வெளிநாடுகளே வியந்து பாக்குறாங்க! வந்தே மெட்ரோ சோதனை ஓட்டம் வெற்றி!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் புதிதாக வந்தே பாரத் மெட்ரோ ரயில் ஒன்று இயக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்த ரூட்டில் வந்தே பாரத் ரயில் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்து சோதனை செய்யப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரக ரயில்கள் எல்லாம் அதிக வேகத்தில் பயணம் செய்யும் எனக் கூறப்பட்ட நிலையில், அந்த ரயில்கள் தற்போது குறைவான வேகத்தில் பயணம் செய்வது ஏன்? வந்தே பாரத் மற்றும் வந்தே பாரத் மெட்ரோ ரயிலுக்கும் என்ன வித்தியாசம் விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவிலேயே முற்றிலுமாக தயாரிக்கப்பட்ட ரயில் தான் வந்தே பாரத் ரயில்கள். இந்த ரயில்கள் வெளிநாடுகளில் இயங்கும் புல்லட் ரயில்களுக்கு இணையான வசதிகள் மற்றும் வடிவமைப்பை கொண்ட ரயில்களாக இருக்கின்றன. இதனால் இந்த ரயில்களில் பயணம் செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். வந்தே பாரத் ரயில் மக்கள் மத்தியில் நல்ல ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்திய ரயில்வே நிர்வாகம் வந்தே மெட்ரோ என்ற ரயிலையும் தயாரித்துள்ளது.

vande metro

வந்தே பாரத் ரயில் நீண்ட தூரத்தில் இருக்கும் நகரங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. இதுவே வந்தே மெட்ரோ ரயில் குறுகிய தூரத்தில் இருக்கும் நகரங்களை இணைப்பதற்காக உருவாக்கப்பட்டது. வந்தே பாரத் ரயில் இருநகரங்களையும் இணைக்கும் இணைக்கும் வகையில் ஒரு நாளுக்கு ஒரு முறை பயணம் செய்யும் வந்தே மெட்ரோ ஒரு நாளுக்கு 3-4 முறை பயணம் செய்யும்.

இந்த வந்தே மெட்ரோ ரயிலில் 18-20 பெட்டிகள் வரை இணைக்கப்படுகின்றன. வழக்கமான வந்தே பாரத் ரயில் அனைத்து பயணிகளும் அமர்ந்து பயணம் செய்யும் இருக்கை வசதிகள் கொண்டதாக உள்ளது. ஆனால் வந்தே மெட்ரோ ரயிலில் ஒரு பெட்டியில் 100 பயணிகள் அமர்ந்து செல்ல முடியும். அதே நேரம் 180 பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்ய முடியும் என்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

vande metro

குறுகிய தூரம் பயணிப்பவர்களுக்கு நின்றுகொண்டே பயணம் செய்வது பெரிய சிரமமாக இருக்காது. அதே நேரம் ரயிலில் அதிகமான பயணிகள் பயணம் செய்ய முடியும் என்பதால் இப்படியாக இந்த ரயில் பெட்டியை உருவாக்கியுள்ளார்கள். மேலும் வந்தே பாரத் ரயில் முழுமையாக ஏசி வசதி கொண்ட ரயிலாக இருக்கும். வந்தே மெட்ரோ ரயிலில் ஏசி வசதிகள் இருக்காது.

இப்படியாக தான் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவிலிருந்து மகித்பூர் ரயில் நிலையம் வரை புதிய வந்தே பாரத் மெட்ரோ ரயில் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின் போது சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிகபட்சமாக 145 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் படி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில் இந்த ரூட்டில் வந்தே பாரத் மெட்ரோ ரயில் தொடர்ந்து இயக்கப்படும் என தெரிகிறது.

vande metro

வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டபோது அது மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது என அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று இந்தியாவிற்கு முதலில் வந்த போது மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பதில்லை. பாதுகாப்பு காரணமாக ரயில்வே நிர்வாகம் வந்தே பாரத் ரயில் அதிகபட்சம் 160 கிலோமீட்டர் வேகத்தில் தான் பயணிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அதே போல இந்த வந்தே மெட்ரோ ரயில் மணிக்கு 145 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருந்தாலும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் போது இதன் வேகம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக 90-110 கி.மீ வேகத்தில் இந்த ரயில் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதிகபட்சமாக இந்த ரயில் 145 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றாலும், இந்த ரயில் முழுவதுமாக 145 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க முடியாது. இந்த 145 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க வேண்டும் என்றால் அதற்கு தகுந்தாற்போல் தண்டவாளங்கள் சூழ்நிலைகள் எல்லாம் ஒத்துவர வேண்டும். அதனால் பெரும்பாலும் வந்தே பாரத் மெட்ரோ ரயில்கள் குறைவான வேகத்திலேயே பயணம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது நிச்சயம் வரவேற்க்க தக்கது தான். தற்போது உள்ள பயணிகள் ரயிலுக்கு மாற்றாக இந்த ரயில் இந்தியா முழுவதும் அறிமுகமானால் நிச்சயம் இது மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் இந்த ரயிலில் பயணம் செய்ய மக்கள் விரும்புவார்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, October 7, 2024, 13:09 [IST]
English summary
Vande metro train 145 kmph trial run kota
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X