வெளிநாடே வியந்து பாக்குது! வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?

இந்தியாவில் வந்தே பாரத் ரயிலில் ஸ்லீப்பர் வெர்ஷன் ரயில்கள் விரைவில் செயல்பாட்டிற்கு வகிறது. BEMLநிறுவனம்இந்தியாவில் ஏற்கனவே 10 ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கிறது.இது மட்டுமல்ல இந்தியா மற்றும் ரஷ்ய ஆகிய நாடுகள் இணைந்து Kinet என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் 120 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி இந்நிறுவனம்உருவாக்கும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த ரயில் பெட்டியில் உள்ள அம்சங்கள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் முதல் ஏசி கம்பார்ட்மென்டின் கான்செப்ட் வெர்ஷனை வெளியிட்டுள்ளது. இந்த ரயில் ராஜ்தானிரயிலை விட அதிக செளகரியம் நிறைந்த ரயிலாக இது உருவாக்கப்படுகிறது. இது உலக தரமான வசதிகள் கொண்ட ரயிலாக உருவாக்கப்படுகிறது. முக்கியமாக இதன் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் குஷன் வைடத்த பெர்த் இடம் பெறுகிறது.

vande Bharat Sleeper Train

இதில் பாட்டில் வைக்கும் ஹோல்டர், லக்கேஜ் வைக்க அதிக இட வசதி, ஸ்னாக்ஸ் டேபிள், உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. இது மட்டும் அல்லாமல் பொதுவாக இடத்தில் டேபிள் வழங்கப்பட்டுள்ளுது. மேலும் இந்த புதிய டிசைனில் மேலே உள்ள பெர்த்திற்கு ஏற படி வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் எளிதாக மேல உள்ள பெர்த்திற்கு ஏறி செல்ல முடியும் வகையில் வழங்கப்பட்டுள்ளுது.

இது போக ஒவ்வொர பயணிகளுக்கும் தனியாக ரீடிங் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. காம்பேக்டான ஸ்டோரேஜ் வசதி, மேலும் செல்போன் லேப்டாப்களை சார்ஜ் செய்ய இன்பில்டாக யூஎஸ்பி போர்ட்கள் வழங்கப்பட்டிருக்கிருக்கும். இந்த ரயிலின் கான்செப்ட் வெர்ஷன் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் தயாரிப்புவெர்ஷனில் சில மாறுபாடுகள் இடம் பெற வாய்ப்புள்ளது.

vande Bharat Sleeper Train

இந்த டிசைனை kinet என்ற நிறுவனம் செய்துள்ளது.இந்த ரயிலின் தயாரிப்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லத்தூர் ஆலையில் வைத்து தயாரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்படும் போது மணிக்கு 180 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வகையில் உருவாக்கப்படும். ஆனால் செயல்பாட்டிற்கு வரும் போது அதிகபட்சம் 160 கி.மீ வேகம் வரை மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்படும்.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தவேக குறைப்பு கொண்டு வந்துள்ளது. இது மட்டுமல்ல டிராக்கின் நிலைக்கு ஏற்ப வேக கட்டுப்பாடு மாறும். இதனால் ரியல் வேர்ல்டில் இந்த ரயில் இன்னும் வேகம் சற்று குறைவாகவே விற்பனைக்கு வரவாய்ப்புகள் உள்ளது. வெளியிலிருந்துஇந்த ரயிலை பார்க்கும் போது அதன் சேர்கார் வெர்ஷன் போன்ற தோற்றத்தில் தான் இருக்கும். ஆனால் இது உள் பகுதி முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டதாக வடிவமைக்கப்படுகிறது.

vande Bharat Sleeper Train

இந்த ரயில் நீண்ட தூரத்தில் இருக்கும் இரண்டு நகரங்களை இணைக்கும் வகையில் இரவு நேர ரயிலாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ரயில் செல்ஃப் புரோபல்டு ரயில்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவாக பிக்கப் செய்யவும், வேகமாக பிரேக்கிங் செய்யவும் முடியும். இதனால் ரயில் நிலையம் வருவதற்க பல கி.மீ முன்பே வேகத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் கிடையாது.

இந்த ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் இடம் பெறவுள்ளது. இதில் ஒரு முதல் வகுப்பு ஏசி பெட்டி, 4 2ம் வகுப்பு ஏசி பெட்டிகள், மற்றும் 11 3ம் வகுப்புஏசி பெட்டிகள் பொருத்தப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2026ம் ஆண்டு இறுதிக்கள் 200 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

vande Bharat Sleeper Train

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரயில்வே மிக வேகமாக வளர்ந்து வருகிறது மற்ற நாடுகளை சாராமல் இந்தியாவே மிகப்பெரிய அளவில் சிறப்பானரயில்களை தயாரிப்பது இந்தியாவில் ரயில்வே துறையின் வளர்ச்சியை காட்டுகிறது. இதனால் இந்தியா நல்ல வளர்ச்சியை பெறும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 21, 2025, 15:50 [IST]
English summary
Vande bharat sleeper train ac coach top features images
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X