வந்தே பாரத் ரயிலை விற்பனை செய்ய போறாங்களா!.. நிறைய நாடுகள் ஆர்வத்தோட இருக்காங்களாம்..

இந்தியர்களின் ஃபேவரிட் ரயிலாக மாறியிருக்கின்றது வந்தே பாரத் (Vande Bharat) எக்ஸ்பிரஸ் ரயில். இதனை வெளிநாடுகளுக்கும் விற்பனைச் செய்ய இந்தியன் ரயில்வேஸ் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிலே, கனடா மற்றும் மலேசியா போன்ற உலக நாடுகளுக்கே வந்தே பாரத் ரயிலை விற்பனைச் செய்ய இந்தியா திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. உலக நாடுகளின் கவனத்தை வந்தே பாரத் ரயில் கவர்ந்து வருவதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த இந்த சூழலிலேயே இந்த தகவலும் வெளியாகி இருக்கின்றது.

செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை வழங்கக் கூடியதாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இருக்கின்றன. இந்த காரணத்தினாலேயே அது உலக நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக மாறியிருகின்றது. இந்த நிலையிலேயே உலக நாடுகளுக்கு வந்தே பாரத் ரயிலை விற்பனைச் செய்ய ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Vande bharat train gain interest from global buyers

அதேசமயம், சிலி, கனடா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளும் வந்தே பாரத் ரயில்களின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் மற்றும் சவாலான விலை காரணமாக அதை இறக்குமதி செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனவே விரைவில் இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஏற்றுமதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலக நாடுகளுக்கு கட்டமைக்கப்படும் வந்தே பாரத் ரயில் ரூ. 160 கோடி முதல் ரூ. 180 கோடி வரையிலான செலவைக் கொண்டதாக இருக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவிற்கான வந்தே பாரத் ரயில் ரூ. 120 கோடி முதல் ரூ. 130 கோடி செலவில் தயார் செய்யப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

தொடர்ந்து, வேகமாக இயங்குவதிலும் வந்தே பாரத் ரயில் உலக நாடுகளின் தயாரிப்புகளுக்கு டஃப் கொடுக்கும் வகையிலேயே இருக்கும் என தெரிகின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி உலக நாடுகளுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வெறும் 52 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறனைக் கொண்டதாக தயார் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது ஜப்பானின் புல்லட் ரயிலைவிட அதி-வேக திறன் ஆகும். ஜப்பான் புல்லட் ரயில் இதே வேகத்தை எட்ட 54 செகண்டுகளை எடுத்துக் கொள்ளும் என்பது கவனிக்கதகுந்தது. இதன் வாயிலாக வந்தே பாரத் ரயில் இந்தியாவில் இருப்பதைவிட மிகவும் மேம்பட்டதாக உலக நாடுகளுக்கு தயார் செய்யப்பட்டு வழங்கப்படலாம் என்பது தெரிய வந்திருக்கின்றது.

குறிப்பாக, டிசைன், கூடுதல் அட்வான்ஸ்டு தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன உள் பக்கத்தைக் கொண்டதாக அது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, நூறு சதவீதம் குறைவான இரைச்சலை உருவாக்கும் திறன், குறைவான மின்சாரத்தை நுகரும் திறன் உள்ளிட்டவற்றையும் கொண்டதாக அந்த வந்தே பாரத் ரயில்கள் இருக்குமாம்.

இந்தியன் ரயில்வேஸ் வழித் தடங்களை விரிவாக்கம் செய்யும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இத்துடன், வந்தே பாரத் ரயில்களை அதிகளவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதிலும் கவனம் செலுத்தி வருகின்றது. சமீபத்திலேயே இதன் மினி வெர்ஷனான வந்தே மெட்ரோவும், இதன் ஸ்லீப்பர் வெர்ஷனான வந்தே பாரத் ஸ்லீப்பரும் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த மாதிரியான சூழலிலேயே உலக நாடுகளுக்கும் இந்த ரயிலை சப்ளை செய்வதற்கு கவனம் செலுத்தப்படும் என்பது தெரிய வந்திருக்கின்றது. அதேவேளையில், ஏற்கனவே இந்தியன் ரயில்வேஸ் புதிய வழித் தடங்களை அமைப்பதில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. கடந்த பத்தாண்டுகளில் 31 ஆயிரம் கிமீ புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக ரயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அண்மையில் தெரிவித்தார்.

மேலும், அதை 40 ஆயிரம் கிமீட்டராக உயர்த்தும் முயற்சியிலேயே இந்தியன் ரயில்வேஸ் தற்போது ஈடுபட்டு வருகின்றது. இதுதவிர, இந்தியாவில் புல்லட் ரயில்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி, ரயில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு வழி வகுக்கும் விதமாக கவச் தொழில்நுட்பத்தை நாடு முழுவதிலும் பயன்பாட்டிற்கும் கொண்டு வருவதற்கான பணிகளையும் இந்தியன் ரயில்வேஸ் ஈடுபட்டு வருகின்றது.

அண்மையிலேயே இதன் சோதனையோட்டம் வெற்றிகரமாக செய்யப்பட்டதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். மணிக்கு 130 கிமீ வேகத்தில் வந்துக் கொண்டிருந்த கவச் அம்சம் பொருத்தப்பட்ட ரயில் சுமார் 50 மீட்டர் இடைவெளியில் ரெட் சிக்னலுக்கு முன்னதாகவே பாதுகாப்பாக ரயில் நிறுத்தப்பட்டது. பைலட்டின் தலையீடு இல்லாமலேயே ரயில் நின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இந்தியர்களின் ஃபேவரிட் ரயிலாக உள்ளது. கட்டணம் சற்று அதிகமாக இருந்தாலும் பலர் இந்த ரயிலில் பயணிக்க விரும்புகின்றனர். இதன் விளைவாக நூறு சதவீதம் பயணிகளுடனேயே பெரும்பாலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய ரயிலையே உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, September 30, 2024, 10:23 [IST]
English summary
Vande bharat train gain interest from global buyers due to speed and cost effectiveness
மேலும்... #indian railways #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+