வந்தே பாரத் ரயில்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஆன்டி இன்ஜூரி அம்சம்! சட்டென பிரேக் போட்டகூட ஒன்னும் ஆகாது

பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்தியன் ரயில்வே துறை புதிய பாதுகாப்பு அம்சங்களை ரயில்களில் அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், இந்தியன் ரயில்வேஸ் 'ஆன்டி இன்ஜூரி' (காயம் எதிர்ப்பு) எனும் புதிய அம்சத்தை அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியன் ரயில்வேஸ் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியில் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. அந்தவகையில் பல்வேறு பாதுகாப்பு கருவிகளையும், சிஸ்டம்களையும் அது ரயில்வே துறையில் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே ரயில் பயணிகளுக்கு குஷியளிக்கக் கூடிய ஓர் செய்தி தற்போது வெளியாகி இருக்கின்றது.

Vande sadharan train

மிக முக்கியமாக இந்தியன் ரயில்வேஸ் அடுத்த ஆண்டு கிட்டத்தட்ட 500 புதிய வந்தே ரயில்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், அந்த ரயில்களில் உள்ள பெட்டிகளில் 'ஆன்டி இன்ஜூரி' (காயம் எதிர்ப்பு) சிஸ்டம் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த அம்சம் ரயில் மிக மிக அதிக வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும்போது பிரேக் பிடித்தாலும் பயணிகளுக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என கூறப்படுகின்றது.

இத்தகைய அம்சத்தையே அடுத்த ஆண்டு பயன்பாட்டிற்கு வர இருக்கும் வந்தே பாரத் ரயில்களில் இந்தியன் ரயில்வேஸ் சேர்க்க இருப்பதாகத் தெரிவித்து இருக்கின்றது. சென்னையில் உள்ள ஐசிஎஃப் ரயில் பெட்டி உற்பத்தி ஆலையில், 500 முதல் 550 வந்தே பாரத் ரயில்கள் உற்பத்தி செய்ய இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Vande bharath

இந்த ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக 75 வந்தே ரயில்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டன. அதில், 63 ரயில்கள் 8 பெட்டிகளைக் கொண்ட வெர்ஷன்கள் ஆகும். பாக்கி 12 வந்தே ரயில்கள் 16 கோச் கொண்ட ரயில்கள் ஆகும். இத்தகைய இலக்குடன் சேர்த்தே இந்தியன் ரயில்வேஸ் வந்தே பாரத் ரயில்களை பூஜ்ஜியம் ஆபத்து கொண்ட ரயில்களாக தயாரிக்கும் பணியில் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ரயில்கள் பெட்டிகளில் சிறு காயம் கூட ஏற்படாது என கூறப்படுகின்றது. இதேற்கேற்ப வடிவமைப்பை மற்றும் கருவிகளையே புதிய வந்தே பாரத் ரயில்களில் பயன்படுத்தப்பட இருக்கின்றன. மிக முக்கியமாக ஷார்ப்பான முனைகள் உள்ளிட்டவை வந்த பாரத் ரயில்களில் இருந்து நீக்கப்பட இருக்கின்றன. இதுதவிர பிற ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய உபகரணங்களும் ரயில்களில் இருந்து வெளியேற்றப்பட இருக்கின்றன.

Vande train

பொதுவாக திடீரென பிரேக் பிடிக்கும்போது, பயணத்தின்போது தவறி விழும்போது ஷார்ப்பான மற்றும் கூர்மையான முனை பகுதிகளாலேயே அதிகம் ஆபத்தான சூழலும், பாதிப்பும் ஏற்படுகின்றது. ஆனால், இந்த நிலை விரைவில் ரயில்களில் மாற்றப்பட இருக்கின்றது. வந்தே பாரத் ரயில் மட்டுமின்றி இனி தயாரிக்கப்படும் அனைத்து ரயில் கோச்சுகளிலும் இந்த பாதுகாப்பு அம்சம் கையாளப்படும் என தெரிகின்றது.

ஆகையால், வரும் நாட்களில் ரயில் பயணம் என்பது கூடுதல் பாதுகாப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியன் ரயில்வேஸ் பயணிகளுக்கான பாதுகாப்பான பயணத்தை வழங்கும் வேலையில் மட்டுமல்ல விபத்தினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கச் செய்யும் பணியிலும் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இந்த நிலையிலேயே ஆன்டி இன்ஜூரி பற்றிய தகவல் வெளியாக இந்தியர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீபத்திய ரயில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளே இந்தியன் ரயில்வேஸின் இந்த நடவடிக்கைக் காரணமாக அமைந்திருக்கின்றது. தொடர் ரயில் விபத்துகளால் இந்தியாவில் உள்ள பலர் ரயில்களைப் பயன்படுத்தத் தயக்கம் காட்டுகின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே ரயில் பயணத்தை அதிக பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியில் சென்னையில் ஐசிஎஃப் ரயில் பெட்டி உற்பத்தி ஆலை தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது.

Article Published On: Saturday, November 11, 2023, 5:00 [IST]
English summary
Vande bharat train anti injury coaches
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X