வந்தே பாரத் ரயிலில் செய்யப்பட்ட 25 மாற்றங்கள்! மக்கள் இதை தான் எதிர்பார்த்தாங்க!
வந்தே பாரத் ரயிலில் 25 அம்சங்கள் புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ளன. பயணிகளிடம் பெறப்பட்ட கருத்துக்களை அடிப்படையாக வைத்து இந்த அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி ஏற்கனவே உள்ள அம்சத்தை மேம்படுத்துவதும், புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதும் என வந்தே பாரத் ரயில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதைப் பற்றி விரிவாக காணலாம் வாருங்கள்.
இந்தியாவிலேயே முழுமையாக தயாரிக்கப்பட்ட ரயில் தான் வந்தே பாரத். கடந்த 2018 ஆம் ஆண்டு "டிரைன் 18" என்ற பெயரில் இது சென்னை தயாரிக்கப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள புல்லட் ரயிலுக்கு இணையாக இந்த ரயில் பார்க்கப்படுகிறது. இந்த ரயில் தயாரிக்கப்படும் போது குறைவான எடையுடன் வேகமாக பயணிக்கும்படி தயாரிக்கப்பட்டது.

தற்போது இந்தியா முழுவதும் 26 வழிதடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 27வது ரயில் தயாரான நிலையில் தற்போது 28 வது ரயிலை சில அப்டேட்கள் செய்து சென்னை ஐசிஎப் நிர்வாகம் தயாரித்துள்ளது. இதன்படி தற்போது இயங்கி வரும் வந்தே பாரத் ரயிலில் பயணித்த சில பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.
அவர்கள் சொன்ன கருத்து மற்றும் அவர்கள் கேட்ட அப்டேட் குறித்த தகவலின் அடிப்படையில் 25 புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேநேரம் வந்தே பாரத் ரயிலை இயக்கும் நிர்வாக ஊழியர்களிடமும் தேவையான அப்டேட் குறித்த கருத்துக்கள் கேட்கப்பட்டது. இந்த அடிப்படையில் தான் ரயிலின் நிறத்தில் ஒரு முக்கியமான மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில் வெள்ளை மற்றும் நீல நிறத்தை அடிப்படையாகக் கொண்டு முதலில் வடிவமைக்கப்பட்டு வந்தாலும் தற்போது புதிய வந்தே பாரத் ரயிலை ஆரஞ்சு மற்றும் கிரே நிறத்தை கொண்டு வடிவமைத்துள்ளனர். இது குறித்த விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில் மத்திய அமைச்சர் இந்த புதிய அப்டேட் செய்யப்பட்ட ரயிலை நேரில் பார்வையிட்டு இதற்கான விளக்கத்தை அளித்தார்.
ரயில்வே நிர்வாகம் வந்தே பாரத் ரயில் குறித்த கருத்துக்கள் கேட்கப்பட்டதன் அடிப்படையில் சில அப்டேட்களை கொண்டுவர முடிவு செய்தது. அதன்படி ஒரு அப்டேட் தான் ரயிலின் நிறம். இந்த ரயிலை பராமரிக்கும் ஊழியர்கள் ரயிலை சுத்தமாக வைத்திருக்க அதிகம் பணியாற்ற வேண்டியதாக இருப்பதாக கூறினர். இதற்கு காரணம் ரயில் வெள்ளை நிறத்தில் இருப்பதால் அதில் படிந்துள்ள அழுக்குகள் அப்பட்டமாக தெரிகிறது இதை நீக்க கடினமாக இருப்பதாக கூறினார்.

இதனால் ரயிலின் நிறத்தை மாற்றினால் பராமரிப்பு பணிகள் குறையும் இதனால் ரயிலை வேகமாக பராமரித்து முடிக்க முடியும் என அவர்கள் கூறிய நிலையில் இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் இந்த இந்த ரயிலின் நிறத்தை ஆரஞ்சு மற்றும் கிரே நிறங்களை கொண்டு டிசைன் செய்ய முடிவு முடிவு செய்யப்பட்டது. க்ரே நிறத்தில் அழுக்கு படித்தாலும் அது பெரிய அளவில் வெளியே தெரியாது. இதனால் பராமரிப்பு குறைவாக இருக்கும்.
அழுக்குகள் அதிகம் படியும் இடங்களில் கிரே நிறமும் மற்ற இடங்களில் தேசியக் கொடியில் முதல் நிறமான இளஞ்சிவப்பு நிறமும் கொடுக்கப்பட்டு புதிய வந்தே பாரத் ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல இத்துடன் சேர்த்து மொத்தம் 25 விதமான அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மக்களின் வசதிக்காகவும் பாதுகாப்புக்காகவும் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி ரயிலில் அமைக்கப்பட்டுள்ள சீட்டுகள் சாய்வு ஆங்கிள் அதிகப்படுத்தி அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக ரயில் சீட்டில் உள்ள குஷன்கள் புதிய அதிக குஷன் வசதி கொண்ட சீட்களாக பொருத்தப்படுகிறது. இதுபோக ஒவ்வொரு சீட்டிற்க்கும் தனித்தனியாக சார்ஜிங் பாய்ண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்பு மூன்று சீட்களுக்கு ஒரு சார்ஜிங் பாய்ண்ட் இருந்த நிலையில் தற்போது ஒவ்வொரு சீட்டுக்கும் தனித்தனி சார்ஜிங் பாயிண்டுகள் உள்ளன.
எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் பெட்டியில் பயணிகள் கால்களை வைக்கும் பகுதி நீட்டிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக வாஷ்பேஷனில் தண்ணீர் பயன்படுத்தும் போது தண்ணீர் வெளியே தெளிப்பதால் வாஷ்பேஷன் மேலும் ஆழப்படுத்தப்பட்டு தண்ணீர் வெளியே வராத படி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பயன்படுத்தும் கழிவு நீர் நேரடியாக கழிவு நீர் தொட்டிக்கு சென்றுவிடும்.
அடுத்ததாக டாய்லெட்களில் உள்ள லைட்டுகள் மாற்றப்பட்டு அதிக வெளிச்சத்துடன் கூடிய லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வீல்சேரில் ரயிலில் வரும்போது அந்த வீல் சேரை மாட்டி வைக்க ரயில் பெட்டியில் தனியாக இட வசதி வழங்கப்பட்டுள்ளது. ரீடிங் லைட்டுகளுக்கான பட்டன் பட்டனாக இல்லாமல் லேசாக தொட்டாலே ஆப்பரேட் ஆகும்படி வழங்கப்பட்டுள்ளது.
ஜன்னல்களை மூட பயன்படுத்தப்படும் துணி புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது பழைய துணியை காட்டிலும் பெட்டராக உழைக்கவும் அதே நேரத்தில் ஜன்னல் வழியாக வெளிச்சத்தை கடத்தாமல் தடுக்கவும் செய்யும். இந்த ரயிலுக்கு மேலே பயணிகள் நினைத்தாலும் ஏற முடியாதபடி ஆண்டி கிளைம்பிங் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவியும் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த வந்தே பாரத் ரயில் நிச்சயம் இந்தியர்களுக்கு ஒரு பெருமையான விஷயம்தான். அவ்வப்போது ரயில் பயணிகளிடம்கருத்து கேட்டு அதில் முடிந்த அளவு அப்டேட்களை டிசைனில் செய்து வந்தால் மக்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள். வந்தே பாரத் ரயில்கள் செயல்பாட்டிற்கு வரும்போதுதான் அதில் இருக்கும் பிரச்சினைகள் தெரிய வருகிறது இது சர்வதேச தரத்திற்கு மாறிவிடும்.


Click it and Unblock the Notifications
