காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்படுவது ஏன்? உண்மையான காரணம் இது தான்!

வந்தே பாரத் ரயில்கள் வெள்ளை நிறத்திலிருந்து காவி நிறத்திற்கு மாறப்போவதாக வெளியான தகவலை அடுத்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். வந்தே பாரத் ரயிலின் நிறம் ஏன் மாற்றப்படுகிறது இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன? முழுமையாகக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவிலேயே முழுமையாக தயாரிக்கப்பட்ட ரயில் வந்தே பாரத். கடந்த 2018 ஆம் ஆண்டு "டிரைன்-18" என்ற பெயரில் சென்னை ஐசிஎப்-ல் தயாரிக்கப்பட்ட இந்த ரயில், இந்தியாவில் பல முக்கியமான வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த ரயில் தயாராகி ஐசிஎப்-ல் இருந்து வெளியே வரும்போது ஒவ்வொரு ரூட்டுக்கும் ஒதுக்கப்படுகிறது.

vande bharat in orange color

இந்நிலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்ட போது இருந்தே வெள்ளை மற்றும் நீல நிறங்களால் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தபோது இந்த வெள்ளை மற்றும் நீல நிறங்களால் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்படுவதால் அதன் பராமரிப்பு செலவு அதிகமாகுவதாக கருதினர்.

வந்தே பாரதத்தில் சுத்தமாக வைக்க வேண்டும் என்பதால் வெள்ளை நிறத்தில் அதிகமாக அழுக்குப் படுவது தெரிகிறது இதனால் இதனால் அந்த அழுக்கை நீக்க அதிகமாகப் பராமரிப்பு பணிகளைச் செய்ய வேண்டியது உள்ளது. இதுவே வேறு கலர் என்றால் பெரிய அளவில் பராமரிப்பு பணி இருக்காது என ரயில்வே அதிகாரிகள் கருதினர்.

vande bharat in orange color

இதையடுத்து வந்தே பாரத் ரயிலின் நிறம் மாற்றத் திட்டமிடப்பட்டது. அதன்படி தற்போது புதிதாக தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் ஆரஞ்சு மற்றும் கிரே ஆகிய நிறங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சென்னை ஐசிஎஃப்-ல் இந்த ஆரஞ்சு மற்றும் கிரீன் நிறத்தால் தயாரிக்கப்பட்ட முதல் வந்தே வாரத்தில் தயாரானது.

நேற்று மாலை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த புதிய ஆரஞ்சு நிற வந்தேபாரத் ரயிலைப் பார்வையிட்டார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் மத்திய அரசு வந்தே பாரத் ரயிலுக்குக் காவி நிறம் பூசுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

vande bharat in orange color

இதுகுறித்து நேற்று புதிய ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயிலைப் பார்வையிட வந்த மத்திய அமைச்சரிடம் கேட்டபோது அவர் இந்த ஆரஞ்சு நிறம் என்பது தேசியக் கொடியிலிருந்து எடுக்கப்பட்டதாகவும், தேசியக் கொடியின் முதல் நிறம் அடர் ஆரஞ்சு, காவி, இளஞ்சிவப்பு, டீப் சஃப்ரான் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது.

இதற்கும் பாஜகவின் காவி நிறத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை இந்த நிறம் இந்தியாவைக் குறிக்கும் ஒரு நிறமாக இருப்பதால் இதைத் தேர்வு செய்துள்ளதாக அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். இது மட்டுமல்லாமல் இந்த வந்தே பாரத் ரயிலில் சில அப்டேட்களையும் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது இயங்கி வரும் வந்தே பாரத் ரயிலில் சில விஷயங்களை மாற்றலாம் என கருதி அதிகாரிகள் அந்த விஷயங்களை எல்லாம் இந்த புதிய அப்டேட்டில் மாற்றி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனால் பயணிகளுக்கு மேலும் சௌகரியம் அதிகரிக்கும் என்றும் அதே நேரம் செலவுகளைக் குறைப்பதற்கான சில நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் ரயில்கள் நிறமாற்றப்பட்டதற்கு பின்னால் ஒரு முக்கியமான காரணம் இருப்பதால் அதை அரசியல் ஆக்குவது என்பது தவறான விஷயமாகும். அதே நேரத்தில் புதிய வந்தே பாரத் ரயிலில் வெறும் ஆரஞ்சு நிறம் மட்டுமல்ல கிரே நிறமும் இருக்கிறது. இந்த நிறம் மாற்றுவதால் ரயில்வே நிர்வாகத்திற்குப் பராமரிப்பு செலவு பெரும் அளவில் குறையும் நிலை கூட ஏற்படலாம்.

Article Published On: Sunday, July 9, 2023, 16:59 [IST]
English summary
Vande bharat train is in orange color ashwini vishnav explains
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X