ரயில் நிலையத்தில் வந்து நின்ற வந்தே பாரத்! கதவு திறக்காததால் பயணிகள் பீதி!

வந்தே பாரத் ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயிலுக்குள் இருந்த பயணிகள் கதவு திறக்கப்படாததால் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. சுமார் அரை மணி நேரம் போராடி ரயிலுக்குள் இருந்த பயணிகளை ரயில்வே நிர்வாகத்தினர் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.

இந்தியாவில் வந்தே பாரத் ரயிலில் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. தினம்தோறும் வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வந்தே பாரத் ரயில்கள் பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டதாக இருப்பதால் இதில் பயணிக்க மக்கள் அதிகம் விருப்பம் காட்டி வருகிறார்கள்.

vande bharat

இந்நிலையில் வந்தே பாரத் ரயில்களில் உள்ள கதவுகள் எல்லாம் தானியங்கி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவையாக இருக்கின்றன. ரயில்கள் நிறுத்தப்படும் போது இன்ஜினில் உள்ள பைலட் தான் கதவுகளை திறந்து விட வேண்டும். அப்படி அவர் கடவுளை திறந்து விட்டால் தான் ரயிலுக்குள் இருக்கும் பயணிகள் வெளியே இறங்கவும் வெளியே இருந்து பயணிகள் உள்ளே ஏறவும் வழி கிடைக்கும்.

இந்நிலையில் ஆமதாபாத்திலிருந்து மும்பை வரை பயணம் செய்யும் வந்தே வாரத்தில் காலை 8:30 மணிக்கு சூரத் ரயில் நிலையத்திற்கு வந்து நின்றது. அப்பொழுது ஆமதாபாத்திலிருந்து சூரத் வரை வர வேண்டிய பயணிகள் எல்லாம் கீழே இறங்குவதற்கு தயாரானார்கள். அதேபோல சூரத்திலிருந்து மும்பை செல்ல வேண்டிய பயணிகள் எல்லாம் ரயிலில் ஏற தயாராகி நின்றார்கள்.

vande bharat

ரயில் சூரத் ரயில் நிலையத்தில் நின்றதும், தானியங்கி கதவுகள் திறக்கப்படும் என காத்திருந்தார்கள். ஆனால் வெகு நேரம் ஆகியும் கதவுகள் திறக்கப்படவில்லை. இதனால் ரயிலுக்குள் இருந்து பயணிகளுக்கும் ரயிலுக்கு வெளியே இருந்த பயணிகளுக்கும் பதற்றம் ஏற்பட்டது. ரயிலுக்குள் இருந்த பயணிகள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறினார்கள்.

என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு புரியாமல் இருந்தது சிலர் தானியங்கி கதவுகளை கைகளை கொண்டு திறக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களது முயற்சியும் பலனளிக்கவில்லை. தானியங்கிக் கதவுகள் திறப்பதில் ஏதோ தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகமும் பயணிகளிடம் இது குறித்த போதுமான அறிவிப்பை வெளியிடவில்லை.

vande bharat

இதனால் வந்தே பாரத் ரயிலுக்குள் பயணிகள் சிக்கிக் கொண்டார்கள் நூற்றுக்கணக்கான பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு இந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் கதவுகள் திறக்கப்பட்டன. இதையடுத்து பயணிகள் எல்லாம் வந்தே பாரத் ரயிலிலிருந்து வெளியே வந்தனர். மும்பை செல்ல வேண்டிய பயணிகள் ரயிலில் ஏறினார்கள்.

ஏற்கனவே தானியங்கி கதவுகள் பழுதானதால் மீண்டும் இந்த கதவு மூடப்பட்டால் திறப்பது கடினமாக இருக்கும் என பலர் கருதினார்கள். ஆனால் கலவை மூடாமல் ரயில் நகர முடியாது என்பதால் கதவு மூடப்பட்டது. ஆனால் அடுத்த ரயில் நிலையத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் கதவு தானாக திறந்து கொண்டது. இந்த பிரச்சினையால் சுமார் 30 நிமிடங்கள் வரை காலதாமதம் ஏற்பட்டது.

வந்தே பாரத் ரயில்களில் உள்ள தானியங்கி கதவுகள் திடீரென திறக்காமல் போனது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலுக்குள்ளே பயணிகள் அனைவரும் பயந்து போனார்கள். குழந்தைகள் பெண்கள் என பலர் இருந்ததால் இந்த சம்பவம் அப்பகுதியை பெரும் பரபரப்புக்கு உள்ளாகியது. மேலும் ரயில்வே அதிகாரிகளிடமும் மக்களிடம் அறிவிப்பு செய்யப் போதிய தொழில்நுட்ப வசதிகள் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் ரயிலில் இதுபோன்ற தொழில்நுட்ப பிரச்சனைகள் எதிர்காலத்தில் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு வேலை இப்படியான அவசர காலகட்டத்தில் ரயிலுக்குள் இருக்கும் பயணிகளுக்கு போதுமான அறிவுரை வழங்க முறையான கம்யூனிகேஷன் சிஸ்டத்தை ரயிலுக்குள் கொண்டு அமைக்கப்பட வேண்டும். இதனால் மக்கள் தேவையில்லாமல் பீதி அடைவது தவிர்க்கப்படும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 30, 2024, 15:49 [IST]
English summary
Vande bharat surat station doors fails to open issue
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X