இந்த ரயிலில் பயணிகள் குளிக்க சுடுதண்ணி வரும்! புல்லட் ரயிலையே தூக்கி சாப்பிடும் வந்தே பாரத் ரயில் வந்தாச்சு!
வந்தே பாரத் ரயில்கள் பிரபலமாக இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய ரயில்வே நிர்வாகம் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தற்போது உருவாக்கியுள்ளது. அதிகாரப்பூர்வமாக இந்த ரயில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரயிலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த ரயில் என்னென்ன வசதிகள் எல்லாம் இருக்கின்றன? மற்ற ரயலுக்கும் இந்த ரயிலுக்கும் என்ன வித்தியாசம் என்ற விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்திய ரயில்வே நிர்வாகம் சென்னையில் உள்ள இன்டகரல் கோச் ஃபேக்டரி மூலம் டிரெயின் 18 என்ற செமி ஹை ஸ்பீடு ரயிலை உருவாக்கியது. இந்த ரயிலுக்கு வந்தே பாரத் என பெயர் வைக்கப்பட்டு இது தற்போது இந்தியா முழுவதும் இயங்கி வருகிறது. இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் வந்தே பாரத் ரயிலின் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

வந்தே பாரத் ரயில் படுக்கை வசதி கொண்ட புதிய ரயில் வரும் நவம்பர் 15ம் தேதி முதல் சோதனைக்கு உட்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. லக்னோவிற்கு இந்த ரயில் கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்திருந்த ரயில் சோதனை செய்யப்பட இருக்கிறது. தற்போது இந்தியாவில் 78 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் எல்லாம் அமரும் வசதி கொண்டவர்களாக மட்டுமே இருக்கின்றன.
தற்போது உள்ள வந்தே பாரத் ரயில் எல்லாம் நகரங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வந்தை பாரத் ரயில் நீண்ட தூரத்தில் இருக்கும் நகரங்களை உருவாக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ரயில் முழுமையாக ஏசி வசதி கொண்ட ரயிலாக இருக்கிறது. மொத்தம் 16 பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

இரவு முழுவதும் பயணம் செய்து சென்று சேர வேண்டிய இடத்தில் இணைக்கும் வகையில் இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படியாக ஒரு ரயிலை உருவாக்க இந்திய ரயில்வே நிர்வாகம் ரூபாய் 120 கோடியை செலவு செய்துள்ளது. சென்னை ஐசிஎஃப் ஆலையில் தான் இந்த ரயிலின் வடிவமைப்பு மற்றும் இன்ஜினியரிங் குறித்த விபரங்கள் எல்லாம் வடிவமைக்கப்பட்டது. இந்த ரயிலை பெங்களூருவில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது.
தற்போது இந்த ரயிலின் புரோட்டோடைப் மட்டுமே தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இது போன்ற 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களை உருவாக்க பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுபோக 20 பெட்டிகள் கொண்ட படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கவும் ஆர்டர் வந்துள்ளதாக சென்னை ஐசிஎஃப் நிறுவனத்தின் பொது மேலாளர் சுப்பா ராவ் தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து புதுடெல்லி வரை இணைக்கும் வகையில் ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலாக நீண்ட தூரம் பயணிக்கும் வந்தே பாரத் ரயிலே படுக்கை வசதியுடன் உருவாக்க தற்போது டெண்டர் கோவப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கான புரோபல்ஷன் சிஸ்டம், பேன்ட்ரிகார் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட ரயிலாக இதை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 18 மாதத்தில் இது முழுமையாக தயாராகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் எல்லாம் கவச் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட ரயிலாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் விபத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. அப்படியே விபத்திற்கு உள்ளானாலும் உள்ளே இருக்கும் பயணிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லாமல் இருப்பதற்காக கிராஷ் ஒர்தி கபிலர்கள் மற்றும் கிரஷ் பஃபர்கள் ரயில் முழுவதும் வழங்கப்பட்டுள்ளன.
இதுபோக ரயிலுக்குள்ளே தீ விபத்து ஏற்பட்டால் அதை கண்டறிவதற்காக அட்வான்ஸ் ஃபயர் டிடெக்சன் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் லக்னோவிற்கு சோதனைக்காக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த சோதனையின் போது எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ரயிலில் உள்ள கண்ட்ரோல்கள் மற்றும் எலெக்ட்ரிக்கல் சிஸ்டம் எல்லாம் எப்படி வேலை செய்கிறது என சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில் அதிகபட்சமாக 150 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் உருவாக்கி உள்ளார்கள். ஆனால் பாதுகாப்பு காரணமாக 160 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்ததாக வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்ட அதே முறையில் சரக்கு ரயிலையும் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது வரும் டிசம்பர் மாதம் விற்பனைக்கு தயாராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோக ஹைட்ரஜன் ப்யூயல் செல் தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் ரயிலை உருவாக்குவதற்கான தொழில் நுட்பமும் தற்போது வடிவமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த 6 மாதத்தில் இரண்டு ரயில்கள் இப்படியாக ஹைட்ரஜன் ஃப்யூயல் செல் மூலம் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் எல்எச்பி கோச்களை தயாரிப்பதை விட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ஆகும் செலவுகள் அதிகமாக இருக்கிறது. இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் இருக்கிறது. மிக முக்கியமாக ரயிலிலேயே இணைக்கப்பட்டிருக்கும் இன்ஜின் தொழில்நுட்பம் காரணமாகவும் இந்த ரயில் தயாரிப்புக்கான விலை அதிகமாக இருப்பதாக ஐசிஎஃப் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலில் முன்பே சொன்னதுப்படி கவச் தொழில்நுட்பம் இருக்கிறது. இதுபோக எமர்ஜென்சி டாக் பேக் யூனிட் இருக்கிறது. இதனால் பயணிகள் மற்றும் டிரைவர்கள் ஒருவருக்கொருவர் எளிமையாக பேசிக் கொள்ள முடியும். ஜிபிஎஸ் அடிப்படையிலான எல்இடி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதுபோக பயணிகளுக்கு ரீடிங் லைட், சார்ஜிங் செய்யும் இடம், விசாலமான லக்கேஜ் வைக்கும் வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ரயில் முழுவதும் பயோ வேக்கம் டாய்லெட் வழங்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் ஏசி கோச்சில் குளிப்பதற்கான இட வசதிகள் கூட வழங்கப்பட்டுள்ளது. அங்கு பயணிகளுக்கு சுடு தண்ணீர் கூட வழங்கப்படும். மேலும் இந்த ரயில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிகள் எல்லாம் வெடிக்காத வகையில் உள்ள லித்தியம் அயான் பேட்டரிகளாக வழங்கப்பட்டுள்ளன.
இதுபோக இந்த ரயிலில் விஜிலென்ஸ் கண்ட்ரோல் கருவி மற்றும் ஈவென்ட் ரெக்கார்டர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது போக ரயிலில் மேல்பகுதியில் உள்ள எலெக்ட்ரிக் ஒயர் பிரச்சனை ஏற்பட்டாலும் மூன்று மணி நேரம் ரயில் இயங்கும் வகையில் பேக்கப் வசதிகளும் இருக்கிறது.
தற்போது உருவாக்கப்பட்டுள்ள 16 பெட்டிகள் கொண்ட இந்த படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலில் 11 பெட்டிகள் 3 டயர் ஏசி பெட்டிகளாகவும், நான்கு பெட்டிகள் 2 டயர் ஏசி பெட்டிகளாகவும், ஒரு பெட்டி மற்றும் முதல் வகுப்பு ஏசி பெட்டியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 823 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் படுக்கை வசதி கொண்ட ரயில்களை நீண்ட நாட்களாக மக்கள் எதிர்பார்த்து வந்திருந்த கொண்டிருந்தார்கள். தற்போது இந்த பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தியுள்ளநிலையில், இந்த ரயிலில் பயணிக்க மக்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications









