5 ஸ்டார் ஹோட்டலே தோத்துபோகும் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்! சோதனைக்கு ரெடி

சென்னை ஐசிஎஃப் ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ள படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை தற்போது சோதனை செய்வதற்காக கான்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது. அதன்படி ரயில் இந்தியா டெக்னிக்கல் மற்றும் எக்னாமிக்ஸ் சர்வீஸ் நிறுவனம் இந்த சோதனையை இன்டல் செர்டிஃபையர் ஸ்பா என்ற நிறுவனத்துடன் இணைந்து செய்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் வந்தே பாரத் பெயர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. மக்கள் பலர் வந்தே பாரத் ரயில்களில் பயணிக்க அதிகம் விருப்பம் காட்டி வருகிறார்கள். இதனால் நாளுக்கு நாள் வந்தே பாரத் ரயில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் செயல்பட்டு வருகின்றன.

vande bharat

தற்போது இந்தியா முழுவதும் வெறும் இயற்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் வந்தே பாரத் பெயர்கள் பெரும்பாலும் பகல் நேர ரயில்களாகவே இயக்கப்படுகின்றன. இரவு நேரங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதில்லை. இரவு நேர நீண்ட தூர பயணத்திற்கான படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தற்போது தயாராகி வருகின்றன.

சாதாரண வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாராகும் அதே சென்னை ஐசிஎப் ஆலையில் தான் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலும் தற்போது தயாராகியுள்ளது. இது பல்வேறு சொகுசு வசதிகள் மற்றும் சர்வதேச தரத்தில் இருக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான புகைப்படங்கள் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தன. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.

vande bharat

இந்நிலையில் சென்னை ஐசிஎஃப் ஆலையில் படுக்கை வசதியுடன் கூடிய முதல் வந்தேபாரத் ரயில் தயாராகி விட்டதாக தெரிகிறது. இந்த வந்தேபாரத் ரயிலை சோதனை செய்ய சென்னை ஐசிஎஃப் ஆலை நிர்வாகம் ரயில் இந்தியா டெக்னிக்கல் மற்றும் எக்னாமிக் சர்வீஸ் சென்டர் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இந்த நிறுவனமும் இன்டெல் செர்டிஃபையர் என்ற நிறுவனமும் சேர்ந்து படுக்கை வசதியுடன் கூடிய வந்தேபாரத் ரயிலை தனி நபர் பாதுகாப்பு சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த சோதனையின் போது இரு நிறுவனங்களும் சேர்ந்து பயணிகள் இந்த படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் போது என்ன மாதிரியான அனுபவங்களை பெறுவார்கள் என ரிவ்யூ செய்யப் போகிறார்கள். முக்கியமாக இதன் வடிவமைப்பு குறித்த ரிவ்யூ இறுதிக்கட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ரிவியூ எல்லாம் நடந்த திட்டமிட்டுள்ளார்கள்.

vande bharat

இந்த ரயில் பயணத்தின் போது ஆபத்து ஏற்பட்டால் பயணிகள் தப்பிப்பது எப்படி அவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் எப்படி எல்லாம் இருக்கின்றன என்பது குறித்து இந்த சோதனையில் ஆய்வு செய்யப் போகிறார்கள் விரைவில் இந்த சோதனை எல்லாம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தற்போது இரு நிறுவனங்களும் தயாராகி வருகின்றன. விரைவில் சோதனை திட்டமிடப்பட்டு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்வே நிர்வாகம் தற்போது வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை விரைவாக தயாரித்து சோதனை செய்ய கொண்டு வருவதன் மூலம் விரைவில் இதை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவது நமக்கு தெளிவாக தெரிகிறது. இதனால் இந்தியாவில் தற்போது நடந்து வரும் பொது தேர்தல் முடிந்து புதிய மத்திய அரசு ஆட்சி அமைத்த பின்பு வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

அதற்காக தான் தற்போது ரயில்வே நிர்வாகம் இந்த பணிகளை துரிதமாக செய்து வருகிறது. இந்த சோதனை வெற்றி அடையும் பட்சத்தில் விரைவில் வந்தே பாரத் படுக்கை வசதி கொண்டார்கள் நீண்ட தூர நகரங்களை இணைக்கும் வகையில் இரவு நேர ரயிலாக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரயில் பயணங்களை மக்கள் அதிகம் தேர்வு செய்யும் நேரம் என்பது நீண்ட தூர ரயில் பயணம் தான் அதுவும் இரவு நேரத்தில் பயணிக்கும் ரயிலில் தான் மக்கள் அதிகம் பயணித்து வருகிறார்கள். இதனால் வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள் நிச்சயம். மக்களுக்கு மிகப்பெரிய தேவையாக இருக்கிறது. இது நிச்சயம் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 7, 2024, 16:56 [IST]
English summary
Vande bharat sleeper trains safety assessment details by rites
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X