வந்தே பாரத் ரயிலில் இந்த விஷயத்தை மட்டும் பண்ணாதீங்க! உங்க குழந்தைங்க உசுருக்கே ஆபத்தாகிடும்!

வந்தே பாரத் ரயிலில் பயணித்த தம்பதியினர் தங்கள் குழந்தைகளை ஸ்நாக்ஸ் வைக்கும் டிரேயில் அமர வைத்து பயணிக்க வைத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இப்படியான செயல்களை மக்கள் எக்காலத்தை கொண்டும் செய்யக்கூடாது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பழக்கம் ரயிலில் மோசமான சேவையை கொண்டு வர வழி வகுத்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பகல் நேர ரயில்களில் அமர்ந்து செல்லும் சீட்டுகள் மட்டுமே இருக்கும். இந்த மாதிரியான ரயில்களில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணிக்க முடியும். இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக ஒவ்வொரு சீட்டின் பின்புறமும் ஸ்னாக்ஸ் டிரே ஒன்று வழங்கப்பட்டிருக்கும். வந்தே பாரத் உள்ளிட்ட சில முக்கியமான ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு ஸ்நாக்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் எல்லாம் நேரடியாக சீட்டுக்கே வந்து வழங்கப்படும்.

vande bharat snack tray

அவர்கள் அதை வைத்து சாப்பிட வசதியாக முன் பக்க சீட்டில் ஸ்நாக்ஸ் டிரை வழங்கப்படும். சமீபத்தில் வந்தே பாரத் ரயிலில் தனது இரண்டு குழந்தைகளுடன் பயணித்த தம்பதியினர் ஸ்நாக்ஸ் ரேக்கில் அவர்கள் குழந்தைகளை அமர வைத்து பயணித்துக் கொண்டிருந்தார்கள். இதை அதில் பயணம் செய்த ரயில்வே அதிகாரியான ஆனந்த் ரூபானகுடி என்பவர் புகைப்படம் எடுத்து அதை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவில் வந்தே பாரத் ரயில் சீட்டின் பின்பக்கம் உள்ள ஸ்நாக்ஸ் டிரேவில் இரண்டு குழந்தைகள் அமர வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முகம் மறைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை பகிர்ந்த அவர் அதில் "ரயில்களில் ஸ்நாக்ஸ் டிரே மற்றும் மற்ற பாகங்கள் உடைவதற்கு இது ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது.

வந்தே பாரத் உள்ளிட்ட மற்ற ரயில்களில் இந்த பிரச்சினை அதிகமாக இருக்கிறது. இதை புகைப்படம் எடுத்து ஆவணமாக பதிவிட்டாலும் பலர் இதை பயணிகள் மீது நான் குற்றம் சொல்வதாக சொல்வார்கள்" என குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவு வைரலாக பரவியது. பலர் இந்த பதிவுக்கு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து அவரவர் விருப்பங்களையும் அவர்களுக்கு தோன்றும் விஷயங்களையும் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக இதில் ஒருவர் இந்த ஸ்நாக்ஸ் டிரை தற்போது எடை குறைவாக தான் தாங்கும் என்பது உண்மை என்றாலும், அடுத்து வரும் வந்தே பாரத் ரயிலில் இதன் உறுதி தன்மையை அதிகரித்து சிறு குழந்தைகளையும் அமர வைக்கும் வகையில் இதை உருவாக்க வேண்டும் என பதிவிட்டு இருந்தார்.

அதற்கு பதில் அளித்த ஆனந்த் விமானங்களிலும் இப்படியாக செய்தால் நல்லா இருக்கும் என பதில் இருந்ததால். மற்றொரு எக்ஸ் பயனர் இதுபோன்ற மோசமான வகையில் நடந்து கொள்ளும் பயணிகளுக்கு ஏன் அபராதம் மிதிக்கக்கூடாது? என கேட்டிருந்தார். இந்த கேள்வி பலருக்கும் நியாயமாக பட்டது.

மேலும் அவர் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் பயணிக்கும் போது அதற்கு முன்னர் அதைப் பெட்டியில் பயணித்த பயணி ஒருவர் மோசமான பொருட்களை தரையை போட்டு சென்று விட்டதாகவும் அதனால் அவர் காலை கூட கீழே வைக்க முடியாத சூழ்நிலையில் பயணித்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளித்த இப்படியாக அபராதம் மிதிக்க வாய்ப்பு உள்ளது எனவும், முதலில் பயணிகளை ரயில்வே அதிகாரிகள் விழிப்புணர்வு செய்ய வேண்டும் மேலும் இவ்வாறு செய்யும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் அதன் பின்பு அதையும் மீறி செய்தால் அபராதம் இருக்கலாம் என கூறியிருந்தார்.

மற்றொரு பயனர் இந்த ரேக்குகளின் பலத்தை ஏன் அதிகரிக்க கூடாது என கேட்டிருந்தார் அதற்கு பதில் அளித்த ஆனந்த் ஏற்கனவே இது பலமாக தான் உள்ளது. இது ஸ்நாக்ஸ் டிரே தான் ஸ்நேக்ஸ் வைக்கும் அளவுக்கு இதில் பலன் இருக்கிறது. அதை சாட்சி நிறைவாக பயன்படுத்தினால் இந்த பிரச்சினையும் இருக்காது என கூறியிருந்தார்.

ரயிலில் உள்ள இந்த ஸ்நாக்ஸ் வகைகள் அதிகமான எடையை தாங்கும் அளவுக்கு திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்காது. இதில் உணவுப் பொருட்களை வைத்து சாப்பிடும் அளவிற்கு தான் பலம் இருக்கும். அதில் எந்த பிரச்சனையும் இருக்காது. உணவுப் பொருள் தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை இதில் வைக்க முடியும். ஆனால் குழந்தைகளை இதில் அமர வைப்பது என்பது முற்றிலும் தவறான விஷயமாகும். இது ரயில்வே சொத்துக்கு சேதம் விளைவிக்கும் விஷயமாக கூட மாறிவிடும்.

இதனால் நீங்கள் ரயில் பயணிக்கும் போது இப்படியான ஸ்நாக்ஸ் டிரைகளில் குழந்தைகளை அமர வைத்து பயணம் செய்யாதீர்கள். இது பயணம் செய்யும்போது உங்களுக்கு வசதியாக இருக்கலாம் ஆனால் இதில் ஆபத்தும் நிறைந்ததாக இருக்கும். ரயில் பிரேக் பிடிக்கும்போது இதில் அமர வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் அதில் இருந்து கீழே விழ அதிகமான வாய்ப்புகள் உள்ளன. அதனால் இது மிகவும் ஆபத்தான விஷயமாக இருக்கும். இதை தவிர்த்து விடுவது நல்லது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிறிய குழந்தைகளை ரயிலில் பயணம் செய்யும்போது இப்படியான சீட்டர் கோட்ச்களில் நீங்கள் பயணித்தால் குழந்தைகளை உங்கள் மடியிலேயே வைத்துக் கொள்வது தான் நல்லது. ரயில்களில் ஆங்காங்கே அவர்களை நடக்க விடுவதும் நல்லது கிடையாது. இது போன்ற சீட்டுகளில் அமர வைப்பதும் சிறந்தது கிடையாது. எப்பொழுதும் குழந்தைகளை பாதுகாப்பாக உங்களுடனே வைத்திருங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 23, 2023, 12:42 [IST]
English summary
Vande bharat snack tray controversy railway official disapproval
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+