ஆமை வேகத்தில் செல்லும் கோவை- பெங்களூரு வந்தே பாரத்! இந்தியா முழுக்க இதான் நிலைமை! ஏன் தெரியுமா?

இந்தியாவில் மக்களால் அதிக வேகமாக பயணிக்கும் ரயில் என நம்பப்படும் வந்தே பாரத் ரயில் சராசரியாக குறைந்த வேகத்தில் தான் பயணம் செய்வதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரயில் அறிமுகம் செய்யும்போது 180 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ரயில் என அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதைவிட பாதி வேகத்தில் தான் பயணம் செய்து வருவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த தகவலில் நமக்கு தெரிய வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

முற்றிலுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வாயிலாக வந்தே பாரத் ரயில் என்பது இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. பல முக்கியமான நகரங்களை இணைக்கும் வகையில் இந்த வந்த பாரத் ரயில்கள் வரிசையாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யும்போது சுமார் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட ரயில் என அறிமுகம் செய்யப்பட்டது.

vande bharat speed

ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ரயில் அதிகபட்ச 160 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் இருநகரங்களுக்கு இடையேயான பயண நேரம் என்பது வெகுவாக குறையும் எனவும் கூறப்பட்டது. இதனால் மக்கள் பலர் இந்த ரயிலில் விரும்பி டிக்கெட் புக் செய்து பயணம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் வந்தே பாரத் ரயிலில் வேகம் குறித்து சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில் பலரை அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் இருக்கிறது. அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளில் வந்தே பாரத் ரயிலின் வேகம் கணிசமான அளவு குறைந்துள்ளதாகவும் நமக்கு தகவல் தெரியவந்துள்ளது.

vande bharat speed

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு கடந்த 2020-21ம் ஆண்டில் வந்தே பாரத் ரயிலில் சராசரி வேகம் 84.48 கிலோமீட்டராக இருந்தது. தற்போது இந்த 2023-24ம் நிதியாண்டில் இது 76.25 கிலோமீட்டராக வேகம் குறைந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலை தெரிவித்துள்ளது.

மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது சராசரியாக பாதிக்கும் குறைவான வேகத்தில் தான் இந்த ரயில் பயணம் செய்து வருவது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால் இதற்கான விளக்கங்களையும் தற்போது ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விளக்கமும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கிறது.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டாலும் அந்த ரயில் செல்லும் பாதையில் ரயில்கள் வேகமாக செல்வதற்கான வசதிகள் இல்லை எனவும் அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், இந்த பணி நடப்பதால் தான் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது. இதனால் பல இடங்களில் பாதுகாப்பு காரணமாக வந்தே பாரத் ரயில் குறைவான வேகத்தில் இயக்கப்படுகிறது.

குறிப்பிட்ட நிலப்பகுதிகளில் வேகமாக ரயில் இயங்கும் போது இது சுற்றுச்சூழலுக்கும் மற்ற பகுதிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் அந்த பகுதிகளில் ரயில் பயணம் செய்யும்போது அதன் முழு வேகத்தில் பயணம் செய்ய முடியாது. அதன் வேகத்தை வேண்டுமென்றே குறைத்து பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. சில இடங்களில் தண்டவாளங்களை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அதன் காரணமாகவும் வேகம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படியாக இந்தியாவில் இயக்கப்படும் ஒவ்வொரு வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகத்தை பார்க்கும் போது இருப்பதிலேயே குறைவாக கோயம்புத்தூரில் இருந்து பெங்களூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் தான் மணிக்கு 58.11 கிலோமீட்டர் வேகத்தில் சராசரியாக பயணம் செய்வதாக தெரிவித்துள்ளது.மற்ற ரயில்களின் சராசரி என்பது இதைவிட சற்று அதிகமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது என்பது ஒரு தற்காலிகமான விஷயம் தான். ரயிலில் வேகத்தை அதிகரிப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்து படிப்படியாக ரயிலில் வேகத்தை அதிகரித்து அது தனது முழு வேகத்தில் பயணிக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 8, 2024, 7:00 [IST]
English summary
Vande bharat speed decline rti response
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+