வந்தே பாரத் கழிவறை உள்ளே இருந்து கிளம்பிய புகை! பதறியடித்து வந்த ஊழியர்களுக்கு கிடைத்த ட்விஸ்ட்!

வந்தே பாரத் ரயிலில் டாய்லெட் உள்ளே பயணி ஒருவர் புகை பிடித்ததால் ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. அதன் பின்பு ரயிலில் இருந்து புகை வெளியேற்றப்பட்டு பிரச்சனை சரி செய்யப்பட்ட பின்பே 15 நிமிடம் காலதாமத்தில் ரயில் கிளம்பியது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

ரயிலில் பயணிக்கும் போது மது அருந்துவது மற்றும் புகைப்பிடிப்பது என்பது சட்டப்படி குற்றமான விஷயமாகும். ஆனால் அதையும் மீறி சாதாரண ரயில் பெட்டிகளில் பயணிக்கும் போது அவ்வப்போது பயணிகள் சட்ட விதிமுறைகளை மீறி புகை பிடிக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். குறிப்பாக டாய்லெட் உள்ளே சென்று புகை பிடிப்பதை ஒரு வழக்கமாக சிலர் செய்து வருகிறார்கள்.

vande bharat smoking

இந்நிலையில் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்படும் போது முழுமையாக அடைக்கப்பட்ட ரயிலாக இது தயாரிக்கப்பட்டது. ரயிலில் உள்ளே இருந்து எதுவும் வெளியேற முடியாது. அதே நேரம் ரயிலில் வெளியே இருந்து எதுவும் ரயிலுக்குள்ளேயும் வர முடியாத வகையில் தான் இது உருவாக்கப்பட்டது. வந்தே பாரத் ரயிலிலும் புகை பிடிப்பது என்பது முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. இந்த ரயிலில் பயணித்த பயணி ஒருவர் சரியாக ரயில் கோழிக்கோடு பகுதிக்கு வரும்போது ரயிலின் கழிவறை உள்ளே சென்று இவர் கையில் வைத்திருந்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துள்ளார். கழிவறை உள்ளேயே இவர் சாவகாசமாக புகை பிடித்துள்ளார்.

vande bharat smoking

வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டால் அதை கண்காணித்து ரயில் ஓட்டுநரை எச்சரிப்பதற்காக கருவி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி பாத்ரூம் உள்ளே புகை ஏற்பட்டதை தீ விபத்து என கருதி அலாரம் மூலம் எச்சரித்தது. இந்த அலாரம் வந்தவுடன் ரயிலின் ஓட்டுனர் பதறியடித்து ரயிலை நிறுத்தினார். பின்னர் ரயிலில் உள்ள ஊழியர்கள் அலாரம் வந்த பெட்டியை நோக்கி விரைந்தனர்.

அங்கு சென்று அவர்கள் சோதனை செய்த போது ரயிலில் உள்ள கழிவறையில் உள்ளே பயணி ஒருவர் புகைபிடித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து ரயில்வே போலீசாரிடம் ரயில்வே ஊழியர்கள் ஒப்படைத்தனர். மேலும் அவர் புகை பிடித்ததால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்து ரயிலில் உள்ளே இருந்து புகையை முழுவதுமாக வெளியேற்றி எல்லாம் சரி செய்த பின்பு ரயில் கிளம்பிச் சென்றது.

vande bharat smoking

இந்த சம்பவத்தால் ரயில் சுமார் 15 நிமிடம் தாமதமாக கிளம்பியது. ரயிலில் உள்ளே புகை பிடித்தவர் புகை பிடித்தது மட்டுமல்லாமல் கழிவறை உள்ளே மதுபானமும் அருந்தியுள்ளார். ரயில்வே போலீசார் இந்த பயணி மீது வழக்கு பதிவு செய்து அவருக்கு அபராதம் விதித்தனர். வந்தே பாரத் ரயிலில் இது போன்ற புகை பிடிக்கும் சம்பவம் நடப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல.

இதற்கு முன்பு இதே கேரளாவில் இதே காசர்கோடு திருவனந்தபுரம் வந்தே பாரத் ரயிலில் பட்டாம்பிகை பகுதியில் இப்படியாக பயணி ஒருவர் கழிவறை உள்ளே சென்று புகை பிடித்த சம்பவம் நடந்தது அப்பொழுது ரயில் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து இரண்டாவது முறையாக அதே ரயிலில் பயணி ஒருவர் கழிவறை சென்று புகை பிடித்த சம்பவமும் நடந்துள்ளது.

vande bharat smoking

வந்தே பாரத் ரயில் என்பது முற்றிலும் அடைக்கப்பட்ட முழுவதும் குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகளை கொண்டதாகும். இங்கு புகை பிடிப்பது என்பது சட்டப்படி தவறான விஷயமாகும். பலர் இதை மதிக்காமல் இன்றும் ரயிலில் பயணிக்கும் போது புகை பிடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுக்கு மட்டுமல்ல உடன் பயணிக்கும் சக பயணிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் விஷயமாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் ரயில் மட்டுமல்ல இந்தியாவில் ஓடும் எந்த ரயில்களிலும் பயணிக்கும் போது புகைப்பிடிப்பது என்பது சட்டப்படி குற்றமாகும். இதை ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிக்கும் பலர் அசாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் அதே ஏசி உள்ள பெட்டி மற்றும் வந்தே பாரத் போன்ற ரயில்களில் பயணிக்கும் போது இது மிகப்பெரிய பிரச்சினையாக மாறிவிடுகிறது. இதை பயணிகள் கவனத்தில் கொண்டு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, December 1, 2023, 11:14 [IST]
English summary
Vande bharat smoking passenger delays express 15 min
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X