வந்தே பாரத் ரயிலில் உணவு இல்லாமல் பட்டினியாக பயணித்த குடும்பம்! இப்படியெல்லாம் கூட நடக்குமா?
சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை இயங்கும் சிறப்பு வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் பயணிகள் உன்ன சரியாக உணவு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். இது குறித்து சமீபத்தில் இந்த ரயிலில் பயணித்த பயணி ஒருவர் சந்தித்த சூழ்நிலையை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
வந்தே பாரத் ரயில்கள் இன்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மக்கள் பலர் வந்தே பாரத் ரயிலில் பயணித்தால் விரைவாக பயணித்து விடலாம் என வந்தே பாரத் ரயிலில் விரும்பி டிக்கெட் புக் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் வரை வாரத்திற்கு மூன்று நாட்கள் சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை அதிக சொகுசு அம்சங்கள் கொண்ட ரயிலாகவும் அதே நேரம் ரயிலுக்கு உள்ளேயே உணவு கிடைக்கும் வகையிலான செட்டப் கொண்ட ரயிலாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் டிக்கெட் புக் செய்யும் போதே உணவை தேர்வு செய்து புக் செய்ய வேண்டும். இப்படியாக உணவு தேர்வு செய்து புக் செய்யப்பட்டால் உடனடியாக அந்த பையனுக்கு அவரது சீட்டுக்கே உணவு டெலிவரி செய்யப்படும்.
இது மட்டுமல்லாமல் அனைத்து வந்தே பாரத் ரயில்களிலும் பேனிட்டரி கார் எனப்படும் உணவுகளை விற்பனை செய்யும் பெட்டி தனியாக இருக்கும். பயணிகள் விரும்பினால் நேரடியாக அங்கு சென்று கூடுதலாக உணவுகளை வாங்கி அவர்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம். இப்படியாக ரயில் பயணம் செய்பவர்கள் உணவு தேவை இல்லை என்றால் டிக்கெட் புக் செய்யும்போதே உணவு தேவை இல்லை என தேர்வு செய்தால் அதற்கான கட்டணம் கழிக்கப்படும்.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயிலில் இப்படியாக பேனிட்டரி கார் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த ரயிலில் பயணம் செய்ய பயணிகள் உணவு புக் செய்து இருந்தால் மட்டுமே அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. கூடுதலாக அவர்கள் உணவைப் பெற பேனிட்டரி கார் பெட்டி இல்லை.
இப்படியாக சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ராஜன்பூபதி குடும்பத்தினர் இந்த ரயிலில் நாகர்கோவில் வரை பயணிக்க டிக்கெட் புக் செய்திருந்தார்கள். அவர்கள் திட்டமிட்டபடி காலை5:15 மணிக்கு சென்னைஎழும்பூர் ரயில்நிலையத்திற்கு சென்று அங்கு இந்த ரயிலில் ஏறி விட்டார்கள். ஆனால் இவர்கள் டிக்கெட் புக் செய்யும் போது உணவு வேண்டும் என தேர்வு செய்யவில்லை. இவர்கள் உணவை செல்லும் வழியில் பேனிட்டரி காரில் பெற்றுக் கொள்ளலாம் என திட்டமிட்டு இருந்தார்கள்.
இவர்கள் ரயிலில் ஏறி பேனிட்டரி கார் எங்கே இருக்கிறது என விசாரித்த போது தான் இவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்த ரயிலில் பேனிட்டரி கார் என்பதை இல்லை என ரயிலில் உள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள். குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ரயில் சென்னை -எழும்பூரில் கிளம்பி தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே இன்று செல்லும் இந்த ரயில் நிலையங்களில் இறங்கி பிளாட்பாரத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் உணவை பெறலாம் என்றால் அதுவும் முடியாது. இந்த ரயில் நிலையங்களில் வெறும் இரண்டு நிமிடம் மட்டுமே இந்த ரயில் நிற்கும் அதற்குள் தானியங்கி கதவுகள் மூடப்படும்.
இதனால் பயணிகள் இந்த ரயிலில் இருந்து இறங்கி பிளாட்பாரத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்குவது என்பது ரிஸ்க்கான காரியம் ஆகும். இப்படியாக தங்கள் அனுபவத்தை பூபதி குடும்பத்தார் பகிர்ந்து இருந்தார்கள். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது காலை 5:15 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பும் இந்த ரயில் மதியம் 2:15 மணிக்கு தான் நாகர்கோவிலை சென்றடைகிறது.
அதுவரை இந்த ரயிலில் இந்த குடும்பத்தினர் உணவு இல்லாமல் பயணம் செய்து உள்ளார்கள். இது தொடர்ந்து வந்தே பாரத் ரயில் பயணிப்பவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரயில்வே நிர்வாகம் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளது. அதன்படி இவர்கள் பயணித்த ரயில் சிறப்பு வந்தே பாரத் ரயில் என்பதால் அதில் பேனிட்டரி கார் அமைக்க அனுமதி இல்லை எனவும் ரயில்வே நிர்வாகம் இப்படியான கொள்கையை பின்பற்றி வருவதாகவும் விளக்கம் அளித்து இருந்தது.
இந்த ரயிலில் பயணிப்பவர்கள் வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து அந்த உணவை ரயிலில் வைத்து சாப்பிட்டால் அவர்கள் ரயிலில் வழங்கப்படும் உணவை தேர்வு செய்ய வேண்டிய தேவை இல்லை. அவர்கள் வீட்டிலிருந்து உணவை கொண்டு வரவில்லை என்றால் ரயிலில் உள்ள உணவுகளை மட்டுமே வாங்க முடியும் என விளக்கம் அளித்து இருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு என்பது மிக கட்டாயமான தேவையாக இருக்கிறது. இதனால் பேனிட்டரி கார் இல்லாத வந்தே பாரத் ரயில்களில் பயணிகளுக்கு கட்டாயமாக உணவு வழங்க வேண்டும். என்ற விதிமுறையை ரயில்வே நிர்வாகம் பின்பற்றினால் இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.


Click it and Unblock the Notifications








