5 ஸ்டார் ஓட்டல்களே தோத்து போயிரும்... மொத்தமா மாற போகும் வந்தே பாரத் ரயில்கள்... வாயை பிளக்கும் உலக நாடுகள்...

இந்தியாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Vande Bharat Express) ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. டிக்கெட் கட்டணம் (Ticket Price) மிகவும் அதிகம் என்ற விமர்சனத்தை, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சொகுசு வசதிகள் மற்றும் விரைவான பயணம் ஆகிய 2 அம்சங்களும் ஓரம் கட்டி விட்டன.

ஆனால் தற்போதைய நிலையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில், இருக்கை வசதி மட்டும்தான் வழங்கப்படுகிறது. அதாவது அமர்ந்து கொண்டு மட்டும்தான் பயணம் செய்ய முடியும். ஸ்லீப்பர் (Sleeper) எனப்படும் படுக்கை வசதி கிடையாது. ஆனால் கூடிய விரைவில் இந்த குறை நிவர்த்தி செய்யப்படவுள்ளது. ஆம், இன்னும் ஒரு சில மாதங்களில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்களின்படி பார்த்தால், படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சோதனை ஓட்டம் வரும் மே அல்லது ஜூன் மாதம் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vande Bharat Express

இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தவுடன், படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயணிகளின் பயன்பாட்டிற்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்டமாக டெல்லி-மும்பை மற்றும் டெல்லி-ஹவ்ரா ஆகிய வழித்தடங்களில், படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படலாம் என கூறப்படுகிறது.

டெல்லியில் இருந்து மும்பை மற்றும் ஹவ்ரா ஆகிய 2 நகரங்களுமே சுமார் 1,500 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. இதேபோல் சுமாராக 1,000 கிலோ மீட்டர் அல்லது அதற்கும் அதிகமான தொலைவு கொண்ட வழித்தடங்களில் மட்டுமே படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vande Bharat Sleeper Coach

படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 15-20 பெட்டிகள் இருக்கலாம் என்று தெரிகிறது. படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் எப்படி இருக்கும்? என்பதை காட்டும் புகைப்படங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. அந்த புகைப்படங்கள் பயணிகள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்னும் ஒரு சில மாதங்களில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல், அந்த ஆர்வத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தமிழகத்தில் இருந்து புறப்படும் வகையிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வழியாக செல்லும் வகையிலும், படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படவிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தால், அதற்கு அடுத்த ஒரு சில வாரங்களிலேயே, படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும். எப்படி பார்த்தாலும் அதிகபட்சமாக வரும் ஜூலை மாதத்திற்கு உள்ளாக படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படலாம் என்பது எங்களுடைய கருத்து.

டிக்கெட் கட்டணம் சற்று அதிகமாக இருந்தாலும் கூட, தொலை தூர பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு, படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயனுள்ளதாக இருக்கும். எனவே அடிக்கடி தொலை தூர பயணங்களை மேற்கொள்ள கூடிய நபர்கள், இந்த ரயில்களின் அறிமுகத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகம் செய்யும் அதே நேரத்தில், தற்போது சேவையில் உள்ள பல்வேறு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, April 29, 2024, 23:57 [IST]
English summary
Vande bharat sleeper trail run will start soon all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+