சிறுத்தைக்கும் வந்தே பாரத் ரயிலுக்கும் ரேஸ் வைத்தால் எது ஜெயிக்கும் தெரியுமா?
இந்தியாவில் வந்தே பாரத் ரயில்களுக்கு மக்கள் மத்தியில் மவுசு இருக்கும் நிலையில், இந்தியாவின் வேகமான ரயிலாக வந்தே பாரத் ரயில் தான் இருக்கிறது. என்னதான் இந்தியாவின் வேகமான ரயில் என்ற பெயர் பெற்றாலும், பலர் இந்த ரயில் பயணம் செய்து எதிர்பார்த்த வேகம் இல்லை என கருதுகிறார்கள். ஏன் இவ்வாறு கருதுகிறார்கள்? இதற்கு பின்னால் நடப்பது என்ன? என்ற விரிவான விவரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
இந்தியாவில் வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, வெளிநாடுகளில் உள்ள புல்லட் ரயிலுக்கு இணையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரயில் என்று இது அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் இந்த ரயில் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. இதனால் இந்த ரயில் ஒவ்வொரு ரூட்டிலும் அறிமுகப்படுத்தப்படும் போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

ஏகப்பட்ட மக்கள் இந்த ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகவே தங்கள் பயணத் திட்டங்களை எல்லாம் போட்டு இந்த ரயில் டிக்கெட்களை புக் செய்து பயணம் செய்தனர். இந்த ரயில் அறிமுகப்படுத்தும் போது இந்தியாவின் வேகமான ரயில் என்று சொல்லப்பட்டது. ஆனால் இந்த ரயில் பயணம் செய்த பலர் இந்த ரயில் எதிர்பார்த்து அளவுக்கு வேகமாக பயணிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்கள்.
வந்தே பாரத் ரயில் வருவதற்கு முன்னர் துரந்தோ மற்றும் தேஜஸ் ஆகிய ரயில்கள் தான் இந்தியாவின் வேகமாக ரயிலாக இருந்தன. இந்த ரயில்கள் எல்லாம் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. ஆனால் வந்தே பாரத் ரயில்கள் அதைவிட கூடுதல் வேகமான 180 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அப்படி இருந்தும் பயணிகளுக்கு அதிக வேகத்தில் பயணம் செய்யாமல் இருக்கும் உணர்வு ஏன் ஏற்படுகிறது என்று கேட்டால் அதற்கு பின்னால் சில தொழில்நுட்ப சிக்கல்களும் அறிவியல் அம்சங்களும் இருக்கின்றன. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வந்தே பாரத ரயில்கள் முழுமையாக மூடப்பட்ட ரயில்களாக இருக்கின்றன. இந்த ரயில்கள் பயணிக்கும் போது ரயிலின் கதவு கூட திறக்க முடியாது.
இதனால் ரயிலுக்குள் இருக்கும்போது ரயில் எவ்வளவு வேகத்தில் பயணிக்கிறது என்ற பெரிய உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தாது. இந்த ரயில் பெரிய அளவில் ஆட்டம் காணாதவாறு இதன் சஸ்பென்ஷன் சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் துரந்தோ, தேஜஸ் ஆகிய ரயில்கள் எல்லாம் ரயில் பயணிக்கும் போது ரயில் கதவையாவது திறந்து பார்க்க முடியும். இதனால் வெளியில் என்ன வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது என்பதை ரயிலுக்குள் இருப்பவர்கள் உணர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
இதனால் மக்கள் மத்தியில் இந்த இரண்டு உணர்வுக்கும் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். இந்த இரண்டு உணர்வில் வந்தேபாரத் ரயிலில் பயணிக்கும் வேகத்தில் பெரிய அளவு வேகம் குறித்த உணர்வு இல்லை என மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் வேகமாக செல்லும்போது அதிக ஆட்டமும் அதிக உணர்வும் மக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக தான் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இந்த ரயில் 180கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.
இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கத்தில் சில தொழில்நுட்ப சிக்கல்களும் இருக்கின்றன. என்னதான் வந்தே பாரத் ரயில் 180 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றாலும் தற்போது 150 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கவே அனுமதி இருக்கிறது. இது மட்டுமல்லாமல் இந்த 150 கிலோ மீட்டர் வேகமும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பயணிக்க அனுமதி இருக்கிறது.
150 கிலோமீட்டர் வேகத்தை தாங்கும் அளவுக்கு பல இடங்களில் தண்டவாளங்கள் பலமாக இல்லை. அதனால் தண்டவாளங்கள் பலமாக இல்லாத இடத்தில் ரயில் பயணம் செய்யும்போது குறைவான வேகத்தில் தான் பயணம் செய்யும். இதுவே தண்டவாளம் சில இடங்களில் பலப்படுத்தப்பட்டுள்ளது அந்த இடங்களில் பயணம் செய்யும்போது ரயில் அதிகபட்ச வேகத்தில் பயணம் செய்ய வாய்ப்புள்ளது.
வந்தே பாரத் ரயிலின் வேகத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உலகின் வேகமாக மிருகமான சிறுத்தையின் வேகத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சிறுத்தைக்கும் வந்தே பாரத் ரயிலுக்கும் ஒரு போட்டி வைத்தால் அந்த போட்டியில் வந்தே பாரத் ரயில் தான் வெற்றி பெறும். ஏனென்றால் சிறுத்தை ஒரு மணி நேரத்திற்கு 130கிமீ வேகத்தில் தான் ஓடும். ஆனால் வந்தே பாரத் அதற்கும் அதிகமான வேகத்தில் ஓடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வந்தே பாரத் ரயிலுக்கு நல்ல மவுசு ஏற்பட்ட நிலையில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரயிலில் வேகம் இல்லை என அவர்கள் உணர்வதற்கு முக்கியமான காரணங்கள் மேலே சொன்ன இரண்டு விஷயங்கள் தான் நீங்கள் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்து உள்ளீர்கள் என்றால் உங்கள் அனுபவம் எப்படி இருந்தது என எங்களிடம் கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








