வந்தே பாரத் ரயிலை ஆஹா, ஓஹோன்னு பேசுனாங்க! நடுவழியில நின்ன ரயிலுக்கு என்னாச்சு தெரியுமா?
நடுவழியில் பழுதாகி நின்ற வந்தே பாரத் ரயிலை சரக்கு ரயில் இன்ஜின் கொண்டு இழுத்துச் சென்ற சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. வந்தே பாரத் ரயில்கள் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நிற்கும் சம்பவம் நடந்து வருகிறது. இப்படியாக நடுவழியில் நின்ற ரயில் ரிப்பேர் செய்ய முடியாமல் சரக்கு ரயில் இன்ஜினை கொண்டு இழுத்து சென்றுள்ளார்கள். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்
புதுடெல்லியில் இருந்து வாரணாசி வரை வந்தே பாரத் ரயில் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் தினமும் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். வந்தே பாரத் ரயில்கள் எல்லாம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போது புல்லட் ரயில்களுக்கு இணையான தயாரிப்பில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரயில் என அறிமுகப்படுத்தப்பட்டது.

வந்தே பாரத் பெயர்களில் ஏகப்பட்ட அம்சங்கள் புதிதாகவும் அதிக தொழில்நுட்ப வசதியுடன் இருப்பதால் மக்கள் பலர் இந்த ரயிலில் அதிகமாக பயணம் செய்து வருகிறார்கள். இந்த ரயில் இருக்கும் நூல்களில் இந்த ரயில் புக்கிங் தான் அதிகமாக இருக்கிறது. மற்ற ரயில்களை ஒப்பிடும்போது இந்த ரயில்களில் வசதிகள் அதிகமாக இருப்பதால் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
இந்நிலையில் நேற்று டெல்லியில் இருந்து வாரணாசி பகுதிக்கு வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த வந்தே வாரத்தில் உபி மாநிலத்தில் உள்ள எட்டவா என்ற மாவட்டத்தில் பயணம் செய்து கொண்டிருந்தது. அப்பொழுது பரதானா மற்றும் ஷாம்பூ ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த ரயில் பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இந்த ரயில் தனது இயக்கத்தை நிறுத்தியது.

ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் பாதை வழியிலேயே நின்றது. இதையடுத்து ரயிலில் இருந்து பயணிகள் எல்லாம் பதறிவிட்டார்கள். உடனடியாக தகவல் அறிந்து அருகில் உள்ள தொழில்நுட்ப குழுவினர் ஏற்பட்ட பிரச்சனையை சரிசெய்ய சம்பவ இடத்திற்கு விரைந்தார்கள். அவர்கள் வந்து வந்தே பாரத் ரயிலில் பிரச்சனை சரி செய்ய முயற்சித்த போதும் அது தோல்வியில்தான் முடிந்தது.
ரயில் தொடர்ந்து ஓடுவதற்கு தயாராக இல்லை. ரயிலை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு வேறு வழியில்லாமல் ரயில்வே அதிகாரிகள் அருகில் இருந்த சரக்கு ரயில் இன்ஜினை கழட்டி சம்பவ இடத்திற்கு கொண்டு வந்து வந்தே பாரத் ரயிலில் அந்த இன்ஜினை பொருத்தி வந்தே பாரத் ரயிலை அப்பொழுது அங்கிருந்து அகற்றினார்கள். இதையடுத்து ரயில் பாரத் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது.

வந்தே பாரத் ரயில்கள் எல்லாம் அதிக தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ரயிலாக இருக்கும் என்ற பேச்சு மக்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் இப்படியாக ரயில் பாதை வழியில் நின்று அந்த ரயிலை அகற்றுவதற்கு சாதாரண ரயில் இன்ஜின் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது பலரை இது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பொதுவாக வந்தே பாரத் ரயில்கள் இப்படியாக இன்ஜினை வைத்து இழுக்க வைப்பது இது ஒன்று முதல் முறையல்ல. பொதுவாக வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு அது செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்னர் சரியாக இயங்குகிறதா என்பதை சோதனை செய்ய இப்படியாக சரக்கு ரயில் இன்ஜினை வைத்து தான் இழுத்துச் செல்வார்கள். இந்த வீடியோக்கள் கூட இதற்கு முன்னர் வெளியாகி வைரலாக பரவி இருந்தது.
இந்நிலையில் தற்போது நடுவழியில் பழுதாகி நின்ற ரயிலை சரக்கு ரயிலை வைத்து இழுத்த சம்பவம் தற்போது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பலர் இது குறித்த சமூக வலைதளங்களை விமர்சனங்களை எழுப்பி வருகிறார்கள். இதற்கு முன்னர் சாதாரணமாக ரயில் நின்றால் எப்படி மற்றொரு ரயில் இன்ஜினை வரவழைத்து இழுத்து செல்வார்களோ அது போன்றவை எதுவும் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வந்தே பாரத் ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு இருக்கும். உலகில் இப்படியான பழுது ஏற்பட்டு வாகனம் நடுவழியில் நிற்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்படாத வகையில் ரயில்வே நிர்வாகம் வந்தே பாரத் ரயில்களை அவ்வப்போது சோதனை செய்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.


Click it and Unblock the Notifications









