மனிதர்களே தேவையில்லை! ஒட்டு மொத்த ரயிலையும் சுத்தப்படுத்தும் நவீன மிஷின் வந்தாச்சு!

வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களையும் தானியங்கியாக சுத்தம் செய்யும் மிஷின் ஒன்று இந்திய ரயில்வே நிர்வாகத்தால் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரயில்வே சுத்தம் செய்யும் மிஷின் எப்படி வேலை செய்கிறது என்பது குறித்து சமீபத்தில் ரயில்வே நிர்வாகம் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நாம் கார்களில் பயணம் செய்யும்போது அவ்வப்போது காரை சுத்தப்படுத்த வேண்டியது இருக்கும். இதனால் தற்போது பெருநகரங்களில் தானியங்கியாக காரை சுத்தப்படுத்தும் கருவிகள் எல்லாம் வந்துவிட்டன. நேரடியாக காரை குறிப்பிட்ட இடத்தில் கொண்டு போய் சென்று நிறுத்திவிட்டால் போதும் நீங்கள் காருக்குள்ளேயே இருந்தாலும் பரவாயில்லை, கார் வெளிப்பகுதி முழுவதும் சோப்பு நுரைகள் மூலம் சுத்தப்படுத்தப்பட்டு உங்கள் கார் புதிய கார் போல மாற்றப்படும்.

vande bharat train cleaning

இதற்கான கருவி பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. பலர் இந்த கருவியை பயன்படுத்தி இருப்பார்கள் அல்லது பார்த்தாவது இருப்பார்கள். இந்நிலையில் இப்படியான ஒரு கருவியை இந்திய ரயில்வே நிர்வாகம் தங்கள் ரயில்களை சுத்தம் செய்வதற்காக தற்போது பயன்படுத்தி வருகிறது. இந்திய ரயில்வே நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில் இது குறித்த முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் கார்களை எப்படி சுத்தப்படுத்துமோ அதேபோல தானியங்கி கருவி மொத்த ரயிலையும் சுத்தப்படுத்துகிறது. ரயிலில் வெளிப்புற முழுவதும் இதனால் சுத்தமாகிறது. இந்த கருவியை இந்திய ரயில்வே நிர்வாகம் 73 இடங்களில் நிறுவியுள்ளது. இதன் மூலம் குறைவான தண்ணீர் மற்றும் பண செலவில் முழுமையான ரயில் சுத்தம் செய்யப்படுகிறது.

vande bharat train cleaning

இதன் மூலம் சுமார் 24 பெட்டிகள் கொண்ட ரயில் 15 முதல் 20 நிமிடங்களில் சுத்தம் செய்யப்படுகிறது. கருவிக்கு ஆட்டோமேட்டிக் கோச் வாஷிங் பிளான்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைக்காத படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவி அதிகமான திறனுடன் குறைவான தேவைகளுடன் இயங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதால் அதிக பணம் ரயில்வேக்கு மிச்சமாகிறது.

மேலும் இதில் பயன்படுத்தப்படும் நீரை மீண்டும் சுத்திகரித்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக தனி கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட நீர் மீண்டும் சேகரிக்கப்பட்டு இது சுத்திகரிக்கப்பட்டு மறுபடியும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ரயில்வே நிர்வாகத்திற்கு மிகப்பெரிய அளவில் பணம் மிச்சம் ஆகிறது.

vande bharat train cleaning

இந்த கருவி ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதை 14 நிமிட அதிசய கருவி என ரயில்வே நிர்வாகத்தினர் அழைக்கிறார்கள். இந்த கருவி ஒட்டுமொத்த வந்தே பாரத் ரயிலை 14 நிமிடத்தில் சுத்தம் செய்து விடுகிறது. இதனால் பெரும் அளவு நேரம் மிச்சம் ஆகிறது.

இந்த கருவி வருவதற்கு முன்னர் முழுமையாக ரயிலை ரயில் பணியாளர்கள் தான் மேனுவலாக சுத்தப்படுத்தி வந்தார்கள். அவர்கள் ஈரமான மாப் போட்டும் பின்னர் காய்ந்த மாபெரும் முழுமையாக ரயிலை சுத்தப்படுத்தி வந்தார்கள். தற்போது இது வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் அனைத்து ஊர்களுக்கும் கொண்டுவரப்பட்டு விரைவில் அனைத்து வந்தே பாரத் செயல்களும் இதன் மூலம் சுத்தப்படுத்தப்படும் என தெரிகிறது.

ரயில்வே நிர்வாகம் இந்த தொழில்நுட்பத்தை ஜப்பான் நாட்டில் இருந்து கொண்டு வந்துள்ளது. ஜப்பான் நாட்டில் தான் இந்த தொழில்நுட்பம் ஏழு நிமிடத்தில் ரயில் சுத்தம் செய்யும் தொழில்நுட்பமாக இருந்தது. தற்போது அதை இந்தியாவுக்கு கொண்டு வந்து 14 நிமிடத்தில் ரயிலை சுத்தம் செய்யும் வகையில் இதை உருவாக்கியுள்ளார்கள். நிச்சயம் இது ரயில்வே துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரயில் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகமாகி வரும் நிலையில் வந்தே பாரத் போன்ற ரயில்கள் வரிசையாக அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இதன் மூலம் வருங்காலத்தில் ரயில்கள் மிக விரைவாக செயல்படுவதற்காக இது போன்ற கருவிகள் நிச்சயம் தேவை. இந்த கருவியை கொண்டு வந்த ரயில்வே நிர்வாகத்தை பாராட்டலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, February 19, 2024, 14:32 [IST]
English summary
Vande bharat train cleaning automatic washing plant video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X