த ரூட்டில் தான் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு இந்தியாவில் உள்ள பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ஒவ்வொரு ரூட்டாக இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

Vande Bharat Sleeper Coach

தற்போது வந்தே பாரத் ரயில்களை சென்னை ஐசிஎஃப் ஆலையில் தயாரித்தாலும் இதை கட்டுமானம் செய்யும் பொறுப்பு பிஇஎம்எல் நிறுவனத்திடம் இருக்கிறது. பெங்களூருவில் தான் இந்த ரயில் தற்போது கட்டுமானம் செய்யப்பட்டு வருகிறது. படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் இருக்கும். இதில் பத்து பெட்டிகள் 3 டயர் ஏசி பெட்டிகளாக வழங்கப்பட்டுள்ளன.

இதுபோக நான்கு பெட்டிகள் 2 டயர் ஏசி பெட்டிகளாக வழங்கப்பட்டுள்ளன. ஒரு பெட்டி மட்டும் முதல் வகுப்பு பெட்டியாக இணைக்கப்பட்டுள்ளது. இதுபோக ஒரு பெட்டியை சீட்டிங் மற்றும் லக்கேஜ் ரேக் பயன்பாட்டிற்காக உபயோகம் செய்யும் வகையில் இணைத்துள்ளார்கள். என்னதான் படுக்கை வசதி கொண்ட ரயில்லாக இருந்தாலும் இதில் சீட்டிங் மட்டும் உள்ள ஆப்ஷனும் இருக்கும்.

கட்டமாக இந்த ரயில் பயன்பாட்டிற்கு வரும் போது 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இது படிப்படியாக வேகம் உயர்த்தப்பட்டு 160 கிலோமீட்டர் வேகமாக மாற்றப்பட்டு அதன் பின்னும் அடுத்தடுத்து வேகம் உயர்த்தப்பட்டு 220 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ரயில் பயணிக்கும் வகையில் உருவாக்கப்படும் என தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. தற்போது இந்தியாவில் இயங்கும் பெரும்பாலான ரயில்கள் இரவு நேரம் நீண்ட தூரம் பயணிக்கும் முறைகளாகவே இருக்கின்றன. இந்த ரயில்களுக்கு மாற்றாக வந்தே பாரத் ரயில் வந்தால் நிச்சயம் பயணிகளுக்கு பெரும் வசதியாக இருக்கும். இதன் தயாரிப்பை அதிகப்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 26, 2024, 7:00 [IST]
English summary
Vande bharat sleeper coach trial run august 15 route speed details
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X