40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயிலாக மாறுவதாக சொன்னதை இதை தானா? நம்பி ஏமாந்துட்டோமே!

இம்மாத துவக்கத்தில் வெளியான பட்ஜெட்டில் இந்தியாவில் உள்ள 40 ஆயிரம் ரயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்திற்கு தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின் மூலம் சிலர் இந்தியாவிற்கு புதிதாக 40,000 வந்தே பாரத் ரயில்கள் வரப்போவதாக கூறுகிறார்கள். சிலர் வந்தே பாரத் ரயில் இல்லாமல் இது புது விதமான ரயில் எனக் கூறுகிறார்கள். இந்த தரம் உயர்த்துதல் என்றால் என்ன என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பிப்ரவரி 1ம் தேதி பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும்போது ரயில்வேக்கான பட்ஜெட்டில் அவர் இந்தியாவில் செயல்பட்டு வரும் 40 ஆயிரம் ரயில் பெட்டிகளை வந்தே பாரத் தரத்திற்கு தரம் உயர்த்த போவதாக அறிவித்தார். இந்த செய்தி அப்பொழுது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பலர் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை அதிகமாக போகிறது என பேசினார்கள்.

vande bharat standards

2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிரீமியம் ரக ரயிலாகும் இந்தியா முழுவதும் வரிசையாக இயக்கப்பட்ட வருகின்றன. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பலர் வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் புக் செய்து பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் தற்போது சாதாரணமாக செயல்பட்டு வரும் ரயில் பெட்டிகளை வந்தே பாரத் தரத்திற்கு தரம் உயர்வு செய்யப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளது. பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

40,000 ரயில் பெட்டிகள் என்றால் 40,000 புதிய ரயில்கள் வரப்போகிறதா அல்லது ஏற்கனவே உள்ள ரயில்கள் வந்தே பாரத் ரயிலாக மாறப் போகிறதா என்ற பல குழப்பங்கள் இருக்கிறது. சிலர் சாதாரண ரயில்கள் எல்லாம் அம்ரித் பாரத் என்ற வந்தே பாரத் ரயிலின் சாதாரண வெர்ஷன் ரயிலாக மாற்றப்படும் என பேசினார்கள்.

vande bharat standards

ஆனால் தற்போது மத்திய ரயில்வே போக்குவரத்து துறை அமைச்சர் இதுக்காக ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளார். அதன்படி தற்போது வந்தே பாரத் ரயில்கள் தரத்துக்கு உயர்த்தப்படும் என்பதற்கு அர்த்தம் என்ன என்பதை கூறியுள்ளார். அதாவது தரம் உயர்த்தப்படுவது என்றால் சாதாரண பட்டிகள் எல்லாம் ஏசி பெட்டிகளாக மாற்றப்படும் என அர்த்தம் கிடையாது. சாதாரண பெட்டியில் சாதாரண பெட்டிகளாகவே தொடரும்.

ஆனால் அதில் உள்ள வசதிகள் மற்றும் தரம் என்பது தற்போது உள்ள ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலை விட சற்று கூடுதலாக இருக்கும் வகையில் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். இப்படியாக தரம் உயர்த்தப்பட்ட ரயில் பெட்டிகள் வரும் மார்ச் மாதம் இறுதி முதல் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அம்ரீத் பாரத் ரயிலை தயாரிக்கும்போது இந்திய ரயில்வேக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது.

vande bharat standards

அதன்படி தற்போது உள்ள சாதாரண பெட்டிகளை எல்லாம் மாற்றி அம்ரீத் பாரத் ரயிலில் உள்ள பெட்டிகள் போல வசதி செய்ய முடியும் என ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதைத்தான் வந்தே பாரத் ரயில் தரத்திற்கு சாதாரண ரயில் பெட்டிகள் தரம் உயர்த்தப்படும் என்பதற்கான முழு அர்த்தமாகும். ரயில் பெட்டிகளில் செமி பெர்மனென்ட் கப்லர்கள் பயன்படுத்தப்படுகிறது. புதிதாக மாற்றப்பட உள்ள ரயில் பெட்டிகளிலும் இதே கப்லர்கள் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளது.

அடுத்ததாக செல்போன் மற்றும் லேப்டாப்புகளை பயணிகள் சார்ஜ் போட தேவையான ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ரயில் பெட்டிகளில் இருப்பிலுள்ள தண்ணீரின் அளவு எவ்வளவு என்பதை தானியங்கியாக கணித்து அளவு குறையும்போது இது குறித்த எச்சரிக்கை சிக்னலை அடுத்து வரும் ஸ்டேஷனுக்கு தானாக அனுப்புவது உள்ளிட்ட அம்சங்கள் இந்த புதிய மாற்றத்தில் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோக ரயில் பெட்டிகளில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்துவது, சிசிடிவி கேமராக்களை பொருத்துவதும் இந்த அப்டேட்டில் செய்யப்பட்டு புதுமையாக இந்த ரயில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டில் ஏசி அல்லாத பெட்டிகள் ஏசி பெட்டிகளாக மாற்றப்படும் என்று கூறுவது முற்றிலும் வதந்தியான செய்தியாகும்.

இப்படியாக எந்த திட்டமும் ரயில்வே நிர்வாக திட்டம் இல்லை. அதே நேரம் அந்த ரயில்களில் உள்ள டாய்லெட்டுகள் எல்லாம் அப்டேட் செய்யப்பட்டு அதிக தரம் மற்றும் அதிக வசதிகள் நிறைந்த டாய்லெட்களாக மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தான் தரம் உயர்த்துதல் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் தரத்திற்கு சாதாரண பெட்டிகள் எல்லாம் தரம் உயர்த்தப்படும் என மத்திய நிதியமைச்சர் கூறியது என்பது வந்தே பாரத் ரயிலை கட்டமைப்பது மூலம் ரயில்வே நிர்வாகம் கற்ற பாடங்கள் மற்றும் அனுபவங்களை வைத்து தற்போது உள்ள ரயில் பெட்டிகளை அதிக வசதிகள் மற்றும் பாதுகாப்பு நிறைந்ததாக மாற்றுவது என்பதுதான்.

More from DriveSpark

Article Published On: Friday, February 16, 2024, 16:14 [IST]
English summary
Vande bharat standards upgrade 40000 indian railways coaches
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X