Vande Metro என்ற புதிய ரயில் டிசம்பரில் அறிமுகம்! முழு விபரம் இதோ!

இந்திய ரயில்வே தனது ரயில் போக்குவரத்தில் பல அட்வான்ஸ்டு மேம்பாடுகளைக் கொண்டு வருகிறது. இதில் சமீப காலமாக இந்தியாவில் ரயில்வே நிர்வாகம் வந்தே பாரத் ரயில்களை வரிசையாக அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த ரயில்கள் முக்கியமான நகரங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வந்தே பாரத் ரயிலை வடிவமைப்பை விரிவாக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

வந்தே பாரத் ரயிலின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு ரயில்வே நிர்வாகம் வந்தே மெட்ரோ என்ற ரயிலை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் சமீபத்தில் வெளியிட்டார். அதில் வரும் டிசம்பர் மாதத்திற்கும் இந்தியாவில் வந்தே மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்கு வந்துவிடும் எனத் தெரிவித்தார்.

Vande Metro launch

அது என்ன வந்தே மெட்ரோ ரயில்? வந்தே பாரத் ரயிலுக்கும் இதுக்கு என்ன வித்தியாசம்? இப்படியாகப் பல விஷயங்கள் உங்கள் மனதிற்குச் சந்தேகமாகத் தோன்றலாம். அதை விடையைத் தெரிந்து கொள்வோம் வாருங்கள். வந்தே பாரத் என்பது நீண்ட தூரத்தில் இருக்கும் நகரங்களை இணைக்கும் ரயில். இதுவே வந்தே மெட்ரோ என்பது குறுகிய தூரத்தில் உள்ள நகரங்களை இணைக்கும் ரயில்.

அதாவது 100 கி.மீ இடைவெளியில் இரு நகரங்கள் இருந்தால் அந்த நகரங்களை இணைப்பதற்காக வந்தே மெட்ரோ ரயிலை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ரயில் பார்க்கக் கிட்டத்தட்ட வந்தே பாரத் ரயிலைப் போலத் தான் இருக்கும். ஆனால் இது சிறு நகரங்களுக்கு இடையே ஒரு பாசஞ்சர் ரயில் போல இயக்கப்படும். இந்த வந்தே மெட்ரோ ரயில் 8 கோச்களுடன் உருவாக்கப்படுகிறது.

Vande Metro launch

அதாவது வந்தே பாரத் ரயில் 16 கோச்களை கொண்டது. ஆனால் இந்த ரயில் அதன் நீளத்தில் பாதி தான் இருக்கும். இது சுமார் 100 கி.மீ தூரத்தில் இருக்கும் இரு நகரங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ளது. உதாரணத்திற்குத் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய நகரங்கள் சுமார் 100 கி.மீ தூரத்தில் இருப்பவை.

தமிழகத்தில் இந்த வந்தே மெட்ரோ ரயில் வந்தால் இந்த மூன்று நகரங்களையும் இணைக்கும்படி உருவாக்கப்படும். குறுகிய தூரம் என்பதால் இந்த ரயில் ஒரு நாளுக்கு 4-5 முறை இந்த நகரங்களுக்கு இடையே பயணம் செய்யும் இதனால் ஏராளமான பயணிகள் பலனடைவார்கள். குறிப்பாக வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் எனத் தினந்தோறும் இந்த ரயிலைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

Vande Metro launch

இது மட்டுமல்ல இந்த ரயில் வேகமாகப் பயணிக்குத் திறன் கொண்டதாக இருக்கும் இதனால் அதிக பட்சம் இந்த ரயில் 100 கி.மீ தூரத்தை வெறும் 45-60 நிமிடங்களில் கடந்து செல்லும் படி வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வந்தே பாரத் ரயிலின் வேகம் 120 கி.மீ என்பதால் வந்தே மெட்ரோவும் கிட்டத்தட்ட அதே வேகத்தில் பயணிக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த ரயில் வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொரு ரூட்டிலும் இந்த ரயில் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த ரயில் பயன்பாட்டிற்கு வந்தால் உங்கள் ஊரிலிருந்து எந்த ஊரை இணைக்கும்படியான ரயில் வேண்டும் என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிகவும் அவசியமாகிறது. இன்று ரயில் போக்குவரத்து தான் குறைந்த விலையில் பயணிக்க மக்களுக்கு உதவுகிறது. இதில் புதிதாக வந்தே மெட்ரோ ரயில்கள் களம் இறங்குவது மக்களுக்கான போக்குவரத்து வசதியை இன்னும் மேம்படுத்தும். இந்த ரயில் போக்குவரத்து வசதி வருவது இந்தியாவின் வளர்ச்சியை நமக்குக் காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, April 17, 2023, 14:20 [IST]
English summary
Vande metro launch by december 2023 says ashwini vaishnavi
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X