வந்தே பாரத் ஸ்லீப்பருக்கு முன்னாடி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஒன்னுமே இல்லையா! ஆகஸ்டு15 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு!
இந்தியன் ரயில்வேஸ் வந்தே பாரத் ரயிலின் ஸ்லீப்பர் வெர்ஷனை வெகுவிரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த ரயில் மீது இந்திய ரயில் பயணிகள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இப்போது பயன்பாட்டில் இருக்கும் வந்தே பாரத் ரயில்கள் அனைத்தும் அமர்ந்துக் கொண்டும் செல்லும் வகையில் மட்டுமே இருக்கைகளைக் கொண்டிருக்கின்றது. இதற்கு இந்திய ரயில் பயணிகள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே வந்த பாரத் ரயிலில் ஸ்லீப்பர் வெர்ஷனையும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் இந்தியன் ரயில்வேஸ் களமிறங்கி இருக்கின்றது.
நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற ரயிலாக வந்தே பாரத் ரயிலை மாற்றும் ஓர் முயற்சியாகவே அதில் ஸ்லீப்பர் வெர்ஷன் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட உள்ளது. இதன் டாப் ஸ்பீடும் மணிக்கு 200 கிமீட்டருக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகின்றது. இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளைத் தாங்கிய ஓர் ரயிலாகவே வந்தே பாரத் ரயில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

மேலும், ஸ்லீப்பர் வெர்ஷன் வந்தே பாரத் ரயில்கள் இப்போது பயன்பாட்டில் இருக்கும் அனைத்து ரயில்களைக் காட்டிலும் பலமடங்கு மேம்பட்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஏன் இப்போது பயன்பாட்டில் இருக்கும் வந்தே பாரத்தை-விடவே பலமடங்கு சிறந்ததாக இது இருக்குமாம். அந்வகையில், சொகுசாக படுத்துக் கொண்டே பயணிக்க சிறந்த ரயிலாக புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் இருக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
மேலும், இந்த ரயில்கள் இந்தியன் ரயில்வேஸின் முக்கிய ரயில்களான சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயில்களுக்கு மாற்றாகக் கொண்டு வரப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்தியன் ரயில்வேஸின் மிக சிறந்த ரயில்களாக சதாப்தி மற்றும் ராஜ்தானி ஆகியவை அறியப்படுகின்றன. இவற்றையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரீ-பிளேஸ் இருக்கின்றது.
இதற்கான பரிந்துரைகளே தற்போது முன் வைக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், இதற்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது. அனுமதி கிடைக்கும்பட்சத்தில் சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயில்கள் நீக்கப்பட்டு அவற்றிற்கு பதிலாக அந்த ரூட்களில் வந்தே பாரத் ஸ்லீப்பர் வெர்ஷன் ரயில் இயக்கப்படும்.
இந்த நிலையே தற்போது பல்வேறு கேள்விகளுக்கு காரணமாக அமைந்திருக்கின்றது. மிக முக்கியமாக வந்தே பாரத் ஸ்லீப்பர், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலை விட சிறந்ததா என்கிற கேள்வியே பலருக்கும் எழும்பியுள்ளது. இதற்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
வந்தே பாரத் ஸ்லீப்பர் வெர்ஷனின் உட்பக்கம் எப்படி இருக்கும்? பயணிகளுக்கு சிறந்த வசதியையும், சூழலையும் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலேயே இந்த ரயிலின் உட்பக்கம் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. மேல் மற்றும் நடுத்தர பெர்த்-களை பயணிகள் சுலபமாக அணுகுவதற்கு ஏதுவாக படிக்கட்டுகள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.
கொஞ்சம் வயசானவர்களாலும் இதில் ஏறி மேல் பெர்த்திற்கு போக முடியும். மேலும், இதன் உட்பக்கம் தற்போது பயன்பாட்டில் இருக்கும் வந்தே பாரத் ரயில்களைப் போலவே மிகவும் பிரீமியமான லுக்கில் இருக்கின்றது. மேம்படுத்தப்பட்ட ஏர் கண்டிஷனிங் மற்றும் தூசி கூட புகாத வண்ணம் சீல் செய்யப்பட்ட சூழல் ஆகியவற்றையே இது கொண்டிருக்கின்றது.
சிறந்த இருக்கை மற்றும் கதவுகள் எப்படி இருக்கும்? வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் ராஜ்தானியை விட மிக சிறந்த குஷன்களே வழங்கப்பட்டு இருப்பதாக தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், மிக சிறப்பான தூக்கத்தை இந்த ரயிலில் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிகின்றது.
இதுபோதாதென்று பயணிகளின் சௌகரியத்தை மேம்படுத்தும் விதமாக பக்கவாட்டு பகுதிகளிலும் குஷன்களை சேர்க்கும் பிளானில் இந்தியன் ரயில்வேஸ் உள்ளது. கதவுகளைப் பொருத்த வரை, மெட்ரோ ரயில்களில் காணப்படுவதைப் போலவே ஆட்டோமேட்டிக் டோர்களே இந்த ரயிலில் இடம் பெற இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால் இதன் கன்ட்ரோல் ரயில் பைலட்டிடமே இருக்குமாம். அதேவேளையில், இரண்டு பெட்டிகளுக்கு இடையே இருக்கும் கதவுகள் பயணிகள் வந்தாலே திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் என தெரிகின்றது.
அதிக வேகத்தில் பயணிக்கும், அதேவேளையில் அதிர்வுகள் இருக்காது: வந்தே பாரத் ரயில்கள் சொகுசான பயணங்களுக்கே பெயர்போனதாக இருக்கின்றது. அந்தவகையில், வந்தே பாரத் ஸ்லீப்பர் வெர்ஷனும் அதிர்வுகள் மற்றும் அலுங்குல் குலுங்கள் இல்லாத பயண அனுபவத்தை வழங்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதேபோல், மணிக்கு160 கிமீ இந்த ரயில் பயணிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் ராஜ்தானி மிகவும் லேசாகவே பின் தங்கி இருக்கின்றது.
பாதுகாப்பு: புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் மிக சிறந்த பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, இப்போது பயன்பாட்டில் இருக்கும் ரயில்களைப் போல இது அவ்வளவு எளிதில் தீ விபத்தில் சிக்கி விடாது என கூறப்படுகின்றது.
மேலும், தீ பாதுகாப்பு அமைப்பு இஎன் 45545 எச்எல்3 (EN 45545 HL3) தீ பாதுகாப்பு தரநிலைகளை பூர்த்தி செய்யும் வகையிலேயே வந்தே பாரத் ஸ்லீப்பர் வெர்ஷன் தயார் செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. அதேநேரத்தில், ஒரு பெட்டியில் தீ பிடித்தாலும் மற்றொரு பெட்டிக்கு தீ பரவாதாம். இவ்வாறே இந்த ரயில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.
லோகோமோட்டிவ் இதில் இருக்காது: ராஜ்தானி ரயில் இயக்கத்திற்கு லோக்கோமோட்டீவே உதவுகின்றது. ஆனால், வந்தே பாரத் ஸ்லீப்பரின் இரு முனைகளிலும் சுயமாக இயக்கப்படுவதற்கான எஞ்சின்கள் வழங்கப்பட்டு இருக்கும். ஆகையால், லோக்கல் ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களைப் போல வந்த வேகத்தில் வந்த வழியிலேயே மீண்டும் இந்த ரயிலால் பயணிக்க முடியும். அதுவே ராஜ்தானியாக இருந்தால் லோக்கோமோட்டீவை தனியாக கழட்டிச் சென்று மீண்டும் முன் பக்கத்தில் பொருத்த வேண்டி இருக்கும். இந்த நிலை வந்தே பாரத் ஸ்லீப்பருக்கு இருக்காது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்தவையே ராஜ்தானி மற்றும் சதாப்தி போன்ற பிற ரயில்களைக் காட்டிலும் வந்த பாரத் ஸ்லீப்பர் மிக சிறந்தவை என்பதற்கு சான்றாக இருக்கின்றன. இந்த ரயில் சௌகரியமான ரயில் பயண அனுபவத்தை மட்டுமல்ல மிக சிறந்த பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு இருப்பதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆகையால், கட்டாயம் இந்த ரயில் மற்ற ரயில்களைக் காட்டிலும் மிக சிறந்த ரயிலாக இருக்கும் என கணிக்க முடிகின்றது. இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் ஆகஸ்டு 15 ஆம் தேதி அன்றே பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர், டெல்லி - மும்பையே இடையே குஜராத் வழியாக இயங்க இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








